Showing posts with label ATM. Show all posts
Showing posts with label ATM. Show all posts

Saturday, July 9, 2011

கிரிடிட் கார்டுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்

உங்கள் கிரிடிட் கார்டுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள் மற்றும் மோசடிகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?


மாதம்தோறும் வரும் கிரிடிட் கார்டு ஸ்டேட்மெண்டுகளை நம்மில் எத்தனை பேர் படிக்கிறோம்? அல்லது எத்தனை பேருக்கு படித்துப்பார்க்க தெரியும்?

பதிலென்னவோ நெகடிவ் தான்.

காரணம்?

அதை படிப்பதில் ஆர்வமின்மை; அல்லது அதில் சொல்லப்பட்டுள்ள அர்த்தம் புரியாத வார்த்தைகள்.

வெகு சிலரே கிரிடிட் கார்டு ஸ்டேட்மெண்டுகளை முழுவதும் படிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

கிரிடிட் கார்டுகளைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால், பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இதோ கிரிடிட் கார்டுகளைப்பற்றி உங்களுக்காக!

கிரிடிட் கார்டு எண் (Credit card Number):

இது உங்களது பிரத்தியேக எண். இந்த 16 இலக்க எண் கிரிடிட் கார்டின் முகப்பில் சூப்பர் இம்போஸிங் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்டின் அனைத்து பயன்பாடுகளுக்கும் இந்த எண்ணே பிரதானம் என்பதால், இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பது அவசியம்.கார்டு தொலைந்து போனால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் செய்ய, கார்டு எண்ணைத்தான் நீங்கள் முதலில் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, கிரிடிட் கார்டு எண் உடனடியாக நினைவுக்கு வரவில்லை எனில், இது கிரிடிட் கார்டு ஸ்டேட்மென்டிலிருந்து உங்களுக்கு கிடைக்கும். ஸ்டேட்மென்டில், பளிச்சென்று தெரியும் வகையில் ஒரு பிரதான இடத்தில் இந்த எண் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.

கிரிடிட் லிமிட் (Credit limit ):

இது தான் உங்களது கடன் பெறும் திறன் எனப்படுவது. அதாவது, கார்டை வழங்குகிற வங்கி அல்லது நிறுவனம் எந்த அளவுக்கு உங்களுக்கு கடன் தர இயலும் என்பதைத்தான் இது குறிப்பிடுகிறது. இந்த அளவை அவர்கள் எவ்வாறு வரையறை அல்லது நிர்ணயம் செய்கிறார்கள்? அதற்கான அளவுகோல்கள் என்னென்ன?

உங்களது மாத வருமானம்

கடனை திரும்ப செலுத்தும் திறன்

இதற்கு முன் கடன் பெற்ற இடங்களில் தடையின்றி சரியாக திரும்பச் செலுத்தியிருக்கிறீர்களா?

இந்த மூன்று விஷயங்களின் அடிப்படையில் தான் உங்களது கடன் பெறும் தகுதியை வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன.

மேற்சொன்ன மூன்றும், உங்களது கிரிடிட் லிமிட்டை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும் தன்மை படைத்தவை.

வங்கிகள், உங்களுக்கு அனுமதிக்கும் இந்த கிரிடிட் லிமிட்டை இரண்டு பிரிவாக பிரிக்கின்றன.

அதாவது, உங்களது மொத்த கிரிடிட் லிமிட்டில் 70 சதவீதத்தை பொருட்கள் வாங்குவதற்கும் மீதமுள்ள 30 சதவீதத்தை வங்கிகளின் ஏ.டி.எம்.களிலிருந்து ரொக்க பணமாக பெற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரொக்கமாக பணம் பெறும் பிரிவில், பெறுகிற பணத்திற்கு 2.50 முதல் 3.00 சதவீதம் வரை டிரான்ஸாக்ஷன் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்த வசதிக்கு வட்டி வீதமும் அதிகமென்பதால் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொள்வது நல்லது.

வங்கிகள், தங்களது கிரிடிட் கார்டு ஸ்டேட்மென்டுகளில் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கிரிடிட் லிமிட், அதில் 'பொருட்களாக வாங்குவதற்கு எவ்வளவு? ரொக்கக்கடனாக பெறுவதற்கு எவ்வளவு?' என்கின்ற தகவல்களையும்; ஒவ்வொரு பிரிவிலும் ஸ்டேட்மெண்ட் தேதிப்படி எவ்வளவு பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதைனையும், இன்னும் பயன்பாட்டிற்கு எவ்வளவு மீதமுள்ளது என்பது குறித்த தகவல்களையும் தெளிவாக கூறுகின்றன.

ஒருவேளை, இந்த கிரிடிட் லிமிட்டை தாண்டி உங்கள் பயன்பாடு இருக்குமானால், இது போன்ற அதிகப்படியான பயன்பாட்டிற்கு வங்கிகள் அதிக வீதத்தில் வட்டி வசூல் செய்யலாம்.

சரி, கிரிடிட் லிமிட்டை கடந்து எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்றால், அதற்கும் வங்கிகள் ஒரு எல்லையை வைத்திருக்கிறன.

அந்த எல்லை எது என்பதனை வங்கிகள் பெரும்பாலும் உங்களுக்கு தெரிவிப்பதில்லை.

இந்த எல்லை மீறுதலை அனுமதிக்க மறுக்கும் உரிமையையும் வங்கிகள் தங்கள் வசமே வைத்துள்ளன.

அவைலபிள் கிரிடிட் லிமிட் (Available credit limit):

அனுமதிக்கப்பட்ட கிரிடிட் லிமிட்டில் இதுவரை பயன்படுத்தியுள்ளது போக தற்போது மீதியுள்ளது என்று பொருள்.

உதாரணமாக, உங்களது கிரிடிட் லிமிட் ரூ 1 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இதுவரையிலும் ரூ 80 ஆயிரம் செலவு செய்திருந்தால் தற்போது மீதமிருக்கும் ரூ 20 ஆயிரம் தான் 'அவைலபிள் கிரிடிட் லிமிட்' என்று குறிப்பிடப்படுகிறது.

பேமென்ட் டியூ டேட் (Payment Due Date ):

ஒவ்வொரு மாதமும், நீங்கள் கிரிடிட் கார்டுக்கான தவணையை செலுத்த வேண்டிய தேதி இது. அதாவது, இந்தத்தேதியில் வங்கிக்கு உங்கள் காசோலை அல்ல, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பணம் சென்று சேர்ந்திருக்க வேண்டிய தேதி. உங்களது காசோலை வங்கியால் பணமாக்கப்படுகின்ற தேதி தான் இந்த பேமென்ட் டியூ டேட் என்பதனால், இந்த தேதியில் பணமாக்கத்தக்க வகையில் உங்களது காசோலை முன்னதாகவே வங்கியை சென்றடையும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேட்மெண்ட் டேட் (Statement Date)

நீங்கள் கடந்த ஒரு மாதமாக வாங்கிய பொருட்களின் பில்களுக்கான பட்டியல் இது. இதில் உங்களது பயன்பாடு தேதி வாரியாக பட்டியலிடப்படுகிறது. எங்கெங்கெல்லாம் எப்போதெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

அது மட்டுமல்ல, வட்டி; கிரிடிட் கார்டுக்கான ஆண்டு கட்டணம்; தாமதத்திற்கான அபராத வட்டி இவையெல்லாமே கூட இந்த பட்டியலில் இடம் பெறுகிறது. இதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து தகவல்களுமே சரியானவையா என்பதனை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

ஏதேனும், தவறான கட்டணங்களோ, பயன்பாடு பில்களோ காணப்படுமானால், அது குறித்து உடனடியாக புகார் செய்ய வேண்டும்.

மொத்த நிலுவை தொகை (Total amount Due):

மொத்த நிலுவை தொகை என்பது குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பெற்றுள்ள மொத்த கடன், அதன் மீதான வட்டி, அபராத வட்டி (பொருந்துமெனில்) இன்னும் என்னென்ன கட்டணங்கள் உண்டோ அனைத்தும் சேர்ந்தது.

குறைந்தபட்சம் செலுத்த வேண்டிய தொகை (Minimum Amount Due ):

ஒவ்வொரு மாதமும், மொத்த கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் திரும்ப செலுத்தலாம். அந்த குறைந்த பட்சம் செலுத்த வேண்டிய தொகை என்பது, மொத்த கடன் தொகையில் 5 சதவீதம். இந்த குறைந்தபட்ச தொகையை மேலே சொன்னபடி சரியான தேதியில் கட்டத்தவறினால், வங்கிகள் தாமதத்திற்கென அபராத வட்டி வசூல் செய்கின்றன. நீங்கள் குறைந்த பட்ச தொகையை மட்டுமே செலுத்துகிறீர்கள் என்றால் மீதமுள்ள நிலுவைத்தொகைக்கு வங்கி வட்டி வசூல் செய்கிறது. இந்த வட்டி வீதம் மிகவும் அதிகமென்பது நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அப்படி ஒவ்வொரு மாதமும் வட்டி மேல் வட்டி என்பது உங்கள் மீது பெரும் சுமையாக வளர்ந்து கொண்டே போகலாம்.

எப்படி தெரியுமா?

நீங்கள் குறைந்த பட்ச தொகையை மட்டுமே செலுத்துகிறீர்களென்றால், இந்த வங்கிகள் மறுபடியும் வட்டியை மொத்த நிலுவைத்தொகைக்கே கணக்கிடுகின்றன.

உதாரணமாக, ஒரு மாதம் நீங்கள் மொத்த நிலுவை தொகையில் 60 சதவீதத்தை திரும்ப செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் கடந்த முறை கட்டாமல் விடப்பட்ட 40 சதவீதத்துக்கு மட்டும் தானே வட்டியை கணக்கிட வேண்டும். ஆனால், மாறாக 100 சதவீதத்துக்குமே வட்டி கணக்கிடப்படுகிறது. இந்த வகையில், கடந்த மாதம் நீங்கள் செலுத்திய குறைந்த பட்ச தொகைக்கும் சேர்த்து மீண்டும் வட்டி செலுத்த வேண்டியவராகிறீர்கள்.

இதைத்தான் 'கடன் சுமையாக வளர்ந்து கொண்டே போகலாம்' என்று மேலே குறிப்பிட்டிருந்தோம்.

ரிவார்டு பாய்ண்டுகள் (Reward Points):

கிரிடிட் கார்டுகளை அதிக அளவில் நீங்கள் பயன்படுத்தும்படி உங்களை தூண்டுவதற்காக வங்கிகள் கையாளும் வியாபார யுக்தி தான் இந்த ரிவார்டு பாய்ண்டுகள். ஒவ்வொரு முறையும் நீங்கள் கார்டை பயன்படுத்துகிற அளவை பொறுத்து இந்த ரிவார்டு பாய்ண்டுகள் கணக்கிடப்படுகின்றன. உங்களிடம் சேர்ந்துள்ள ரிவார்டு பாய்ண்டுகளை, நீங்கள் அவர்கள் தருகிற ஏதேனும் பொருள்களுக்கு மாற்றிக்கொள்ளலாம். எவ்வளவு பாய்ண்டுக்கு என்ன பொருளை நீங்கள் பெறலாம் என்று அவர்கள் ஒரு பட்டியலை வைத்துள்ளனர். ஸ்டேட்மென்டில், கடந்த மாதம் எவ்வளவு பாய்ண்டுகள் இருந்தன தற்போது எவ்வளவு பாய்ண்டுகள் பெற்றுள்ளீர்கள்? எவ்வளவு பாய்ண்டுகளை நீங்கள் பொருட்களாக மாற்றிக்கொண்டுள்ளீர்கள்? மீதமுள்ள பாய்ண்டுகள் எவ்வளவு?' என்ற தகவல்களும் கார்டு ஸ்டேட்மெண்ட்டில் தவறாமல் இடம் பெறுகின்றன.

ஆகவே, அடுத்த முறை கார்டு ஸ்டேட்மெண்ட் வந்ததும் அனைத்தையும் படித்துப்பாருங்கள். மோசடிகளை தடுக்கவும் தவறுகளை கண்டுபிடித்து சரி செய்யவும் ஆபத்துக்களிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளவும் இது உதவும்.

ATM : ஒரு கிட்டப்பார்வை - அப்டியா?

பொருளாதாரம் தேயும் சமயங்களில் விரக்தியில் அனேகம் பேர் சொல்லும் வசனம், 'பணம் என்ன மரத்துலயா காய்க்குது'. இதை எப்படியோ உளவுபார்க்கும் செயற்கைக்கோள்கள் மூலம் ஒட்டுக்கேட்ட வெள்ளைகாரன் கண்டுபிடிச்சது தான் ATM (Automatic Teller/Banking Machine) என்கிற தானியங்கி இயந்திரம்.
உண்மையில் இதைக் கண்டுபிடிப்பதற்கு தூண்டுகோலாக இருந்து நெம்பி விட்டது காசு போட்டால் மிட்டாய் கொடுக்கும் இயந்திரங்கள். ATM என்றால் தூரத்தில் நின்று என்னவோ, ஏதோ என்று பார்த்து விட்டு நம்பிக்கையில்லாமல் நகர்ந்து சென்ற காலங்கள் மலையேறி, இன்று உபயோகிக்காதவர்கள் மிக மிகக் குறைவெனும் விதத்தில் மக்களின் நம்பிக்கையை காலத்தால் வென்ற சாதனை நாயகன்.

என்ன தான் இருந்தாலும் இதன் வெற்றியில், வாடிக்கையாளர்களைப் பல மணி நேரம் வரிசையில் நிற்க விட்டு வெறியேற்றி அனுப்பும் வங்கிகள் முக்கியப் பங்காற்றி, புதிய தொழில்நுட்பங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையை செவ்வனே செய்து முடித்ததை நாம் மறுக்க முடியாது :). நேரே ATM சென்று அட்டையை உள்ளிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் அவசர யுகத்தில் அது எப்படி செயல்படுகிறது, எவ்வளவு தூரம் பாதுகாப்பானது, அதன் தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தான அறிமுகமே இப்பதிவு.


முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ATM என்பது ஒரு வெற்றுக் கணினி மட்டுமே (dumb system). உங்கள் அட்டையினை உள்வாங்கிக் கொண்டதும், அட்டையின் தகவல்களைப் படித்து, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கிய வலையமைப்பின் வழங்கியினைத் தொடர்பு கொண்டு உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் ஆகியவை சரிதானா என்று உறுதி செய்யும். பின்னர் நம் பணப்பறிமாற்றத்தினை உங்கள் வங்கிக்கணக்கின் பண இருப்பினை வைத்து உறுதி செய்து பணத்தினை வழங்கும். இந்த மொத்த நடவடிக்கைகளும் முடியும் வரை மட்டுமே உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் தற்காலிகமாக ATM கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும். அதன்பின் அவை அழிக்கப்பட்டு விடும். பணத்தாள்களை வெளியிடும் போது அவற்றின் தடிமனை வைத்தே கணக்கிடப்படும், தடிமன் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவை தனியே ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். பரமாரிப்பு மற்றும் பணத்தாள்களை வைப்பதற்காக வரும் அதிகாரிகள் அவ்வாறு ஒதுக்கப்பட்ட தாள்களை சேகரித்து மறுஆய்வுக்கு எடுத்துச் செல்வர்.

மின்னஞ்சல், கணினி மற்றும் இதர இணைய வசதிகளுக்கே கடவுச்சொலை அப்படி வை, இப்படி வை என்று ஏகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் கணினியுலகம், ஒருவரது வங்கிக்கணக்கினை கையாளும் ATM இயந்திரங்களுக்கு வெறும் நான்கு இலக்கங்கள் மட்டுமே வைத்திருப்பது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?. நான்கு இலக்கங்கள் பாதுகாப்பானைவையே அல்ல, மொத்தம் பத்தாயிரம் கடவுச்சொற்களே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களால் பாவிக்கப்படுகிறது. அதனால் தான் முதல் மூன்று முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால் உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்படுகிறது. அப்படியும் முதல் மூன்று முறைக்குள்ளேயே உங்கள் கடவுச்சொல் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒரு நாளைக்கு எடுக்கப்படும் பணத்திற்கென்று அளவுமுறை வைத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக பணம் கொஞ்சம், கொஞ்சமாக மட்டும் நிதானமாகக் களவாடப்படும். அதற்குள் விழிப்படைந்து வங்கியில் முறையிட்டு பணத்தைக் காப்பாற்றிக் கொள்வது நம் திறமை.


ஒவ்வொரு வங்கியும் அவர்களுக்கென்று ஒரு ஆரம்பக் கடவுச்சொல் வைத்திருப்பார்கள் (0000, 1234), முதல் முறை உங்களிடம் அட்டை வழங்கப்படும் போது அந்த கடவுச்சொல் தான் இருக்கும், பின்பு நாம் அதனை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி நாம் மாற்றும் எண்ணுக்கும், ஆரம்பக் கடவுச்சொல் எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் (offset value), உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ள வழங்கியில் சேமிக்கப்படும். ஒவ்வொரும் முறை நீங்கள் ATM உபயோகிக்கும் போதும் உங்கள் கடவுச்சொல் மற்றும் வங்கியின் ஆரம்பக் கடவுச்சொல் ஆகிய இரண்டும் இடையே உள்ள வித்தியாசம் தான் சரிபார்க்கப் படுகிறதே தவிர நேரடியாக உங்கள் கடவுச்சொல் சரிபார்க்கப்படுவதில்லை என்பது உபரித் தகவல். சர்வதேச தரக்கோட்ப்பாட்டின் படி 4 முதல் 12 இலக்கங்கள் வரை கடவுச்சொல்லாக பயன்படுத்தலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இத்தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஷெப்பர்ட் பரன், தன் சோதனை முயற்சிகளின் போது தன் மனைவியின் உதவியினை நாடினார். ஷெப்பர்டின் மனைவியோ 'என்னால 4 தான் ஞாபகத்துல வச்சுக்க முடியும்' என்று வெட்டு ஒன்று துண்டு நான்காக சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி தலையாட்டிய ஷெப்பர்டின் சம்சார விசுவாசத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு இன்றும் நான்கு இலக்கங்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதிவிலக்காக ஸ்விஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஆறு இலக்கங்கள் கொண்ட கடவுச்சொற்கள் பயன்படுத்தப்படுவதாகக் கேள்வி. நீங்கள் அதுபோன்ற இடங்களில் இருந்து வாசிப்பவராக இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லிச் சென்றால் சிறப்பு, சொல்லாமல் சென்றால் அதனினும் சிறப்பு :). மேலும் திரைகடலோடும் காலங்களில் நாணய மாற்றுக்கு ATM பயன்படுத்துவது லாபகரமானதென்றாலும் அதற்கு வங்கி உங்கள் மீது வி(மி)திக்கும் சேவைக் கட்டணத்தைப் பொறுத்துப் பயன்படுத்திக் கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறது.


தொழில்நுட்ப விவரங்களையும் தாண்டி சில பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுவது சாலவும் நன்று. உங்கள் வங்கி அட்டையின் பின்பக்கத்திலேயே மிகத் தெளிவாக, அழகான கையெழுத்தில் கடவுச் சொல்லை எழுதி வைப்பது, ATM இயந்திரத்தின் அருகே சென்று நின்று கொண்டு, வில்லங்கமானவர்கள் தாக்குவதற்கு வசதியாக தலை முழுவதையும் உங்கள் பர்ஸுக்குள் நுழைத்து அட்டையைத் தேடி கொண்டிருப்பது, விளக்கு வெளிச்சம் அதிகமில்லாத ATM இயந்திரத்தைப் பயன்படுத்துவது போன்றவை 'தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட தானைத் தலைவன்' என்று எல்லாராலும் அன்போடு அழைக்கப்பட ஏதுவாயிருக்கச் செய்யும் செயல்கள். போலி அட்டைகள் உருவாக்குவதில் நாம் இளம் விஞ்ஞானிகள் நூறு ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிப்பதால், அடிக்கடி ATMல் புழங்கும் அன்பர்கள், குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை உங்கள் வங்கிக் கணக்கின் பணப்பறிமாற்றத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. மேலதிக பாதுகாப்பு அறிவுரைகள் ஏதுமிருந்தால் பகிர்ந்து கொள்ளும் வாசர்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள் அதிரடிப் பரிசாக வழங்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு இப்பதிவு நிறைவடைகிறது.

Monday, May 23, 2011

உங்களுக்கு ரூபாய் 40 கோடிக்கு எ டி எம் கார்டு வேண்டுமா?

 பெனின் குடியரசு நாட்டில் பணம் படைத்த பெண் ஒருவர், தம்மிடம் தேங்கி உள்ள பணத்தை ஏழைகளுக்கு (மட்டும்) வழங்க முடிவு செய்துள்ளதாகவும், "நீங்கள் ஏழையாக இருக்கும் பட்சத்தில், முழுமையான தகவல் அனுப்பி பயன் பெறலாம்' எனவும், நமக்கு முதல், "இ-மெயில்' வருகிறது.

அவர்கள் கேட்ட விவரங்களை அனுப்பியதும், நமது பெயரில் அந்நாட்டின் காப்பீடு திட்டத்தில், 40 கோடி ரூபாய்க்கு கணக்கு துவங்கியிருப்பதாக, அடுத்த மெயில் வருகிறது. உடன், அரசு அனுமதியுடன் கூடிய, காப்பீடு நிறுவன சான்றிதழும், "ஸ்கேன்' செய்து அனுப்பப்படுகிறது. நாம் புத்திசாலியாக இருந்து, தடையில்லா சான்றிதழ் கேட்கும் பட்சத்தில், அதையும் அனுப்புகின்றனர்.
இந்த நூதன மோசடி மீது நம்பிக்கை ஏற்பட, இதுவே முதல் அஸ்திரமாகிறது. அதன் பின், மும்பையில் இருப்பதாக கூறப்படும், "கூரியர்' நிறுவனத்தின் பெயரிலிருந்து நமக்கு மெயில் வரும். அதில், நம் பெயரில் ஏ.டி.எம்., கார்டு அடங்கிய பார்சல் வந்திருப்பதாகவும், உரிய ஆவணங்களுடன் வந்து பெறுமாறும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மோசடியாளரை நாம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கும் போது, "இதுவரை நடந்த பரிமாற்றத்திற்கான கட்டணமாக, 17 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஏ.டி.எம்., கார்டை பெறுமாறு, கூறுகின்றனர். இதற்காக மும்பை நபர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பின், என்ன நடக்கும் என்பதை, புத்திசாலிகள் யூகித்து விடுவர். இதுவரை புகாருக்கு ஆட்படாத இந்த நூதன மோசடி, தற்போது தமிழகத்தில் பரவலாக ஆக்கிரமித்துள்ளது. "குரூப் மெயில்' மூலம் நம் இ-மெயில் முகவரியை தெரிந்து கொண்டு, இந்த நூதன மோசடி துவங்குகிறது. ஆசையில், இது போன்ற மோசடிகளுக்கு நாம் செவி சாய்க்காமல் சென்றால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.

Thursday, May 19, 2011

எவ்ளோ தடவ சொல்லிட்டேன் "ஏ டி எம்" ம பத்தி. இன்னும் திருந்தலையா நீங்க?.

சேலம் வந்த சென்னை அதிகாரியின் ஏ.டி.எம்., கார்டை திருடி, பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையை சேர்ந்தவர் பாஸ்கர். தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் இவர், ஏப்ரல் 16ல் சேலம் வந்தார்.
 ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். சேலம் வந்த இவரது, பர்சை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இந்த பர்சில் வைத்திருந்த ஸ்டேட் வங்கி, கனரா வங்கி ஏடி.எம்., கார்டுகளின் பின்னால் அதற்கான ரகசிய எண்களையும் பாஸ்கர் குறித்து வைத்திருந்தார். அதனால், அதை திருடிய மர்ம நபர் ரகசிய எண்ணைக் கொண்டு, சேலம் ஜங்ஷன், ஓமலூர் மெயின் ரோடு, சண்முகா மருத்துவமனை அருகில், ஓமலூர் ரோடு பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் உள்ள ஏ.டி.எம்., மையங்களில், 58 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துள்ளார். 
இது குறித்து, பாஸ்கர், சேலம் மாநகர் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, ஏ.டி.எம்.,களில் உள்ள தானியங்கி கேமராவில் பதிவான படங்களை கொண்டு, பாஸ்கரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த வாலிபரை, போலீஸார் அடையாளம் கண்டு உள்ளனர். மேலும், அவரது படத்தையும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ளனர். 

அந்த வாலிபர், 5.6 அடி உயரத்தில், மாநிறத்தில் இருப்பார். ஏ.டி.எம்.,களில் பணம் திருடிய போது, வெள்ளை நிறத்தில் பச்சை கலரில் கோடு போட்ட சட்டையும், கரும் பச்சை கலரில் பேண்டும் அணிந்திருந்தார். தலையில், "பி' என்ற எழுத்துடன் தோப்பி அணிந்து இருந்தார். இவர் குறித்த தகவல் தெரிய வந்தால், போலீஸ் உதவி கமிஷனர், மத்திய பொருளாதார குற்றப்பிரிவு, சேலம், என்னும் முகவரியிலும், 944391 6547, 94432 55337, என்னும் மொபைல் எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Sunday, May 1, 2011

வந்துவிட்டது மொபைலில் புதிய தொழில்நுட்பம். ATM படிக்கும் மொபைல்

மொபைல் போன்-ல் தினமும் ஒவ்வொரு வசதிகள் வந்த வண்ணம் உள்ளன.இண்டெர்நெட், இமெயில், புளுடுத் மட்டுமில்லாமல் பல வசதிகள் அந்த வகையில் புதிதாக மொபைல் ஐபோன் நம் ஏடிம் கார்டு-ஐ படிக்கும் வகையில் வந்துள்ளது. 

போன்-ல் இருந்து கொண்டே நாம் யாருடைய ஏடிம் கார்டு-ஐ யும் பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.அதோடு மட்டுமில்லாமல் சில இணையதளங்களில் நாம் ஏதாவது இபுக் (Ebook) வாங்க நினைத்தால் நமக்கு இண்டெர்நெட் பேங் அக்கவுண்ட் இல்லாவிட்டாலும் இந்த ஏடிம் வசதியை பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.

இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். 
இந்த ஐபோன்-ல் ஏடிம் கார்டு ரீட் செய்ய கூடிய மெக்னடிக் கார்டு ரீடர் கேஸ் 
பொருத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 3G மாடலில் மட்டும் 
இந்த வசதி வந்துள்ளது. இதனுடன் USB யுஎஸ்பி மைக்ரோ 
கேபிள் சபோர்ட் செய்யும் வசதியும் உள்ளது. 

Saturday, April 23, 2011

ATM இல் நமக்கு தெரியாத ஒரு வித்தை


இது ஒரு முக்கியமான டிப்ஸ்:

 நீங்கள் ஒரு ATM -ல் பணம் எடுக்க செல்லும்போது எதிர்பாராதவிதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன்னால் என்ன செய்ய வேண்டும்.                      
    நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண்டாம். மிகவும் எளிதாக உங்களுடைய ATM PIN Number -இய் தலைகீழ் மார்க்கமாக Enter  செய்யுங்கள்.
 எடுத்துகாட்டாக:
  உங்களுடைய  PINNumber 1234 என்றால் 4321 என்று Enter  செய்யுங்கள்.

 இவ்வாறு உங்கள் PINNumber type செய்தால் ATM மிஷன்-ல் இருந்து பணம் வெளியில் வரும்.ஆனால் பாதியிலேயே பணம் சிக்கி கொள்ளும். அதோடு  மட்டுமில்லாமல்  ஓசைபடாமல் போலீஸ்-க்கும்  தகவல்  அளித்துவிடும் .  அனைத்து ATM -ம் இந்த வசதியை கொண்டுள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பது பெரும்பாலானவருக்கு தெரியாத ஒன்று.
     தயது செய்து இதை சோதித்து பார்க்க முயலாதீர்.நீங்கள் ஆபத்தில் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்துங்கள்