Tuesday, December 14, 2010

மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம்.


மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய கவிதை ஒன்றை பெண்களும் குழந்தைகளும் படிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் தினமலர் பத்திரிக்கையில் ஒருவர் பொங்கி எழுந்திருக்கிறார்.

பெண்:
கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை------------- என்று தொடர்கிறது கவிதை ..........

ஆண் ஆரம்பிக்கிறான். அவன் பெண்ணின் மனநிலையை பேசுகிறான்.

ஆண்:

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையில்
கூட நின்றவன் உதவிட வேண்டும்----------என்று தொடர்கிறது கவிதை...........

இப்போது நாம் பேசுவோம். ஒரு விஷயம் மோசமாக இருந்தால் அதனை ஒட்டு மொத்த சமூகமே வெறுத்து ஒதுக்க வேண்டும் எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கே கட்டுரையாளர் “பெண்களும், குழந்தைகளும்’ படிக்க வேண்டாம் என்கிறார். அதாவது ஆண்கள் மட்டும் படிக்கலாமாம். ஆண்களும் பெண்களும் சம்பந்தப்பட்ட கலவியலை ஆண்கள் மட்டும் பேச வேண்டுமாம்.

இவ்வாறு ஆணாதிக்கத் திமிறுடன் பேசுகிற தினமலரின் வியாபார நியாயம் என்ன?. பெண்கள் குறித்த உடல் இச்சையை புளோஅப் படங்களாகப் போட்டு காசாக்குவதுதானே?. உடல் இச்சையைக் கிளப்புகிற காட்சிகளும், பாடல்களும் எவ்வளவோ தமிழ்த் திரைப்படங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அப்போதெல்லாம் வேர்க்காத, விறுவிறுக்காத தினமலர் மேற்கண்ட கவிதையில் காமத்தை மோப்பம் பிடிப்பதுதான் விந்தை.

No comments:

Post a Comment