Wednesday, March 2, 2011

பேஸ்புக் முகவரியை மாற்றுவது எப்படி?

 நம்மில் பெரும்பாலனவர்கள் பேஸ்புக் எண்ணும் சமூக வலை தளத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். நாம் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது ஏதோ ஆர்வக் கோளாறில் ஏதோ ஒரு பெயரை கொடுத்து பதிந்து விட்டு இருப்போம். ஆனால் தற்போது நீங்கள் அந்த பேஸ்புக் முகவரியை மாற்ற நினைத்தால் உங்களுக்கான பதிவு தான் இது. கீழே தொடரவும்.
என்னுடையது முதலில் http://www.facebook.com/yamsasi2003
  • இது நீங்களும் மாற்ற முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • இப்பொழுது கணக்கு(Settings) பகுதியில் உள்ள கணக்கு அமைப்புகள் (Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள்.

  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • அதில் உள்ள பயனர் பெயர் என்ற பகுதியில் உள்ள மாற்று என்ற லிங்க்கை க்ளிக் செய்து உங்கள் புதிய பெயரை கொடுத்து கிடைக்கிறதா என்று சோதிக்கவும். 
  • (கவனம் இருக்கட்டும் இதை நீங்கள் ஒருமுறை மற்றுமே மாற்ற முடியும் ஆகவே யோசித்து சரியான பெயரை கொடுத்து எழுத்துக்களை சரிபார்க்கவும்)
  • உங்கள் புதிய பெயர் கிடைத்தவுடன் உங்களுக்கு ஒரு செய்தி வரும் அதில் உள்ள உறுதி படுத்தவும் என்பதை க்ளிக் செய்த உடன் உங்களின் பேஸ்புக் முகவரி மாறிவிடும்
  • இப்பொழுது உங்களின் புதிய முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இணைந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment