ரயில்வே துறையின் உயர் அதிகாரியின் செல்ல நாயை, பிளாட்பாரத்திலேயே, மறந்து விட்டு விட்டு வந்ததால், அதை மீட்க, சூப்பர் பாஸ்ட் ரயிலை, அவசர நிலை பிரேக்கை பயன்படுத்தி நிறுத்தினார் டிரைவர்.
இந்த சம்பவம், சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார் ரயில் நிலையத்தில் நடந்தது. பூரி - குர்லா சூப்பர் பாஸ்ட் ரயிலில் இணைக்கப்பட்ட விசேஷ பெட்டியில், பிலாஸ்பூர் டிவிஷனல் ரயில்வே மானேஜர், எல்.சி.திரிவேதி, தன் செல்ல நாய்க்குட்டியுடன் பயணம் செய்தார்.
ராய்கார் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும், ரயில்வே ஊழியர் ஒருவர், அந்த நாயுடன் பிளாட்பாரத்தில் இறங்கினார். சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டது. அப்போதுதான், அந்த ஊழியர் ரயிலில் ஏறாதது தெரிய வந்தது. உடனே, வாக்கிடாக்கியில் இன்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர், அவசர நிலை பிரேக்கை பிடித்து, ரயிலை நிறுத்தினார்.
பின், அந்த நாய், உரிமையாளரிடம் சேர்க்கப்பட்டது. சூப்பர் பாஸ்ட் ரயிலை, இவ்வாறு திடீர் பிரேக் போட்டு நிறுத்தினால், விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த சம்பவம் குறித்து, ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
|
No comments:
Post a Comment