நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப்கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர்.
டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் சூழ்நிலைக்கும் லேப்டாப் பயன்படும் சூழ்நிலைக்கும் பலத்த வித்தியாசம் உள்ளது. பயன்படுத்தப்படும் வகையிலும் வேறுபாடான நிலைகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.
1. எந்த அளவிற்கு வெப்பம் வெளிவருகிறதோ அந்த அளவிற்கு லேப்டாப்பின் ஏதேனும் ஒரு பகுதி பிரச்னை கொடுக்கலாம். லேப்டாப்பை தொடர்ந்து மெத்தையில் வைத்தோ அல்லது தலையணையை சப்போர்ட்டாக வைத்தோ பயன்படுத்தி வந்தால் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பம் வெளியாவதற்குத் தரப்பட்டிருக்கும் துளைகளை மூடிவிடுகிறோம். இதனால் வெப்பம் வெளியேறும் வாய்ப்பின்றி உள்ளே இயங்கும்உறுப்புகளைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.
டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளது போல கேபின் உள்ளே பேன்களைச் சுழலவிட்டு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியேற்ற முடியாது. எனவே வெளியே இருந்தவாறே இயங்கும் சிறிய பேன்கள் லேப் டாப் கம்ப்யூட்டருக்கென்றே கிடைக்கின்றன. இவற்றை வாங்கி இணைத்துப் பயன் படுத்தலாம். இவை பெரு ம்பாலும் யு.எஸ்.பி. யில் இணைத்து இயக்கலாம். லேப்டாப்பில் எங்கெல்லாம் வெப்பம் வெளிவரத் துளைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அதிக வேகமாக காற்று பீய்ச்சி அடிக்கும் சாதனம் மூலம் தூசியை வெளி யேற்ற வேண்டும்.
2. எந்த கம்ப்யூட்டரிலும் ஹார்ட் டிஸ்க் தான் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கும் சாதனமாகும். சிறிய பிளாட்டர்கள், ரீட்/ரைட் ஹெட்கள் மற்றும் அதனுள்ளே அமைந்திருக்கும் நகரும் சிறிய உறுப்புகள் ஆகியவை நம் இதய இயக்கத்திற்கு ஒத்ததாகும். ஏதேனும் பலத்த அதிர்ச்சி, தட் என்று லேப்டாப்பை மெத்தையின் மீது போடுவது போன்ற செயல்கள் இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கத்தை நிறுத்தலாம்.
இதன் இயக்கத்தில் ஏற்படும் வெப்பமும் வெளி யேற்றப்பட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அண்மைக் காலத்தில் சாலிட் ஸ்டேட் எனப்படும் ஹார் ட் டிஸ்க்குகள் வெளிவந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிரைவ்களில் நகரும் உறுப்புகள் இல்லை. பிளாஷ் மெமரி பயன்படுகிறது. எனவே மிக மிகக் குறைந்த அளவிலே தான் வெப்பம் வெளிப்படுகிறது. மேலும் இவை அதிர்ச்சி, அதிக பட்ச சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. தற்போது இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விரைவில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். அப்போது இவற்றையே ஹார்ட் டிரைவாக வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
3. வேலை பார்த்தபின் அலுவலகத்திலிருந்து லேப் டாப்புடன் வருகிறீர்கள். படுக்கை அறையில் உள்ள மெத்தையில் பொத்தென்று அதனை வைக்கிறீர்கள். அது சிறிது மேலே எழும்பி கீழே விழுகிறது. அதன் பின் அய்யோ அம்மா என்று கத்தி என்ன பிரயோஜனம். லேப்டாப் கம்ப்யூட்டரை எப்போதும் முட்டைகள் அடங்கிய பையைக் கொண்டு வருவது போல் கொண்டு வர வேண்டும். எனவே லேப்டாப் நிறுவனம் தந்துள்ள பையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையும் கவனமாக மெதுவாகப் பயன்படுத்த வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு தரும் பை ஒன்றைப் பயன்படுத்தலாம்.
பை இல்லாமல் லேப் டாப்பைத் தூக்கிக் கொண்டு வருகையில் அதன் மீது அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு சிலர் பையின் உள்ளே உள்ள சிறிய அறைகளில் பைல்கள், தாள்கள், பேனாக்கள், மொபைல் போன் சார்ஜர்கள் என இன்றைய காலத்தில் எப்போதும் தேவைப்படும் சில சாதனங்களை திணித்து எடுத்து வருவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
4. எப்படி மரணமும் அரசு விதிக்கும் வரிகளும் உறுதியானவையோ அதே போல பேட்டரிகள் ஒரு காலத்தில் தன் பவரை இழந்துவிடும் என்பதுவும் உறுதியே. எனவே பயன்படுத்த பயன்படுத்த இவை ஒரு காலத்தில் மொத்தமாகத் தன் திறனை இழக்கும். பல்வேறு கணக்கீடுகளின்படி சராசரியாக ஒரு பேட்டரி அதிக பட்சம் 500 முறை சார்ஜ் செய்திடும் வரையே சரியாகச் செயல்படுகிறது. 18 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வரலாம். அதன்பின் வேறு பேட்டரிதான் போட வேண்டும். பேட்டரி பவரில் லேப் டாப்பினைப் பயன்படுத்துகையில் லோ பேட்டரி சிக்னல் வரை பயன்படுத்தி பின்னர் சார்ஜ் செய்திடவும். எப்போதும் பேட்டரியிலிருந்து இது போன்ற சிக்னல் வருகையில் சார்ஜ் செய்வதே நல்லது.
5. லேப் டாப்பினை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க வேண்டாம். இந்த நிலையிலும் பேட்டரி திறன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குப் பதிலாக லேப்டாப்பினை ஷட் டவுண் செய்து பின் மீண்டும் இயக்கலாம்.
|
No comments:
Post a Comment