இணைய தளங்களில் உலாவும் போது இந்த Cookies கள் நமக்கு தெரியாமலேயே நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. புகுந்து கொண்டு நம் உலவியில் சேமிக்க பட்டிருக்கும் நம்மை பற்றிய தகவல்களை அனைவருக்கும் அனுப்பி விடுகின்றன. இதில் நம்முடைய ரகசிய வங்கி கணக்கு எண்களும், பாஸ்வேர்ட் களும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. ஆகவே இதில் இருந்து நாம் கவனமாக இருக்க ஒரு வழி உள்ளது.
இந்த குக்கீஸ்களை அடிக்கடி நீக்கி கொண்டே இருக்க வேண்டும். எனக்கு மறந்து விடும், என் வேலைகளுக்கு இடையில் எனக்கு செய்ய நேரமிருக்காது என்று கூறுகிறீர்களா. கவலையை விடுங்கள் உங்களுக்காக ஒரு பயனுள்ள நீட்சி உள்ளது இந்த லிங்கில் Vanilla சென்று இந்த நீட்சியை நிறுவி கொள்ளுங்கள்.
- Show Options கிளிக் செய்தவுடன் கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் மேலே உள்ள சிறிய கட்டத்தில் உங்கள் உலவி ஞாபகம் வைத்து கொள்ளவேண்டிய தளங்களை சேர்த்து கொள்ளலாம்.
- கீழே உள்ள Auto delete என்ற கட்டத்தில் டிக் குறியிட்டு பக்கத்தை மூடிவிட்டால் போதும் இனி ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் உங்கள் கணினியில் Cookies அழிக்க படும்.
- இனி நீங்கள் உங்களுக்கு தேவையான இணைய பக்கங்களை மட்டும் White listil ல் சேர்த்து விடுங்கள்.
- Auto delete ஆகும் போது இந்த Whitelist ல் உள்ள cookies அழிக்க படாது மற்றவைகள் அழிக்க பட்டு விடும்.
- Clear Unwandted Cookies என்று கொடுத்தால் நம்முடைய கணினியில் இதற்கு முன்னர் உள்ள அனைத்து குக்கீஸ்களும் ஒரே நொடியில் அழிக்கப்பட்டு விடும்.
- நான் Whitelist ல் இரண்டு தளங்களை சேர்த்து இருப்பதால் அந்த இரண்டு குக்கீஸ்களும் அழிக்க படவில்லை.
- இனி நீங்கள் பாதுகாப்பாக கூகுள் குரோமில் இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்.
|
No comments:
Post a Comment