Tuesday, December 14, 2010

2G –யை விட பெரிய முறைகேடு.. பிராட்பேண்ட் வைமேக்ஸ் ஊழல்..அம்பலம்



வைமேக்ஸ் க்கு தொலைதொடர்புத்துறை உரிமங்களை வழங்கியது.இதை பல தனியார் கம்பெனியினர் பெர்றுள்ளனர்.இவர்கள் மட்டுமில்லாமல் அரசு நிறுவனங்களான எம்.டி.என்.எல் ,பி.எஸ்.என்.எல் ஆகிய இரு நிறுவன்ங்களும் இந்த உரிமங்களை பெற்றுள்ளன.இப்படி வழங்கப்பட்ட உரிமங்களிலும் ஊழல் நடந்து இருப்பதாக இப்போது இப்போது டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த மார்ச்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரசாந்த் சாட்டர்ஜிக்கு இது தொடர்பான தகவல்கள் ஆரம்பத்தில் லேசாக கிடைத்தன.உடனே தொலைதொடர்புத்துறையில் தனக்கு தெரிந்த ஆட்கள் மூலமாக விசாரிக்க ஆரம்பித்தார்.ஆனால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.அதிகாரிகள் சிலரிடம் நேரிடையாக சென்று ,கேள்விகள் கேட்டபோது குறிப்பிட்ட ஆவணங்களை தர மறுத்தார்கள்.இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் இது சம்பந்தமான கேள்வியை கேட்டார்.
வைமேக்ஸ் விநியோகம் தொடர்பாக எந்தெந்த கம்பெனிகளுக்கு டெண்டர் உரிம்ம் தந்தீர்கள்? என்று கேட்டு ,அதற்கு எழுத்து பூர்வமான பதிலை கடந்த மார்ச் 11 ந்தேதி பெற்றார்.

வைமேக்ஸ்  அனுமதியானது நான்கு கம்பெனிகளுக்கு தரப்பட்டுள்ளதுஎன மத்திய தொலை தொடர்புத்துரை இணை அமைச்சர் குருதேஸ் காமத் பதில் தந்து இருந்தார்.
பொதுவாக இணை அமைச்சர்களுக்கு ,துறை சார்ந்த விசயங்களில் முடிவெடுக்க பெரிய அதிகாரம் எதுவும் இல்லை.ஆனால் நாடாளுமன்றத்தில் வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இவர்களை பயன்படுத்திக்கொள்வார்கள்.இந்த அடிப்படையில்தான் தொலைதொடர்புத்துறையின் அமைச்சர் ஆ.ராசாவுக்கு பதிலாக காமத் பதில் அளித்தார்.

நான்கு கம்பெனிகளுக்கு வைமேக்ஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.டெல்லி நொய்டாவை சார்ந்த தெராகாம் லிமிடெட் ,சென்னையை சேர்ந்த டெக் சொல்யூசன்ஸ் லிமிடெட் ,பெங்களூரை சார்ந்த அதீஸ்வார் இண்டியா லிமிடெட் மற்றும் கல்கத்தாவை சார்ந்த அம்புலஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவன்ங்களும் முறையாக பின்பற்றியதால் இவற்றுக்கு லைசன்ஸ் வழங்கப்பட்ட்து.என்றும் அந்த பதிலில் கூறப்பட்ட்து.இதோடு சட்டர்ஜி அமைதியாகி விடுவார் என்று பார்த்த்து தொலைதொடர்பு துறை.

ஆனால் அவரோ விடவில்லை.தரப்பட்ட விவரங்களை வைத்துக்கொண்டு அடுத்த கட்ட விசாரணையில் குதித்தார்.அதன் பிறகு நடந்த்துதான் அதிரடி.!
டேக் சொல்யூசன்ஸ் நிறுவனம்,அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு,தற்போது சென்னையில் ஆழ்வார்பேட்டை மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் கன்சல்டேஷன் நிறுவனமாக இயங்கி வருகிறது.இதே மாதிரி டெல்லி நொய்டா நிறுவனம் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை நிறுவனமாக இருந்து வருகிறது..ஆனால் கொல்கத்தா நிறுவனம் குறித்து எனக்கு அதிக சந்தேகம் ஏற்பட்ட்து.பெயரை பார்த்தாலே ஏதோ ஆம்புலஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்று ஏதோ ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் போன்று இருந்த்து.எனவேஅதன் கொல்கத்தா முகவரியை தேடி சென்றேன்.ஆனால் அந்த விலாசத்தில் இப்படி எந்த நிறுவனமும் இல்லை எ பி.எஸ்.என்.எல் டெண்டர் எடுத்த எடுத்த ஒரு நிறுவனத்தின் குறைந்த தகுதியான விலாசமே உண்மையாக இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஒருவேளை முகவரி மாறி சென்றிருப்பார்களோ என்ற சந்தேகத்தால் கம்பெனி நிறுவன்ங்களுக்கான பதிவுத்துறை மூலமாக விசாரித்தேன்.ஆனாலந்த பெயரில் எங்குமே நிறுவன்ங்கள் பதிவாகவில்லை என்பது தெரிய வந்தது.உடனே இந்த தகவல்களை ,பிரதமர் மன்மோகன்சிங் கவனத்துக்கு கொண்டு செல்ல கடிதம் அனுப்பினேன்.

விதிமுறைகளின் படி இந்த வைமேக்ஸ் உரிமம் பெறும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தகுதி தேவை.இந்த நிறுவன்ங்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு 100 கோடி வரை வரவுசெலவு செய்து இருக்க வேண்டும் என்பது போன்ற தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.ஆனால் கொல்கத்தா கம்பெனிக்கு முகவரியே இல்லை.இது குறித்து விஜிலென்ஸ் விசாரணை நட்த்த வேண்டும் என்று அந்த கடித்த்தில் கூறினேன்.பிரதமரிடம் இருந்து உடனடியாக பதில் இல்லை.ஆனால் கடிதம் எழுதி விவரம் கேட்ட என்னுடைய பின்னணி தெரியாமல்.,என் கடித்த்தை உதாசினப்படுத்தினார்கள்.

நான் கொல்கத்தாவில் மேயராக இருந்தவன்.எனக்கு அந்த ஊரில் முக்கியமான இடங்கள் அனைத்தும் அத்துபடி.நான் தொடர்ந்து விசாரணை செய்தேன்.வைமேக்ஸ் உரிமத்தை உரிமத்தை சிலர் பினாமி பெயரில் வாங்கியிருக்கின்றனர் என கண்டுபிடித்தேன்.தொலைதொடர்பு அமைச்சகத்தின் உதவியில்லாமல்,இந்த முறைகேட்டை யாரும் செய்திருக்க முடியாது.
ஆம்புலஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம்தான் பின்னர் ஸ்டார்நெட் கம்ப்யூனிகேசன்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் யார்?
இவை எப்படிப்பட்ட நிறுவனங்கள்?இவர்களின் நிதி நிலமை என்ன?
இவர்கள் எப்படி பொது மக்களுக்கு இந்த சர்வீஸை தொடருவார்கள்?
என்பதற்கு எல்லாம் எந்த விதமான பதிலும் இல்லை.

இவற்றையொட்டி பிரதமருக்கு ஏற்கனவே எழுதிய இரண்டு கடிதங்களுடன் மீண்டும் கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதி உள்ளேன்.மூன்று கடிதங்களுக்கும் பிரதமரிடம் இருந்து பதில் இல்லை.இதனால் இப்படிப்பட்ட பல ஊழல்கள் தொலைதொடர்பு துறையில் இருப்பதால்தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என கேட்கிறோம்..”’

No comments:

Post a Comment