மெக்சிகோவில் உள்ள செதுமாய் சிறையில் ரமிரெஸ் ஜெரினா இருந்தார். சட்டவிரோத பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்ததாக அவர் 2007ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. தனது வாழ்க்கைத் துணைவரை சிறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என 19 வயது பெண் மரியா முயன்றார்.
அவர் பெரிய கறுப்பு நிற சூட்கேசை மெக்சிகோ சிறைக்குள் கொண்டு சென்றார். பின்னர் அவர் வரும் போது ஒரு விதமான பதட்ட நிலையுடன் காணப்பட்டார்.
அவர் தடுமாற்றத்துடன் இருப்பதை பார்த்த சிறை பாதுகாப்பு நிர்வாகத்தினர் உஷார் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அந்த சூட்கேஸை சோதனை செய்தனர். அதை திறந்த போது சிறைக்கைதி ரமிரெஸ் இருப்பது தெரியவந்தது.
சிறைக்காவலர்கள் அதிர்ச்சி அடைந்து கைதியை கடத்த முயன்ற பெண் மரியாவை கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. சூட்கேசில் கைதி தப்ப முயன்றதை தொடர்ந்து மெக்சிகோ சிறைகளில் உஷார் நிலை கடைபிடிக்கப்படுகிறது.
Share
|
No comments:
Post a Comment