பாட்டு கேட்க ஒரு நல்ல இணைய தளம் என்று சொல்வதை விட சிறந்த பழைய பாடல்கள் கேட்க சிறந்த தளம் இது
அதிலும் பி பி ஸ்ரீநிவாஸ் எ எம் ராஜா ஜிக்கி போன்றவர்களின் ஓஹோ எந்தன் பேபி முதல் ஆடாத மனமும் ஆடுமே போன்ற பாடல்கள் பாடல்கள் வந்த ஆண்டு வாரியாக பாடகர்கள் வாரியாக,படங்கள் வாரியாக என நமக்கு தேவையான வகையில் நல்ல பாடல்கள் கேட்கலாம்
அதிலும் இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒவ்வொரு ஆண்டு வாரியாக கேட்க்கும் போது இசை மேதையின் இசை உழைப்பை நினைத்தால் பிரமிப்பாக இருக்கு அதிலும் எனக்கு ரொம்ப நாள்களாக தேடிய கரையெல்லாம் செண்பகபூ ,நண்டு ,கன்னித்தீவு ,கரும்பு வில் போன்ற இளையராஜா அவர்களின் பாடல்கள் ஆண்டு வாரியாக கேட்க்க சூப்பர்
மற்றும் நமக்கு பிடித்த பாடல்களை ப்ளே லிஸ்டில் வரிசைபடுத்தி நமக்கு பிடித்த பாடல்கள் மட்டும் எடுத்து நமக்கு தேவையான நேரத்தில் கேட்கலாம்
அதிலும் இந்த இணையத்தில் 1939 தொடங்கி இன்று வரை எல்லா பாடல்களும் கேட்டும் வசதி உள்ளது
இணையதளத்தில் நமக்கு பிடித்த பாடல்கள் எல்லாம் கேட்க சிறந்த தளம் இது
திரைப்பாடல்.காம் செல்ல இதை அழுத்தவும் நண்பர்களுக்கு கூற
குழந்தைகளுக்கு ஏற்ற ஓவிய கலரிங் இணையம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
சிறுவர் சிறுமியர்க்கு ஓவியங்களுக்கு ஏற்ற முறையில் வர்ணம் பூசுதல் என்பது சந்தோஷம் தரும் விஷயம்
வாட்டர் கலர் பென்சில் க்ரேயான் என பல முறையில் அவர்களுக்கு ஏற்ற முறையில் வர்ணம் பூசுவது அவர்களுக்கு சந்தோஷம் தருவதுடன் அவர்களுக்குள் இருக்கும் கலை திறமை வெளிவர உதவும் பக்கம் கூட அது
பேப்பரில் அவர்கள் வர்ணம் பூச செலவு ஆவதுடன் மறுமுறை வேறு நிறம் மாற்ற முடியாது மற்றும் அடிக்கடி கலரிங் புக் வாங்க கூட செலவு செய்ய வேண்டும்
இந்த இணைய உலகில் அதற்க்கு ஏற்ற ஒரு சிறந்த் இணையதளம் இது இதில் பல பிரிவுகளில் பல்வேறு படங்கள் மற்றும் நாம் வர்ணம் பூச எதுவாக வர்ணம் இல்லாமல் நகல் எடுக்கும் வசதி இதில் உள்ளது
நமக்கு தேவையான படங்களை பிரிண்ட் எடுக்கலாம்
இணையம் பயன்படுத்தும் போதே சிறந்த முறையில் வர்ணம் பூசி நாம் விரும்பும் நண்பர்களுக்கு அனுப்பலாம்
மற்றும் மற்றவர்கள் பயன்படுத்திய கலரிங் ஓவியங்களை பார்க்கலாம்
இதன் மூலம் நம்மை விட மற்றவர்கள் சிறப்பாக கலரிங் பூசி இருந்தால் மீண்டும் நாம் இன்னும் சிறப்பாக பூச மயற்சி செய்யலாம்
நான் வர்ணம் கலரிங் செய்ததது
இந்த இணையத்தில் பதிவு செய்து பயன்படுத்தலாம் பதிவு செய்யாமல் கூட பயன்படுத்தலாம்
www.coloring.com சிறப்பான இந்த இணையத்தை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்
|
No comments:
Post a Comment