Friday, December 17, 2010

புகை - பகை


            மனிதனை பல நூற்றாண்டுகளாக பீடித்து வரும் பழக்கங்களிலேயே மிகப்பழையது இந்த புகையிலை பழக்கம். சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த புகையிலையில்? பெரும்பாலும் புகையிலை புகை வடிவிலேயே பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் இந்த பெயர் வந்திருக்குமோ என்னவோ. இதில் இருக்கும் நிகோடின் நாம் சுவாசிக்கும்போது நம் நுரையீரல்கள் வழியாக உள்ளே செல்கிறது. நுரையீரல்தான் ரத்தத்துக்கு ஆக்சிஜன் சப்ளையர். அதனுடன் கலக்கிறது. இதன் விளைவாக நம் நரம்பு மண்டலத்தில் சில வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக நம் இதய துடிப்பின் வேகம் அதிகரிக்கிறது. ஞாபகதிறனும், விழிப்புணர்வும் (Alertness) அதிகமாகிறது. இதன் மூலம் சுறுசுறுப்பு கிடைகிறது, டென்சன் குறைகிறது. எனவே உங்களுக்கு எப்போதெல்லாம் டென்சன் வருகிறதோ அப்போது புகைப்பது நல்லது. சரி இதுவரை சந்தோசமாக படித்து விட்டீர்கள் அப்படியே தொடர்ந்து முழுவது படித்து விடுங்கள்.
சரி புகைப்பதனால் நடக்கும் இன்ன பிற மாற்றங்கள் என்னேனென்ன என்று தெரிந்து கொள்வோமா? எல்லோரும் சொல்வது போல புற்றுநோய் வரும் என்று சொல்ல மாட்டேன். அது தெரிந்ததே. 


நமக்கு நடப்பவை...

புகையில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களை அழித்து விடுகிறது. அதனால் ரத்தம் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை இழந்துவிடுகிறது. இதனால்தான் புகைப்பவர்களால் ரொம்ப தூரம் ஓட முடிவதில்லை. ஓடினால் அதிக ஆக்சிஜன் தேவைப்படும். ஆனால் ஆக்சிஜனை இழுக்க முடியாமல் திணறுகிறார்கள். இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 


புகைப்பதனால் நரம்பு மண்டலம் செயற்கையாக தூண்ட படுகிறது. இதன் விளைவாக அதன் இயற்கையான தூண்டல் சக்தியை இழக்கிறது. எனவே புகை பிடிக்காத நேரத்தில் மிக மந்தமாக உணருவோம். விழிப்புணர்வு, ஞாபக சக்தி குறைந்து விடும். எனவே மேலும் மேலும் புகையை நாடி செல்வது அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் நரம்பு மண்டலம் பாதிக்கபட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்படலாம். 


புகைப்பது நம் நரம்பு சம்பந்தமான செயல் என்பதால் அது சுரப்பிகளை பாதிக்கிறது, இதன் மூலம், ஆண்கள் ஆண்மையை இழக்க நேரிடலாம். (புகை பிடிக்க, பிடிக்க ஆண்மை படிப்படியாக குறையும் என்பது உண்மை). பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் உண்டாகும். இது தெரியாமல் கோவில் கோவிலாக குடும்பத்தோடு சென்று நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் குழந்தை பாக்கியம் இல்லை என்று புலம்பினால் கடவுள் நம்மை பார்த்து சிரிக்கும்.


புகைப்பவர்களுக்கு ஜலதோஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்கும். காரணம் நுரையீரலில் உண்டாகும் சளி வெளியேற விடாமல் உள்ளே படிந்திருக்கும் கார்பன் பார்த்துகொள்கிறது. எனவே தான் நமக்கு இருமல் உண்டாகிறது. மேலும் இவர்களுக்கு பற்கள் எளிதில் சொத்தை ஆகிவிடும். அடித்து சொல்கிறேன், புகைப்பவர்களுக்கு அல்சர் மற்றும் வயிற்று கோளாறுகள் கண்டிப்பாக இருக்கும்.


பிறருக்கு நடப்பவை 

செகண்ட் ஹன்ட் ஸ்மோக்கிங் (Second hand Smoking) என்பது மிக ஆபத்தானது. அதாவது புகை பிடித்தவர் வெளியிடும் புகையை சுவாசிப்பது. பெரும்பாலும் இது குழந்தைகள் மற்றும் பெண்களையே பாதிக்கிறது. புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அத்தனையும் இவர்களுக்கு உண்டாகும்.


புகையிலையில் உள்ள நிகோடின் மற்றும் இதர பொருட்கள் நம் டிஎன்ஏ வை பாதிக்கின்றன. இதன்மூலம் நம் சந்ததியினர் உடல் மற்றும் மன குறைபாடுடன் பிறப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.


சில தகவல்கள்

இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 80 லட்சம் பேர் புகையிலையால் உயிரிழக்கிறார்கள்.

உலகில் சுமார் நூறு கோடி மக்கள் புகை பழக்கத்துக்கு அடிமை ஆகி இருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களும் புகைப்பதில் அதிகரித்து வருகின்றனர். 

புகை பிடிப்பவர்களுக்கு தங்கள் வாழ்நாளில் 12 முதல் 20 ஆண்டுகள் வரை இழந்து விடுகிறார்கள். அதாவது சீக்கிரம் இறந்து விடுகிறார்கள். 

உலகத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் பத்து லட்சம் சிகரெட்டுகள் விற்பனையாகின்றன.

ஒவ்வொரு 72 வினாடிக்கும் ஒருவர் புகைப்பதனால் இறக்கிறார்.

புகை இல்லாத எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளும் உடலுக்கு தீங்கு விளைவிப்பவையே. இது நம்மிடம் மறைக்கப்பட்டு விளம்பரப்படுத்த படுகிறது.


மேலே கூறிய அனைத்தும் நாம் பெரும்பாலும் கேள்விபட்டைவையே. ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். நமக்கு நடக்காதவரை அவை வெறும் புள்ளி விவரங்களே. "போடா!! என் தாத்தா நூறு வயது வரை பீடி குடித்தார், அவர் என்ன கேன்சர் வந்தா செத்தார்?" என்று சொல்பர்களுக்கு, உங்க தாத்தா இருந்த காலகட்டம், உண்ட உணவு, சுற்று சூழல், எல்லாமே வேறு என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் புகை பிடித்து அழிந்து போவதோடல்லாமல், அருகில் இருக்கும் மக்களையும் அவர்கள் அறியாமலேயே தீங்கு விளைவிக்காதீர்கள். "அவனவன் ஐம்பது வயதிலேயே ஆண்டு அனுபவித்து போய் கொண்டிருக்கிறான்!!, வந்துட்டான் சொல்றதுக்கு!!", என்று சொல்பவர்களுக்கு, ஐம்பது வயதில் செத்து விட்டால் பரவாயில்லை ஆனால் பக்க வாதம் வந்து படுத்து விட்டாலோ, குழந்தைகள் உடல் குறைபாடு, நோய்களால் பீடிக்க பட்டுவிட்டாலோ? என்ன செய்வீர்கள்? "எல்லாம் எனக்கு தெரியும், இது வைரம் பாஞ்ச கட்டை, எனக்கு ஒன்னும் செய்யாது, என் பிள்ளைகள் எக்கேடு கேட்டல் என்ன?" என்று நினைப்பவர்களுக்கு,
 நீங்கள் தாராளமாக புகை பிடியுங்கள். உங்களுக்கு அந்த தகுதி உண்டு. 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க அப்படித்தான் இதுவரை கேட்டிருக்கிறேன். இந்த பதிவு நிறைய பேரை சென்றடைய வேண்டும் என்பதால்,

No comments:

Post a Comment