சேலம் வந்த சென்னை அதிகாரியின் ஏ.டி.எம்., கார்டை திருடி, பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையை சேர்ந்தவர் பாஸ்கர். தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் இவர், ஏப்ரல் 16ல் சேலம் வந்தார்.
ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். சேலம் வந்த இவரது, பர்சை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இந்த பர்சில் வைத்திருந்த ஸ்டேட் வங்கி, கனரா வங்கி ஏடி.எம்., கார்டுகளின் பின்னால் அதற்கான ரகசிய எண்களையும் பாஸ்கர் குறித்து வைத்திருந்தார். அதனால், அதை திருடிய மர்ம நபர் ரகசிய எண்ணைக் கொண்டு, சேலம் ஜங்ஷன், ஓமலூர் மெயின் ரோடு, சண்முகா மருத்துவமனை அருகில், ஓமலூர் ரோடு பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் உள்ள ஏ.டி.எம்., மையங்களில், 58 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துள்ளார்.
இது குறித்து, பாஸ்கர், சேலம் மாநகர் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, ஏ.டி.எம்.,களில் உள்ள தானியங்கி கேமராவில் பதிவான படங்களை கொண்டு, பாஸ்கரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த வாலிபரை, போலீஸார் அடையாளம் கண்டு உள்ளனர். மேலும், அவரது படத்தையும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
அந்த வாலிபர், 5.6 அடி உயரத்தில், மாநிறத்தில் இருப்பார். ஏ.டி.எம்.,களில் பணம் திருடிய போது, வெள்ளை நிறத்தில் பச்சை கலரில் கோடு போட்ட சட்டையும், கரும் பச்சை கலரில் பேண்டும் அணிந்திருந்தார். தலையில், "பி' என்ற எழுத்துடன் தோப்பி அணிந்து இருந்தார். இவர் குறித்த தகவல் தெரிய வந்தால், போலீஸ் உதவி கமிஷனர், மத்திய பொருளாதார குற்றப்பிரிவு, சேலம், என்னும் முகவரியிலும், 944391 6547, 94432 55337, என்னும் மொபைல் எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
|
ஆமா அந்த திருட்டுக்கும் இந்த இளம் வாலிபருக்கும் என்ன தொடர்பு..??
ReplyDelete