பட்ஜெட் விலையில் மொபைல் போன்களை வடிவமைத்துத் தருவதில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நல்லதொரு இடத்தினைப் பிடித்துள்ளது.
அண்மையில் வழக்கம்போல இரண்டு சிம் இயக்கத்தில், பல கூடுதல் வசதிகளுடன் க்யூ 80 என்ற பெயரில் மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு குவெர்ட்டி கீ போர்ட் கொண்ட மொபைல். இதன் அதிக பட்ச விலை ரூ.4,999. இதன் வசதிகளை விலையுடன் ஒப்பிடுகையில், பலரின் கவனத்தைக் கவர்கிறது இந்த மொபைல்.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய முயற்சியில் உருவான ezmail என்னும் புஷ்மெயில் வசதியை இதில் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் இந்நிறுவனம் பெருமையுடன் கூறிக் கொள்ளும் இன்னொரு அம்சம், இதில் தரப்பட்டுள்ள யமஹா ஆம்பிளிபயர் ஆகும். இதன் 1200 எம்.ஏ.எச். திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 5 மணி நேரம் பேசும் திறனைக் கொடுக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 130 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.2.4 அங்குல வண்ணத்திரை, 3ஜி வசதி, வை-பி இணைப்பு, புளுடூத், 3 எம்பி திறன் கொண்ட, ஸ்மைல் மற்றும் முகம் அறிந்து போட்டோ எடுக்கும் கேமரா, இரண்டாவதாக 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட வீடியோ அழைப்புகளுக்கான கேமரா, எப்.எம். ரேடியோ, 8 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தக் கூடிய வசதி என பல சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் இது உள்ளது.
இதன் ஆடியோ MIDI, MP3 பார்மட்டு களையும், வீடியோ 3GP, MP4 பார்மட்டு களையும் சப்போர்ட் செய்கின்றன. குவெர்ட்டி கீ போர்டுடன், நேவிகேஷனுக்கு ஆப்டிகல் ட்ரேக் பேட் தரப் பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள மற்ற அப்ளிகேஷன்களில் Opera Mini, Snaptu, Newshunt, Facebook, Nimbuzz ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மேற்படி வசதிகளை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் இந்த போன் வாங்குவது குறித்து சிந்திக்கலாம்.
|
No comments:
Post a Comment