Showing posts with label G MAIL. Show all posts
Showing posts with label G MAIL. Show all posts

Saturday, July 9, 2011

ஜிமெயிலின் புதிய அழகான தோற்றத்தை நீங்களும் பெற

இணையத்தில் ஜாம்பவானான கூகுளின் பயனுள்ள வசதிகளுள் ஒன்று ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவை தளம்(இதை பற்றி மேலும் அறிமுகம் தேவையில்லை. ) தனது தளங்களின் தோற்றத்தை அழகாக மாற்றி கொண்டு வரும் கூகுள் ஜிமேயிளிளிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்த தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமின்றி வேகம் குறைந்த கணினிகளிலும் திறக்கும் வண்ணம் இதனை வடிவமைத்துள்ளது.


கீழே ஜிமெயிலின் புதிய தோற்றம் எப்படி உள்ளது என பாருங்கள்.

இது இன்பாக்ஸ் பகுதி


இது மெயில் பகுதி


இந்த புதிய தோற்றத்தை ஜிமெயில் நிறுவனம் தீம்ஸ் வடிவில் கொடுத்துள்ளது.

இந்த புதிய தோற்றத்தை கொண்டு வர உங்கள் ஜிமெயிலில் Settings- Themes பகுதிக்கு சென்று புதியாதாக இருக்கும் இரண்டு தீம்களில் (preview, Dense Preview) இவை இரண்டில் ஏதேனும் ஒரு தீமை தேர்வு செய்தால் போதும் அடுத்த நிமிடம் உங்கள் ஜிமெயில் புதிய தோற்றத்தோடு காணப்படும்.

Sunday, June 12, 2011

கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!!


சோல், தென் கொரியா: ஜி-மெயில் பாஸ்வேர்ட் திருட்டு வலைப்பின்னல் ஒன்று, எண்ணிக்கை சொல்ல முடியாத அளவில் தனிப்பட்ட ஜி-மெயில் அக்கவுன்ட்களைப் பாதித்திருப்பதை, ஜி-மெயில் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் பாதிப்பு இப்போது, மிகத் தீவிரமடைந்துள்ளது, அமெரிக்க அரசே நேரடியாக இதில் தலையிடும் அளவுக்கு!

குறிப்பிட்ட சில தனியார்களின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்களே திருடப்பட்டுள்ளன. ஆனால், பாஸ்வேர்ட் திருடப்பட்ட ஜி-மெயில்கள் எத்தனை என்ற விபரமோ, பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ, வெளியிடப்படவில்லை.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, மிகத் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள தனியார்களில், தென் கொரியாவின் முக்கிய அரசு உயரதிகாரிகளும் அடங்குகின்றனர். இவர்களில் பலர், ராஜாங்க ரகசியங்களை அனுப்புவதற்கும் ஜி-மெயிலையே உபயோகித்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஜி-மெயில் திருட்டுப் பற்றிய தகவல் வெளியானவுடன் கலவரமடைந்துள்ள தென் கொரிய அரசு, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது. தென் கொரிய உயரதிகாரிகளின் எந்தெந்த ஜி-மெயில்களின் பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டன என்ற விபரம் தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என்று கோரியுள்ளது, தென் கொரிய அரசு.

ஆனால், அது உடனடியாகச் சாத்தியமில்லை எனக் கைவிரித்திருக்கின்றது ஜி-மெயில் நிர்வாகம்.
ஜி-மெயிலின் பாதுகாப்புப் பிரிவின் தொழில்நுட்ப டைரக்டர் எரிக் க்ரொஸ், “ஆசிய நாடுகளின் முக்கிய அதிகாரிகள் சிலரின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டுள்ள விஷயம் உண்மைதான். இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தென் கொரிய அரசு அதிகாரிகள்தான்” என ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆசிய அரசு அதிகாரிகளைத் தவிர, சில அமெரிக்க அதிகாரிகள், சீன செயற்பாட்டாளர்கள் (சீன அரசுக்கு எதிரான ஆட்கள்), பத்திரிகையாளர்கள், ராணுவ அதிகாரிகள் ஆகியோரின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்களும் திருடப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

ஆனால், பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களும், ராணுவ அதிகாரிகளும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை வெளியிடவில்லை.

ஜி-மெயிலின் பாதுகாப்பு வளையங்களையெல்லாம் தாண்டிக் கில்லாடித்தனமாகச் செய்யப்பட்ட இந்தத் திருட்டு, சீனாவின் மாகாணமான ஜினானிலேயே தொடங்கப்பட்டுள்ளது என்பதை ஜி-மெயில் அறிந்திருக்கின்றது.

இந்தத் திருட்டில், சீன அரசின் கைகளும் நிச்சயமாக இருக்கும் என்றே, சந்தேகிக்கப்படுகிறது.

Tuesday, June 7, 2011

ஜிமெயிலின் இருப்பியல்பு எழுத்துருவை மாற்றம் செய்ய

ஈமெயில் சேவையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் கூகுள் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தினுடைய இந்த நிறுவனத்தினுடைய ஈமெயில் சேவை வெகுவாக பயனாளர்களை கவர்ந்து வருகிறது. ஈமெயில் சேவையில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்த யாகூ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு ஜிமெயில் நிறுவனம் முன்னேறி விட்டது இதற்கு காரணம் கூகுள் நிறுவனம் தனது ஈமெயில் சேவையில் புதிதுபுதியதாக சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜிமெயில் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள சேவைதான் இருப்பியல்பு எழுத்துருவினை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியாகும். இந்த வசதியின் மூலமாக நாம் கம்போஸ் மெயில் சென்று டைப் செய்யும் அனைத்தும் நாம் குறிப்பிடும் எழுத்துருவிலேயே ஏற்றப்படும். இந்த வசதியினை செயல்படுத்த.

முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளவும், பின்Settings சுட்டியை அழுத்தி பின் Labs என்னும் பொத்தானை அழுத்தவும்.




பின் Default Text Styling லேபிளை எனேபிள் செய்யதுவிட்டு, Save Change

பொத்தானை அழுத்தவும்.


பின் Settings சுட்டியை அழுத்தி பின் General என்னும் பொத்தானை அழுத்தவும். அதில் Default text style என்னும் தேர்வில் எழுத்துருவினை உங்கள் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளவும். 







இதில் எழுத்தின் அளவுரு, நிறம் போன்றவற்றை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். 












இப்போது கம்போஸ் மெயிலை ஒப்பன் செய்து வழக்கம் போல தட்டச்சு செய்யவும். இப்போது நீங்கள் குறிப்பிட்டது போல எழுத்துரு டைப் ஆக தொடங்கும். இந்த எழுத்துரு தேவையில்லையெனில் தட்டச்சு செய்த எழுத்துக்களை தேர்வு செய்து கொண்டு என்னும்பொத்தானை அழுத்தி வழக்கம் போலவே எழுத்துக்களை மாற்றிக்கொள்ள முடியும்.