Sunday, November 27, 2011

நான் வாய் திறந்தால் நிறைய பேர் "உள்ளே' போக நேரிடும்: மாஜி அமைச்சர் ராஜா

http://www.enayamthahir.com/
 நான் பேசத் துவங்கினால், மேலும் பலர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்' என, முன்னாள் அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா, பத்து மாதங்களுக்கு மேலாக, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரும், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனாலும், ராஜா, இன்னும் ஜாமின் கோரவில்லை. வழக்கு விசாரணைக்காக பாட்டியாலா சிறப்பு கோர்ட்டுக்கு, சமீபத்தில் அவர் வந்த போது, பத்திரிகையாளர் ஒருவரிடம் அவர் கூறியதாவது:திகார் சிறை வாழ்க்கை, தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும், என்னை பக்குவப்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகள் எம்.பி.,யாக பதவி வகித்து வருகிறேன். ஏறக்குறைய 12 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறேன்.
http://www.enayamthahir.com/
இந்த இரண்டிலுமே, கற்றுக் கொள்வதற்கு பல விஷயங்கள் உள்ளன.இந்த வழக்கில் நான், நிரபராதி என அறிவிக்கப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன். நான் பேசத் துவங்கினால், மேலும் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிகழ்ந்த ஒவ்வொன்றையும், நான் குறிப்புகளாக பாதுகாத்து வைத்திருக்கிறேன். எப்போதுமே நான் சிறையில் இருந்து விடுவேன் என நினைத்து விடாதீர்கள். முதலில் கனிமொழி வெளியில் வரட்டும். அதற்குப் பின், இந்த வழக்கில் ஜாமின் கோருவது குறித்து முடிவு செய்வேன். நான் குற்றவாளி அல்ல. தற்போது எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நான் எந்த தவறும் செய்யவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.

No comments:

Post a Comment