மூன்று தினம் முன்பு அதிகாலை ஐந்து மணிக்கும், பின்னர் காலை எட்டு மணிக்கும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏற்பட்ட இலேசான நில நடுக்கத்தால், மாவட்டத்தின் பல இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தாது, வீட்டில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தது தவிர வீறு எந்த சேதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டிக்கு அடுத்து உள்ள குள்ளப்பநாயக்கனூர், பெரியூர் கல்மேடு என்ற இடத்தில் உள்ள மாது என்பவரது தோட்டத்தில் நிலத்தில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
இரண்டு மாதம் முன்பு உழவு ஓட்டிப்போட்டிருந்த நிலத்தில், கடந்த வாரம் மஞ்சள் கிழங்கு நடவு செய்துள்ளார் மாது. மஞ்சள் காட்டுக்கு நேற்று காலையில் தண்ணீர் பாய்க்கும் போது, வயலுக்கு போன தண்ணீர் ஒரே இடத்தில் நிலத்திற்குள் முழுவதும் போய்க்கொண்டிருந்தது.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் தகவல் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது, இரண்டடி அகலமும், இரண்டு அடி நீளமும் கொண்ட அந்த விரிசலால் ஏற்பட்டிருந்தது.
இந்த விரிசலால், சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரிசல், மேலே பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், உள்ளே பாக்கும் போது பத்து அடி ஆழத்துக்கும் அதிகம் இருக்கும் போல தெரிகிறது.இது, நிலநடுக்கத்தால் ஏற்பட்டதல்ல… முந்தைய காலங்களில் நிலத்தில் விளையும் தானியங்களை வீட்டுக்கு கொண்டு சேர்க்க வசதியில்லாதவர்கள், தங்கள் தோட்டத்தின் மேடான பகுதியில் நிலத்தில் பாதுகாப்பான குழி வெட்டி நான்கு பக்க சுவர்களையும் சிறு சிறு கற்களை கொண்டு வீடு கட்டுவது போலோவே அழகாக கட்டியிருப்பார்கள்.
உள்ளே இருக்கும் தானியங்களை போய் எடுப்பதற்கு ஒரு வழி மட்டும் வைத்திருப்பார்கள், இதற்கு தவசு என்று பெயர், சாதாரணமாக இப்போது ஏற்பட்ட நிலா நடுக்கத்தில் தவசு குழியை மூடியிருந்த கல் உடைந்துவிட்டது என்று ஒருதரப்பினர் சொல்கிறார்கள்.
இல்லை…. இது நிலநடுக்கத்தால் ஏற்ப்பட்டதுதான், கடந்த ஆண்டு நெல் நடவு செய்ய, வயல் ஓட்டுவதற்கு டிரேக்டர் மூலம் சேற்று உழவு ஒட்டியிருக்கிறார் மாது, பல நாட்கள் நிலத்தில் தண்ணீர் நின்றுள்ளது. அப்போது ஏற்படாத விரிசல் இப்போது எப்படி ஏற்பட்டுள்ளது…? இது நிலா அதிர்வால் ஏற்ப்பட்டதுதான் என்கிறார்கள் ஒருதரப்பினர்.
சங்க காலங்களில், இறந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பாண்டவர் குழி என்று சொல்லப்படும் மாண்டவர் குழிகள் கூட இப்படிப்பட்ட தோற்றத்தில் தான் இருக்கும்.
மாண்டவர் குழியா, நிலநடுக்க குழியா என்று தெரிய வில்லை, அது இப்போது பரபரபரப்பு குழியாக உள்ளது.
|
No comments:
Post a Comment