சமூக இணையத்தளமான பேஸ்புக் உரிமையாளர்கள் பேர்ஸன் மாஸ்டெல்லர் என்ற நிறுவனத்தின் சேவையை இதற்கெனப் பெற்றுள்ளனர்.
கூகுள் நிறுவனம் பற்றி எதிரிடையான செய்திகளை பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்வதே இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டப் பணி.
இந்த நிறுவனம் போக்லாந்து யுத்தத்தின் போது ஆர்ஜன்டீன ஆட்சியாளர்களை பிரதிநிதித்துவம் செய்த நிறுவனமாகும்.
வாசிப்போர் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் வகையில் கூகுளின் சமூக வட்ட சேவை தொடர்பான கதைகளை இந்த நிறுவனம் வெளியிட்டது.
கூகுளின் சமூக இணையத்தளம் (சோஷியல் சேர்கள்) வாடிக்கையாளர்களின் இரகசியங்களை மீறிவிட்டது என்ற அடிப்படையில் தான் இந்தப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பேஸ்புக்கிற்கு நேரடி சவால் விடுக்கக் கூடிய ஒரு சமூக இணையத்தளமாக இருப்பது கூகுளின் சோஷியல் சேர்கள் மட்டுமே.
வாடிக்கையாளர்கள் படங்கள், வீடியோக்கள் உட்பட பல்வேறு தகவல்களை இதில் தரவேற்றம் செய்ய முடியும். பேஸ்புக்கில் இருந்து அங்கீகாரமற்ற முறையில் தரவுகளையும், ஏனைய சேவைகளையும் இது பெற்றுக் கொள்வதாக பேஸ்புக் குற்றம்சாட்டியிருந்தது.
பேஸ்புக்கால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பாக ஒரு குறிப்பை எழுதுவதற்கு அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணி ஒருவரை நாடியுள்ளது.
வாஷிங்டன்போஸ்ட் உட்பட பிரபல பத்திரிகைகளில் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க எழுதுமாறு கேட்டு அவரை நாடியுள்ளது. அவர் இந்த முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியபோது மேற்படி நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது.
அதனையடுத்து அந்த சட்டத்தரணி இது தொடர்பான ஈ மெயில் தொடர்புகளை இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
அதனையடுத்தே பேஸ்புக்கின் குட்டு அம்பலமாகியுள்ளது.
|
No comments:
Post a Comment