எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு சனத்தொகை அதிகரிக்க தொடங்கி விட்டது. 50 வருடங்களிற்கு முன்பு விரும்பியோ விரும்பாமலோ ஒரு குடும்பத்தில் குறைந்து 8 பிள்ளைகளாவது இருக்க வேண்டும்.இந்த எண்ணிக்கையை நிர்ணயித்த பெருமையெல்லாம் அந்த காலத்து அப்பத்தா,பாட்டி களையே சென்றடையும்.தற்போது எத்தனை % என்று தெரியவில்லை.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சில தவறுகள் நேர்ந்த பின் ஆண் பெண்ணையோ அல்லது பெண் ஆணையோ குற்றம் சொல்வதில் எதுவும் ஆகப்போவதில்லை. எதுவும் நம்ம கையில இல்லை.மேலதிகமாக இன்னுமொரு பிள்ளையை பெற்று கொள்ள விரும்பாது கருகலைப்பு செய்கிறார்கள்.இதிலே முற்று முழுதாக பாதிக்கப்படுவது பெண்தான்.
பிறப்புகளை குறப்பதற்காக (BirthControl) பெண்களிற்கு chemicals,drugs போன்றவற்றை உபயோகிப்பதை விட இயற்கை எமக்கு தந்துள்ள வளங்களை கொண்டு ஏன் ஆண்களிடத்திலும் உபயோகிக்க்கூடாது?.(Male Contraception)
HOT Bath
116 degrees தண்ணீரிலே தினமும் 50 நிமிடங்கள் வரை 20 நாட்கள் தொடர்ந்து இருந்து வந்தால் 6 மாதங்களிற்கு நீங்கள் எந்தவித கருத்தடை மாத்திரைகளையும் உபயோகிக்க தேவையில்லை.இந்த ஆய்வு 1950 ம் ஆண்டிலே கண்டுபிடிக்கப் பட்டாலும் இன்று வரை இதை பரந்த அளவில் உபயோகிப்பதாக தெரியவில்லை.
தற்போதய கால நிலைக்கும்,வேலைத்தளத்திலிருந்து வந்த களைப்பிற்கும் இது றொம்ப முக்கியமா என நினைப்பது புரியுதுங்க.
Oleanolic Acid
இதை myrtle என்கின்ற மரத்தின் இலைகளிலிருந்து பெற்று கொள்கிறார்கள்.இந்த மரம் தெற்கு ஆசிய நாடுகளில்தான் கிடைக்கின்றது.எலிகளில் தான் இந்த பரீட்சையை 30 நாட்களிற்கு செய்து இருக்கிறார்கள்.15 நாட்களிற்குள் இவை வளமையான நிலையை அடைந்துவிட்டன.தற்போது ஆபிரிக்காவில் உள்ள ஆண் குரங்குகளை பரீட்சித்து வருகிறார்கள் என்று நினைக்கிறேன்.இன்னும் சில வருடங்களிற்குள் ஆண்களின் உடலிற்குள் பலவந்தமா ஏத்தப் போறாங்க.
Papaya
1970 ம் ஆண்டிலேயே இந்த பப்பாசி பழம்,தற்காலிகமாக பிள்ளை பிறப்பதை தடுக்க (5 மாதங்கள் வரை) உதவுகிறது என்பதை கண்டு பிடித்து விட்டார்கள்.இலங்கை, இந்தியா,பாகிஸ்தான் நாடுகளில் ஆண்கள்,பெண்கள் இருவரும் இதை கருத்தடை மாத்திரைக்கு பதிலாக அதிக அழவில் உபயோகித்து வருகிறார்கள்.இது 100% contraception ஐ தருகிறது. 1/2 பப்பாசி, 3 வாழை பழம், 50 பப்பாசி கொட்டைகளையும் ஒன்றாக மிக்ஸியில் இட்டு அரைத்தபின் தொடர்ந்து 3 மாதங்கள் வரை குடிக்க வேண்டும்.
கருத்தடை மாத்திரையை கொடுத்தமா, இல்லையா என்றில்லாமல் இதை யார் செய்யிறது என நினைக்க தோன்றுகிறது. இருந்தாலும் திருமணமான ஆரம்பத்தில் சில பெண்கள் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை எதிர் நோக்க நேரிடுகிறது.
உங்கள் மனைவி மீது அதிகமாக அன்பானவரா நீங்கள், அப்படியானால் இதையும் Try பண்ணுங்க.
|
No comments:
Post a Comment