Tuesday, July 5, 2011

கூகுள் ப்ளஸ்… குவியும் ஆதரவு… திணறும் சர்வர்!

பேஸ்புக்குக்கு போட்டியாக கூகுள் ஆரம்பித்துள்ள கூகுள் ப்ளஸ் சேவையின் சோதனை ஓட்டமே பெரும் வெற்றியாக அமைந்துள்ளது.இந்த சமூக தளத்தில் இணைய லட்சக்கணக்கான மெயில்கள் குவிந்துவிட்டன. இதன் விளைவு, கூகுள் ப்ளஸ் அழைப்பு அனுப்ப முடியாத அளவுக்கு திணறிவிட்டது.


எனவே, ‘மன்னிக்கவும், அழைப்பு அனுப்ப முடியாத அளவுக்கு வாடிக்கையர் மெயில்கள் குவிந்துவிட்டன. சோதனை ஓட்டம் முடிந்த பிறகு அனைவரும் பயன்படுத்தும் வகையில் கூகுள் ப்ளஸ் செயல்படும்’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அந்நிறுவனத்தின் சமூகத் தள பொறுப்பாளர் குண்டோத்ரா.

பல கோடி பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும், தாங்கும் அளவுக்கு இந்த கூகுள் ப்ளஸை பலமான தளமாக உருவாக்கி வருகிறது கூகுள்.பேஸ்புக்கில் வருவதுபோன்ற ஸ்பேம் செய்தி தொல்லைகள் இந்த கூகுள் ப்ளஸில் இல்லாத அளவுக்கு கோடிங் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் இயங்கு தளத்தில் செயல்படும் ஐபோன்களுக்காகவே மொபைல் கூகுள் ப்ளஸ் என்ற மென்பொருளையும் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.முழுமையாக கூகுள் ப்ளஸ் பயன்பாட்டுக்கு வரும் தருணத்தில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் இரண்டுமே பெரும் சரிவைச் சந்திக்கும் என்று இப்போது கணிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன சைபர் உலக ஜாம்பவான் நிறுவனங்கள்.

No comments:

Post a Comment