விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி சோனாக்சி சின்கா இல்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. சோனாக்சியிடம் வாங்கிய கால்ஷீட்டை முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதால் அடுத்தப் படத்துக்குப் போய்விட்டார். அப்படியானால் விஸ்வரூபத்தில் யார் கமலுக்கு ஜோடி?
சோனாக்சி சின்கா மாதிரி இந்திய அளவில் குறைந்தபட்சம் இந்தி அளவில் பிரபலமான ஒருவரையே கமல் தேடி வருகிறார். தீபிகா படுகோனும் அவரது லிஸ்டில் இருப்பதாக கூறுகிறார்கள். ஸ்ரேயா நடிப்பார் என்ற செய்தியை ஸ்ரேயாவே மறுத்திருப்பதையும் இந்த இடத்தில் நினைவுப்படுத்திக் கொள்வது நலம்.
இன்னும் ஓரிரு நாளில் ஹீரோயின் யார் என்பது தெரிந்துவிடம் என நம்பிக்கை தருகிறது கமலின் ஆழவார்பேட்டை அலுவலகம்.
சூர்யாவின் மாற்றான் படத்தில் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்காவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது. மாற்றான் டீமை முந்திக் கொண்டு அவரை கமலுக்கு ஜோடியாக்கியிருக்கிறார் செல்வராகவன்.
கமல் அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது. அனேகமாக ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் படத்தை தயாரிக்கலாம்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கமல் ஜோடியாக சோனாக்சி நடிக்கிறார். செல்வராகவன் அவரிடம் கதை சொல்லி கால்ஷீட்டை உறுதி செய்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமல் அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என முதலில் செய்திகள் வெளியாயின. அதேநேரம் இந்தி நடிகர் சத்ருகன் சின்காவின் மகள் சோனாக்சி சின்காவை சந்தித்து செல்வராகவன் படத்தின் கதையை கூறினார். ஆனால் படத்தில் நடிக்க உடனே சோனாக்சி ஒத்துக் கொள்ளவில்லை.
இந்தியில் பிஸியாக இருக்கும் போது தமிழில் நடிக்க வேண்டுமா என்பதே அவரது தயக்கம். கமல் ஹீரோ என்ற விஷயம் அவரது தயக்கத்தை விரட்டியிருக்கிறது. கமல் படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சோனாக்சி சின்கா.
செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படம் மூன்று மொழிகளில் தயாராகிறது. ஹீரோயின் சத்ருகன் சின்காவின் மகள் சோனாக்சி சின்கா.
ரொம்ப கறார் பேர்வழி என்று பாலிவுட்டில் பெயர் எடுத்த இவர் கமலுடன் ஜோடியாக நடிக்க இரண்டு கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். கமலும், செல்வராகவனும் சேர்ந்து செலக்ட் செய்த கதாநாயகி அல்லவா... தர சம்மதித்திருக்கிறார் தயாரிப்பாளர்.
நாயகி சம்பளத்தை வைத்து படத்தின் பட்ஜெட்டை கணக்குப் போட்டாலே... கண்ணை கட்டுதே சாமி.
கமல் செல்வராகவனின் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு விஸ்வரூபம் என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது.
மன்மதன் அம்பு என்ற மிகச் சுமாரான படத்துக்குப் பிறகு செல்வராகவனின் இயக்கத்தில் கமல் நடிக்கிறார். சோனாக்சி சின்கா நாயகி. பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் என தெரிகிறது.
இந்தப் படத்துக்கு விஸ்வரூபம் என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. பரிசீலனைதான், இன்னும் பெயர் இறுதிச் செய்யப்படவில்லை.
கமல், செல்வராகவன் இணையும் படத்துக்கு விஸ்வரூபம் என்ற பெயர் பரிசீலனையில் இருந்தது.
இந்த பிரமாண்டப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனின் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. சோனாக்சி சின்கா ஹீரோயின். தமிழில் அறிமுகமான நடிகைகளில் முதல் படத்திலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவராகத்தான் இருப்பார். இவருக்கு சம்பளம் இரண்டு கோடிகள்.
விஸ்வரூபம் என்ற பெயர் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது இந்தப் பெயரே நன்றாக இருக்கிறது, இதுவே இருக்கட்டும் என கமல் ஒப்புதல் அளித்ததாக செய்திகள் கூறுகின்றன.
அடுத்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க வேலைகள் நடந்து வருகின்றன.
|
No comments:
Post a Comment