இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த போன் பற்றிய தகவல்கள் தரப்பட்டன. குவெர்ட்டி கீ போர்டு கொண்ட ஸ்மார்ட் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டமாக சிம்பியன் அன்னா என்ற சிஸ்டம் தரப்படுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,999. இதனை மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.
2.4 அங்குல, 640 x 480 பிக்ஸெல் ரெசல்யூசன் திறன் கொண்ட கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஸ்கிராட்ச் ஏற்படுத்த முடியாத கார்னிங் கொரில்லா கிளாஸ், 8 ஜிபி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை நினைவகத் திறன் அதிகப்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளன. இ5 ஸ்மார்ட் போனைப் போல இதிலும் 600 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட ப்ராசசர் தரப்பட்டுள்ளது. கூடுதலாக, 2டி மற்றும் 3டிக்கான கிராபிக்ஸ் ஆக்ஸிலரேட்டர், கூடுதல் கிராபிகல் வசதிகளுடன் தரப்பட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு மாத காலம் தாக்குப் பிடிக்கக் கூடிய 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 7.30 மணி நேரம் பேசக் கூடிய வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை---பி மற்றும் புளுடூத் தொழில் நுட்பம், A2DP கொண்ட புளுடூத் ஹெட் போன், ஆகியவை இந்த போனில் உள்ள மற்ற சிறப்பம் சங்களாகும். இதன் பரிமாணங்கள் 115.5 x 59 x 10.5 மிமீ; எடை 133 கிராம்.
இந்த போனில் தரப்பட்டுள்ள கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இரண்டு எல்.இ.டி. பிளாஷ், 2 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், நொடிக்கு 24 பிரேம் வீடியோ பதிவு ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது.
நோக்கியா இந்தியா இணைய தளத்தில் இதனை வாங்குவதற்குப் பதிவு செய்து கொள்ளலாம். என்று இந்த போன் வழங்கப்படும் என இந்த செய்தியினை எழுதும் வரை நோக்கியா அறிவிக்கவில்லை.
|
No comments:
Post a Comment