Sunday, November 27, 2011

அமலாபால் - அதர்வா - ஐ.டி கம்பெனி

அதர்வா, அமலாபால் நடித்து வரும் படம் முப்பொழுதும் உன் கற்பனையில். குமார் இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். 


ஒரு முறை என்ற ஒரு பாடல் அடங்கிய சி.டியை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக இருக்கிறது. 

இப்படம் குறித்து அதர்வா கூறியிருப்பது: 
ஆக்ஷன், காமெடி, டான்ஸ் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கதை தான் முப்பொழுதும் உன் கற்பனையில். ராம் என்கிற ஐ.டி கம்பெனியில் பணிபுரிபவராக நான் நடித்து இருக்கிறேன். 

ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் ஒருவருக்கு காதல் வந்தால் எப்படி மற்றொரு நபராக மாறுகிறார் என்பதை தான் கூறி இருக்கிறோம். அமலா பால் சாரு என்கிற பாத்திரத்தில் ஐ.டி.கம்பெனியில் பணிபுரிபவராக நடித்து இருக்கிறார். 

இருவருக்குள்ளும் காதல் எப்படி உருவானது என்பதை மிக அழகாக கூறி இருக்கிறார். படத்தில் எங்களுக்குள் முத்தக்காட்சிகள் எல்லாம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment