Wednesday, March 2, 2011

உங்கள் பேஸ்புக்கை வேறு யாராவது உபயோகிக்கிறார்களா?


நாம் நம்முடைய கருத்துக்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏதுவாக உள்ள தளம் பேஸ்புக் எனும் சமூக வலைத்தளம்.  இந்த தளத்தில் நாம் உறுப்பினர் ஆகி நம் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ஒருவர் நினைத்தால் மற்றொரு கணக்கின் பாஸ்வேர்ட் அறிய நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆதலால் நம் கணக்கை பாதுகாப்பாக வைத்து கொள்வது நம்மிடம் தான் உள்ளது. இப்படி நம் பேஸ்புக் கணக்கை நமக்கு தெரியாமல் வேறு யாராவது உபயோகிக்கிறார்களா என அறிய.
  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது கணக்கு பகுதியில் உள்ள கணக்கு அமைப்புகள் என்பதை க்ளிக் செய்யுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
  • இப்பொழுது உங்களுக்கு வேறு ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள கணக்கு பாதுகாப்பு என்பதை க்ளிக் செய்யுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள இரண்டு கட்டங்களிலும் டிக் மார்க் கொடுத்து கீழே உள்ள சேமி என்பதை க்ளிக் செய்து விடவும்.
  • இதை நீங்கள் ஆக்டிவேட் செய்யும் கணினியை தவிர மற்ற கணினியில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்தால் உங்கள் மெயிலுக்கும் நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை பதிந்து இருந்தால் உங்கள் போனுக்கும் எச்சரிக்கை செய்தி வரும். 
  • அப்படி எச்சரிக்கை செய்தி வரும் பட்சத்தில் நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மாற்றிகொள்ளுங்கள். 
டுடே லொள்ளு 
நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை. 
 உண்மை தாங்க நம்புங்க ப்ளீஸ்.

இந்த பாலோயர் லிஸ்ட்ட பார்த்து கூகுள் நிறுவனமே ஆடிப்போயிருக்கு 

சரிண்ணே பாராட்டுனது போதும் விடுன்னே 

 வழக்கத்தை விட கொஞ்சம் கம்மியா போச்சு 


இந்த அட்மயா நமக்கு தரவேண்டிய பணம் 

மேல உள்ள அனைத்தையும் நான் எத்தனை தடவை உண்மை என்றாலும் யாரும் நம்ப மாட்டீங்க (என்னது அந்த கமெண்ட்டை மட்டும் நம்புறீங்களா, சரி ரகசியமாக வச்சிகோங்க யாரிடமும் சொல்லாதிங்க ), எதுவுமே உண்மை கிடையாது. ஆனால் எப்படி இது சாத்தியமாகும்.  இந்த வசதியை வைத்து கொண்டு ஆங்கில தளங்கள் நம்மை எப்படி ஏமாற்றுகின்றன அடுத்த பதிவில்.
எந்த இணைய பக்கத்தையும் எளிதில் நம் விருப்பம் போல் மாற்றலாம்   

No comments:

Post a Comment