Saturday, April 23, 2011

மனம்+: கணிப்பொறி மற்றும் இணைய பயன்பாடு அடிமைப் பழக்கம்


இன்றைய உலகில் இணையப் பயன்பாடு என்பது அதிகமாகி விட்டது. ஒவ்வொருவரும் தங்களது தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ப கால அளவில் பயன்படுத்துகின்றனர். சிலர் இந்த இணையதளங்களில் நீண்ட நேரம் செலவிடுவார்கள். அதை பயன்படுத்தாமல் அவர்களால் இருக்க முடியாது. அதற்கு அடிமையாகி போகிறார்கள். இது கிட்டதட்ட ஒரு போதை பழக்கம் போலத்தான்.

இணைய அடிமை பழக்கம் ஒரு வியாதி அல்ல. எனினும், சிலருக்கு இதனால் கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம். நான் இங்கே இணையப் பழக்கம் என்பது இணையதளங்களை மட்டும் பயன்படுத்துவதை குறிப்பிடவில்லை. விளையாட்டுக்கள், மற்ற விஷயங்கள் என கணிணியிலேயே மூழ்கி இருப்பதையும் இது குறிப்பிடுகிறது.


இந்தப் பழக்கம் சில வருடங்களாகத் தான் அதிகமாகி வருகிறது. அதற்கு MySpace, Facebook, அல்லது Twitter போன்ற சமூக வலைத்தலங்களும் Email, online chat போன்றவைகளும் கூட காரணமாகும். (இங்கே பிளாக்கிங்கை கூட சேர்த்துக் கொள்ளலாம்).

இந்த அடிமைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளாவன: கவலை மிகுதியாகும். இதனால் anxiety disorder எனப்படும் மன அழுத்த நோய் ஏற்படலாம். அதிக தனிமை உண்டாகும். சூதாட்டம், செக்ஸ் போன்ற பழக்கங்கள் (மது, போதை மருந்துகள் பழக்கம் கூட) உண்டாகலாம். சமூக உறவும் பழக்கமும் குறைகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் சில உடல் சார்ந்த நோய்களும் ஏற்படலாம். pornography மற்றும் cybersex ஆகியவை இந்த இணையப் பழக்கத்தால் உண்டாகும் முக்கிய தீமையாகும். இதற்கு அடிமையானாலும் மேற்கண்ட பிரச்சினைகள் உண்டாகும்.

இந்த இணைய அடிமைப் பழக்கத்தை கண்டறிய ஒரு சோதனை:



TIME PASS







No comments:

Post a Comment