Friday, December 17, 2010

சிகரெட் சிகரெட் சிகரெட்….

சிகரெட்டு சிகரெட்டு

சிகரெட்டு….

படம்: 3mty.com
புகைப்பிடிக்கிறவங்க பக்கத்துலயோ, இல்ல புகைப்பிடிக்கிறவங்க அதிகமா இருக்குற இடங்களிலேயோ நாமளும்(பொதுமக்கள்) இருந்தால், அவங்க புகைப்பிடிக்கும்போது வருகிற புகையினால புகைப்பிடிக்காத மத்தவங்களும் பெரிதும் பாதிக்கப்படறாங்க அப்படீன்னு நம்ம எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம் இல்லீங்களா? இதுக்கு ஆங்கிலத்துல “செகன்ட் ஹேண்ட் ஸ்மோக்” (Second hand smoke) அப்படீன்னு பேரு!
ஆனா, அது இல்ல இப்ப மேட்டரு! மேலே சொன்ன பிரச்சினை தெரிஞ்ச நாமளும், “சரி, புகைப்பிடிக்கிறவங்க அருகாமையில இருந்தால்தானே பிரச்சினை, அந்த வம்பே வேணாமுன்னு புகைப்பிடிக்கிறவங்க இருக்குற ஏரியா பக்கமே தலைகூட வைக்கிறதில்லைப்பா நான்”, அப்படீன்னு  நீங்க ரொம்ப சாமர்த்தியமா சொன்னாலும், மத்தவங்க புகைப்பிடிக்கிறதுனால ஏற்படுற புகை நம்மள ஒரு கை பார்க்காம சும்மா விடாது போலிருக்கு?!
அப்படீன்னு நான் சொல்லலப்பா…..! புகைப்பிடித்தல் பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஒரு அமெரிக்க ஆய்வுதாங்க சொல்லுது. அது என்னன்னு பார்க்கலாம் வாங்க…..

மூன்றாம்-கை புகையின் (Third-hand smoke) பாதிப்புகள்!
புகையிலையை எரிப்பதனால் (புகைப்பிடித்தல்) ஏற்படும் புகையினூடே, நிக்கோட்டின் என்னும் நச்சுப்பொருள் காற்றில் கலந்துவிடுவது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால், அத்தகைய நிக்கோட்டின் புகையானது நாம் நினைப்பது போல காற்றில் மட்டும் கலப்பது இல்லையாம். மாறாக, காற்றில் கலந்தது போக மீதமுள்ள நிக்கோட்டின் புகையானது வீட்டின் (கட்டிடங்கள்) சுவருகள், தரை, தரைவிரிப்புகள், மேஜை, நாற்காலி போன்ற மரப் பொருள்கள் என எல்லாவற்றிலும் படிந்து விடுகின்றனவாம்.
அப்படி படியும் நிக்கோட்டின் புகை நாட்கள், வாரங்கள், மாதக் கணக்கில் படிந்த பொருள்களின் மீதே தங்கிவிடுகின்றனவாம்! அப்படி தங்கிவிடுவதால் என்ன பிரச்சினை என உங்களுக்கு கேட்கத் தோனலாம். அதுலதான் இருக்கு பிரச்சினையே. பிரச்சினை பெரியவங்களுக்கு மட்டும்தான்னா கூட சரி பரவாயில்லை சமாளிச்சுக்கலாமுன்னு விட்டுடலாம். ஆனா, இந்த விஷயத்துல எள்ளளவும் சம்பந்தப் படாத குழந்தைகளும் பாதிக்கப்படுறாங்கங்கிறதுதான் கொடுமையிலும் கொடுமை! எப்படின்னு இன்னும் கொஞ்சம் விரிவாப் பார்க்கலாம் வாங்க…..
புகையிலை+டி.எஸ்.என்.ஏ (TSNAs, Tobacco Specific Nitrosamines)=கார்சினோஜென்(புற்றுநோய்)!
மேற்ச்சொன்ன பல இடங்களில் படியும் நிக்கோட்டினானது காற்றில் இருக்கும் “நைட்ரஸ் அமிலத்துடன்”(Nitrous acid) கலந்து டி.எஸ்.என்.ஏ (TSNAs, Tobacco Specific Nitrosamines) எனும் ஒரு கொடிய நச்சுப் பொருளாகிவிடுகிறதாம். “கார்சினோஜென்” (Carcinogen) எனும் இந்த நச்சானது மனிதர்களில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியது. இதுல இன்னும் ஒரு கொடுமை என்னன்னா, தரை சுவறுகளில் படியும் நிக்கோட்டினானது நம் உடைகள் மற்றும்  தோலிலும் படிகிறதாம்! அப்படி படியும் நிக்கோட்டின் மற்றும் அதனால் உருவாகும் டி.எஸ்.என்.ஏவும், நம் சுவாசத்தில் கலந்து உடலினுள் சென்று புற்று நோய் ஏற்படுத்துகிறது அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள். ஐய்யய்யோ….!
ஆக, நம் உடலில், ஆடைகளில் படியும் டி.எஸ்.என்.ஏவானது, நம்மைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நம்மைச் சார்ந்த குழந்தைகளையும் என்பதுதான் மிகவும் வேதனையான,  நாம் கவனமாக சிந்திக்க வேண்டிய விஷயம்!  இதையெல்லாம் படிச்சிட்டு, “நாங்கல்லாம் வெவரமுல்ல, அதனாலதான் நாங்க தம்மடிக்கும்போது ஜன்னலையோ, கதவையோ திறந்து வச்சிட்டு தம்மடிக்கிறோமுல்ல” அப்படீன்னு சொல்றவங்கல்ல ஒருத்தரா நீங்க இருந்தீங்கன்னா நீங்க ரொம்ப தப்புக்கணக்கு போடுறீங்கன்னு அர்த்தம். அப்படீன்னு நான் சொல்லல சாமீ….இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்தான்  சொல்றாங்க!
அதாவது, இந்த ஆய்வு முடிவுகளின்படி, விசிரியைப் போட்டுவிட்டோ அல்லது மேற்சொன்ன வகையிலோ தம்மடித்தாலும் நிக்கோட்டின் படிவது தடுக்கப்படவோ, குறைக்கப்படவோ இல்லையாம். சரிப்பா, எதுக்கு வம்புன்னு சொல்லி வடிவேலு மாதிரி (வீட்டுல) ஆணியே புடுங்க(தம்மு அடிக்க) வேணாமுன்னு நீங்க ரொம்ப தெறமையா வெளியில போய் தம்மடிச்சாலும், நிக்கோட்டின்/டி.எஸ்.என்.ஏக்களினால் வரும் பாதிப்புகளிலிருந்து ஒன்றும் பெரிதாக மாற்றமிருக்கப்போவதில்லைன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! ஏன்னா, வெளியில தம்மடிச்சிட்டு வீட்டுக்கு வந்தாலும் நம்ம தோலிலும், உடையிலும் படிந்துள்ள  நிக்கோட்டினால் டி.எஸ்.என்.ஏக்கள் உருவாகி நம் குடும்பத்தாரையும், குறிப்பாக குழந்தைகளையும் அவை பாதிக்கத்தான் போகின்றன அப்படீங்கிறதுதான் இந்த ஆய்விலிருந்து நமக்கு தெரியவரும் வேதனையான செய்தி!
நான் மேல சொன்னது புரியலைன்னா, கீழே இருக்குற இந்த காணொளிகளை பாருங்க…..
இதுவரையிலான ஆய்வுகள் ஏன் இதை சொல்லலைன்னு நீங்க கேக்கலாம். அதுக்கு காரணம், இதுவரையில் செகன்ட் ஹேண்ட் ஸ்மோக் பற்றிய ஆய்வுகளில்தான் அதிகம் ஆர்வம் செலுத்தப்பட்டது. தேர்டு ஹேண்ட் ஸ்மோக் பற்றிய பாதிப்புகளையும், அபாயங்களையும் பற்றிய முதல் ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது! அதெல்லாம் சரிப்பா, இந்தப் பிரச்சினையின் பாதிப்புகள் எங்களுக்கு(பொதுமக்களுக்கு) புரியிற மாதிரி கொஞ்சம் சொல்லேன் அப்படீன்னு நீங்க கேட்டீங்கன்னா…..
ஒரு சிகரெட் பிடிப்பதனால் உண்டாகும் தேர்டு ஹேண்ட் ஸ்மோக்கில் (புகையில்) சுமார் 100 நேனோகிராம் அளவு ட்.எஸ்.என்.ஏ எனும் புற்று நோய் உண்டாக்கும் நச்சு (கார்சினோஜென்) இருக்கிறது என்று கண்டறிந்துள்ளார்கள் இந்த ஆய்வில்….ஐய்யய்யோ, அப்படியா?! அதுமட்டுமில்லாம, நிக்கோட்டின் புகை படியும் இடங்களிலெல்லா இது போன்று பல நூறு நேனோகிராம் அளவில் டி.எஸ்.என்.ஏக்கள்  உண்டாகின்றனவாம். அது பாழாப்போச்சி போ….!!
சரிப்பா, இதுக்கெல்லாம் என்ன தீர்வு அப்படீன்னு கேக்குறீங்களா? என்ன பெருசா சொல்லிடப்போற நீ…..? சிகரெட் பிடிக்கிறத நிறுத்திடுங்க அப்படீன்னுதானே….இப்போ இதுதானே உங்க மனசுல நினைக்கிறீங்க? அதுதான் இல்ல! ம்ம்ம்…..அப்படியா? அப்புறம் என்ன? கவலையே படாதீங்க, நீங்க சிகரெட் பிடிக்காமையே சிகரெட் பிடிக்கிறதுக்கு ஒரு வழி இருக்கு!
“யோவ்…..என்ன நக்கலா? எங்களையெல்லாம் பார்த்தா எப்படி இருக்கு உனக்கு”, அப்படீன்னு கோவப்படாதீங்க!  நெசமாவே சிகரெட் பிடிக்காம, ஆனா சிகரெட் பிடிக்கிறதுனால வர்ற அந்த போதை (எஃபெக்டு) எல்லாம் ஏறுற மாதிரி ஒரு மேட்டர் புதுசா கண்டுபிடிச்சிருக்காங்க. உண்மைதாங்க, அதுமட்டுமில்லா அந்த “சிகரெட்டுக்கு” (?) “ஆன்டி ஸ்மோக்கிங் லா” (Anti-smoking law) ஒப்புதலும் கிடைச்சிருக்கு அப்படீங்கிறதுதான் மகிழ்ச்சியான(?) செய்தி!
இப்போ இது எப்படி இருக்குன்னா…..”சிகரெட்டுப் பிடிக்கலாம்ம்ம்ம்ம்……..ஆனா பிடிக்கமுடியாது” அப்படீன்னு நம்ம வடிவேலு காமெடியில வர்ற என்னத்த கண்ணையா சொல்ற மாதிரி இருக்குமே? அது எப்படி இருந்தாலும் சரி, ஆனா அப்படி ஒரு மேட்டர் இருக்குங்கிறது உண்மை.
அதுக்கு முன்னாடி (சிகரெட் பிடிக்கிறவங்களுக்கெல்லாம்) ஒரு சின்ன வேண்டுகோள். நீங்க பிடிக்கிற சிகரெட்டு அளவை குறைக்க கண்டிப்பா முயற்சி பண்ணுங்க, முடிஞ்சா சுத்தமாவே சிகரெட்டு பிடிக்கிறத விட்டுடுங்க

No comments:

Post a Comment