தமிழ் சினிமாவில் இப்போதைய கால கட்டத்தில் படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் இயக்குனரின் பங்கு ஒரு படி உயர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
எந்த பெரிய நடிகராய் இருந்தாலும் படம் வெற்றி பெற படத்தில் சரக்கு இருக்க வேண்டும் .நடிகரை நம்பி படம் ஓடிய காலம் மலையேறி விட்டது. சிறிது காலத்தின் முன் நடிகர்,இயக்குனர் வாங்கும் சம்பளத்துக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. ஆனால் இப்போதைய இயக்குனர் வாங்கும் சம்பளமே அவர்களின் பெறுமதி உயர்ந்து விட்டதை காட்டி நிற்கிறது
அந்தவகையில் தற்போதைய தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி என் மனதில் விழைந்த போது அவர்களை பற்றி அலசிப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்த ஆக்கம்.
மணிரத்னம் (பிறப்பு ஜூன்-௦2-1956)
தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமா என்றில்லாமல் உலக அளவில் பேசப்படும் இயக்குனர் இவர் ஆவார்.டைம்ஸ் இதழின் உலகின் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக இவரின் நாயகன் படம் தேர்வாகியமை இவர் உலகத் தரம் வாய்ந்தவர் என்பதற்கு சான்றாகும் .யாரிடமுமே உதவி இயக்குனராய் பணியாற்றாமலேயே தனது முதல் படமான பல்லவி அனுபல்லவி(கன்னடம்)படத்தை இயக்கினார் .இவரின் ரோஜா திரைப்படம் தேசிய விருதை வாங்கியது மட்டுமில்லாமல் ஒஸ்கார் நாயகன் ரஹ்மானை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது .அனேகமாக நடுத்தர மக்களை மையமாக கொண்டு கதை சொல்வதே இவரின் பாணி .இவரின் படங்களில் எனக்கு பிடித்த படம் என்றால் தளபதி யைத்தான் சொல்வேன்.
மஹா பாரத கதையை தழுவி படத்தை அருமையாக எடுத்திருப்பார் .ரோஜா ,மௌனராகம் ,நாயகன் ,அக்னி நட்சத்திரம் போன்றவையும் என்னை கவர்ந்த படங்கள் .அலைபாயுதே என்ற அருமையான காதல் கதையையும் வெற்றிகரமாக கொடுத்தவர் .இவரின் இன்னொரு சிறப்பு என்னவெனில் இவர் இயக்கிய படங்களுக்கு இருவர் மட்டுமே இசையமைத்துள்ளனர் .அதிலும் ரோஜாவுக்கு முதல் வரையான படங்களுக்கு இசைஞானி இளையராஜாவும் அதற்குப் பின் வந்த இன்றுவரையான படங்களுக்கு a.r.ரஹ்மானும் மட்டும்தான் இசை அமைத்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்
- 1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
- 1984 - உணரு (மலையாளம்)
- 1985 - இதய கோவில்
- 1985 - பகல் நிலவு
- 1986 - மௌன ராகம்
- 1987 - நாயகன்
- 1988 - அக்னி நட்சத்திரம்
- 1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)
- 1990 - அஞ்சலி
- 1991 - தளபதி
- 1992 - ரோஜா
- 1993 - திருடா திருடா
- 1995 - பம்பாய்
- 1997 - இருவர்
- 1998 - தில் சே (ஹிந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
- 2000 - அலைபாயுதே
- 2002 - கன்னத்தில் முத்தமிட்டால்
- 2004 - யுவா (ஹிந்தி)
- 2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் ஹிந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.
- 2007 - குரு (ஹிந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
- 2010 - ராவணன்(ஹிந்தி)- ராவண் என்ற பெயரில் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது
என்னமோ தெரியவில்லை இவர் இயக்கிய ஆரம்ப காலப் படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றதுடன் இப்போதைய படங்களில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளன.இவரின் படங்கள் பாமர மக்களுக்கு புரிவதில்லை என்ற குறையும் காணப்படுகிறது .ஆய்த எழுத்து நல்ல உதாரணமாகும் .இவர் இப்போது தனது படத்தை பல மொழிகளில் எடுக்கும் உத்தியை கையாண்டு வருகிறார்.இவர் கடைசியாய் எடுத்த ஐந்து படங்களில் நான்கு தோல்வியை தழுவிய நிலையில்{குரு மட்டுமே வெற்றி ) பொன்னியின் செல்வன் எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுக்கவிருந்தார் .எனினும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு விட்டது .அடுத்த படம் எது என உறுதியாக தெரியாத நிலையில் அவரின் அடுத்த பட அறிவுப்புக்காக ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.அண்மைக்காலமாக தோல்வி படங்களை கொடுத்தாலும் இவரின் மவுசு கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
ஷங்கர் (1963.08.13)
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.பிரமாண்டம் என்ற சொல்லின் வரைவிலக்கணமாக திகழ்பவர் .இப்போது புகழின் உச்சியில் இருக்கிறார் .
S.A.சந்திர சேகரிடம் உதவி இயக்குனராய் பனி புரிந்த இவர் 1993 இல் ஜென்டில்மேன் என்ற படத்துடன் இயக்கினராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் உயர் தொழினுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் இவரே .படத்துக்கு படம் வித்தியாசமான நுட்பங்களை செய்து வருகிறார்.படங்களை அதிக செலவில் மிகவும் பிரமாண்டமாக எடுப்பது இவரின் தனி சிறப்பு .
இவர் இயக்கிய படங்கள்
1993- ஜென்ட்லேமன்
1994- காதலன்
1996-இந்தியன்
1998-ஜீன்ஸ்
1999-முதல்வன்
2001-நாயக் (ஹிந்தி)
2003-பாய்ஸ்
2005-அந்நியன்
2007-சிவாஜி
2010-எந்திரன்
2011-நண்பன் (படப் பிடிப்பில்)
ஷங்கரின் பெரும்பாலான படங்கள் பெரு வெற்றியை பெற்றுள்ளன .இவரின் படங்களில் சமூக மாற்ற கருத்துக்கள் அதிகளவில் இடம் பெற்றிருக்கும் .இந்தியன் ,முதல்வன் என்பன என்னை கவர்ந்த படங்களாகும் .
.இவரின் பாய்ஸ், ஜீன்ஸ் படங்கள் தோல்வி அடைந்தன.
ஷங்கரின் மதிப்பு வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது .
இவரின் கடைசிப் படமான எந்திரன் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா அளவில் அதிக செலவில் எடுக்கப் பட்டு இந்திய அளவிலேயே அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது.தமிழ்சினிமாவின் இயக்குனர் இமயமான K.பாலச்சந்தர் எந்திரனை இந்தியாவின் அவதார் எனவும் ஷங்கரை இந்தியாவின் கமரூன் என வர்ணித்ததில் இருந்து ஷங்கரின் திறமையை அறியலாம். எந்திரன் படத்தின் மூலம் உலக அளவில் பாரட்டுக்களை அள்ளிகுவித்துள்ளர்.
தற்போது முதற் தடவையாக ரீமேக் படம் ஒன்றை (நண்பன் )எடுத்து வருகிறார் .நண்பன் மிக குறைந்த நாட்களில் படப்பிடிக்கப் பட்டு எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. பின்னர் எந்திரன் -2 எடுக்கலாம் என செய்தி அடிபடுகிறது .
A.R.முருகதாஸ்
தமிழில் இதுவரை மூன்று படங்களே இயக்கியிருந்தாலும் முன்னணி இடத்தை பிடித்து விட்டார் முருகதாஸ் .அஜீத்குமாருக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படம் தீனா. முதல் படத்தையே அசத்தலாக கொடுத்திருந்தார் முருகதாஸ் .தல என்று அஜித்தை அழைக்கும் வழக்கம் இந்த படத்தாலேயே ஏற்பட்டது .அடுத்து கப்டனை வைத்து ரமணா என்ற படத்தை கொடுத்தார் .புரட்சிகரமான கருத்துக்களை விறுவிறுப்பாக சொல்லியிருந்தார் .படம் பெரு வெற்றி பெற்றது .அடுத்து சூர்யாவை வைத்து வித்தியாசமான கதையுடன் (short time memory) கஜினி படத்தை எடுத்தார் .கஜினி திரைப்படம் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார் .memento (2000) என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல்தான் கஜினி என்றாலும் அதை சிறந்த முறையில் படமாக்கி வெற்றி பெற செய்தார் .பின் ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தை எடுத்தார். அமீர் கான் நடிக்க ஹிந்தியில் தனது கஜினியை ரீமேக் செய்தார் கஜினி அதுவரை வெளியாகிய ஹிந்தி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது (பின்னர் வந்த படங்கள் அந்த சாதனையை முறியடித்து விட்டன) .இந்த வெற்றியின் பின் இந்திய அளவில் பேசப்படும் முன்னணி இயக்குனர் ஆனார் .
தற்போது ஏழாம் அறிவு படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் மீதான எதிர் பார்ப்பு எகிறியுள்ளது .வரலாற்று கதையை உயர் தொழினுட்பங்களை கொண்டு இயக்குகிறார் . இந்த படமும் வெற்றி பெற்றால் எங்கேயோ போய்விடுவார் .இது முடிய விஜயை வைத்து படம் எடுக்கவிருப்பதாக அறிய வருகிறது.
|
No comments:
Post a Comment