Saturday, April 23, 2011

'Session Expired'




மிகப் பிரியமான இன்டர்நெட்பிரவுசிங்கில்அடிக்கடி "Session Expired"என்ற செய்திகிடைத்து நம்ஆர்வத்தைக் கெடுக்கும்.நமக்கோஒன்றும் புரியாதுஆர்வம்அதிகம்இருந்தால் மீண்டும் முதலில்இருந்து அந்ததளத்தைத் திறந்துஒவ்வொரு லிங்க்காகக்கிளிக் செய்துவருவோம்.

இந்த பிரச்சினைக்கு நம் பிரவுசர்தான்காரணம் என்று பலரும்எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.எதனால் இந்செய்தி கிடைக்கிறது எனஇங்குபார்க்கலாம்.



1. பிரவுசிங்கை விட்டுச் செல்லல்நீங்கள் அடிக்கடி பிரவுஸ் செய்திடும் தளத்தைத்திறந்துஉங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில் வேறுஒருவேலைக்காக கம்ப்யூட்டர் மற்றும் பிரவுசிங்கை விட்டு விட்டு நீங்கள்செல்லவேண்டியதிருக்கலாம்மீண்டும் வந்து பார்க்கின்ற போது "Session Expired" என்றசெய்திதிரையில் கிடைத்துக் கொண்டிருக்கும்.


எந்த விதமான செயல்பாடும் இன்றி இணையதளத்தைத் திறந்துவைத்திருந்தால்தானாகவே மூடும்படி அந்த தளத்தைத் தயாரித்தவர்கள் வடிவமைத்திருக்கலாம்அதன்எதிரொலியே இதுஎத்தனை நொடிகள் இவ்வாறு செயலற்றுஇருந்தால் அந்த தளம் இந்தசெய்தியைக் கொடுக்கும் என்பதனைப் பொதுவாகவரையறுக்க முடியாதுஇது அந்ததளத்தை வடிவமைத்தவர்கள் செய்தவரைமுறையாக இருக்கலாம்.

2. குக்கீஸ்சில தளங்கள் தங்க ளிடம் முறையாகப் பதிவு செய்யாதவர் கள்தளத்தைப்பார்க்க சில நிமிடங்களே அனுமதி தரும்அந்த நேரம் முடிந்துவிட்டால்தானாகத் தளம்மூடப்பட்டு "Session Expired" செய்தி கிடைக்கும்மேலும் சில தளங்கள்குக்கீஸ் எனப்படும்குறுந்தகவல் தொகுப்புகளை அனுமதிக்க வேண்டும் எனஎதிர்பார்க்கும்.


அப்போதுதான் அடுத்த முறை நீங்கள் அந்த தளத்தை அணுகுகையில் உங்களைப்பற்றியதகவலை அந்த தளம் அறிந்து கொண்டு உங்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும்.எனவே குக்கீஸ் பெறுவதனை நீங்கள் தடுக்கும்படி செட்செய்திருந்தால் மாற்றிவிடவும்.இதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று அதில் Privacy டேப் கிளிக்செய்திடவும்பின் கிடைக்கும் திரையில் Defaultஎன்னும் பட்டனைக் கிளிக் செய்தால்குக்கீஸ் பெறுவது அனுமதிக்கப் படும்.



3. பயர்வால்கம்ப்யூட்டரில் பயர்வால் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் நீங்கள்பார்த்துக்கொண்டிருக்கும் இணைய தளம் தானாகவே மூடும் வாய்ப்பு உண்டு.ஏனென்றால்பயர்வால் செட்டிங்ஸ் சில தளங்களை இறக்கம் செய்து பார்க்கவிடாது.இதனால் பிழைச்செய்தி கிடைக்கலாம்இதற்கு உடனே பயர்வால் செட்டிங்ஸ் பார்த்துதிருத்தவும்நீங்கள்விரும்பிப் பார்க்கின்ற தளங்களை பயர்வால் அனுமதிக்கும் படிபயர்வால் செட்டிங்ஸைமாற்றவும்.




4. தவறான நாளும் நேரமும்சில வேளைகளில் தவறான நாள்தேதி மற்றும்நேரத்தைஉங்கள் கம்ப்யூட்டர் காட்டிக் கொண்டிருந்தால் அதனாலும் "Session Expired"செய்தி வரலாம்.ஏனென்றல் சில தளங்கள் பின்புலத்தில் உங்கள் கம்ப்யூட்டரின்நேரத்தோடு இணைந்து சிலபுரோகிராம்களை இயக்கிக் கொண்டிருக்கலாம்இதனால்தவறானநடவடிக்கைகளுக்குள்ளாகி செஷன் எக்ஸ்பயர் ஆக வாய்ப்புண்டு.



5. தளத்தில் வேறு பிரச்னைகள்மேலே குறிப்பிட்ட எதுவுமின்றி இணையதளத்தில்எக்ஸ்பயர் செய்தி வருகிறதென்றால்அதுவும் குறிப்பாக ஒரு தளத்திற்காகவருகிறதுஎன்றால் அந்த தளத்தில் பிரச்னை உள்ளது என்று பொருள்அந்ததளத்தைபுதுப்பிப்பதற்காக இயக்கத்தை நிறுத்தி வைத்திருக்கலாம்அல்லது அந்ததளத்தைக்கொண்டிருக்கும் சர்வர் இணைய வலையிலிருந்து விடுபட்டிருக்கலாம்.

அல்லது அந்த சர்வரில் பிரச்னை ஏற்பட்டு பராமரிப்புக்காக சர்வரின்இயக்கம்நிறுத்தப்பட்டிருக்கலாம். "Session Expired" என்ற பிரச்னை முற்றிலும் இணையதளம்மற்றும் அந்த தளத்தைத் தாங்கிக் கொண்டு வழங்கும் சர்வர் சார்ந்தபிரச்னைஆகும்.எனவே உங்கள் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் சரி செய்வதனால் இதுநிவர்த்திஅடையாது.

எனவே இந்த செய்தி வரும் பட்சத்தில் பொறுமையாக உடனே அல்லது சிலநிமிடங்கள்கழித்து மீண்டும் அதனைப் பெற முயற்சிப்பதுதான் சிறந்த வழியாகும்.

No comments:

Post a Comment