Showing posts with label APPLE. Show all posts
Showing posts with label APPLE. Show all posts

Sunday, July 10, 2011

வரப்போகிறது அப்பிள் ஐ போன் 5

அப்பிள் தனது ஐ போன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐ போன் 5 வினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பொதுவாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிவருவதற்கு முன்னரே அவற்றைப்பற்றிய எதிர்பார்ப்புகள்,செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு குறைவிருக்காது.

அதனைப் போலவே இம்முறையும் ஐ போன் 5 பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

ஐ போன் 5 ஆனது தனது கடைசி வெளியீடான ஐ-போன் 4 வை விட வேகமானதும் ஐ பேட் 2 கணனியில் உபயோகிக்கப்பட்டதுமான ‘ ‘ஏ 5′ புரசஸரைக் கொண்டிருக்குமெனவும் 8 மெகா பிக்ஸல் கெமராவைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது அப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐ கிளவுட் வசதியினையும் கொண்டிருப்பதுடன் வடிவத்தில் ஐ போன் 4 இனை ஒத்ததாகவும் அதனை விட பெரிய தெளிவான திரையை கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்கு ஐ போன் 5 என பெயரிடாமல் ஐ போன் 4ஜி அல்லது 4 எஸ் எனப் பெயரிடலாம் எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அப்பிள் தனது ஐ போன் 4 வை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டிருந்தபோது அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதேவேளை அப்பிள் மத்திய தர சந்தைகளை கருத்திற் கொண்டு குறைந்த விலையிலான ஐ-போனையும் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, July 9, 2011

ஆப்பிள் நிறுவனத்தையும் குறி வைத்து விட்டார்கள் இணைய திருடர்கள்

அநாமதேய இணையத் திருடர் குழு ஒன்று அப்பிளின் நிறுவனத்தின் ஒரு சேவரைத் திருடி அதனை நிரூபிக்க பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை டுவீட்டரில் பதியவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய திருடர்களின் இலக்குகளில் அப்பிள் நிறுவனமும் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளனர்.அதியுயர் ப்ரொபைல்களின் பொது ஸ்தாபனமான அப்பிளிற்கு இது பாரிய சேதங்களை ஏற்படுத்தும் என்ற விதத்தில் அதற்கு இது ஒரு எச்சரிக்கையாகவே உள்ளது.

 
 
இதேவேளை லெபனானைச் சேர்ந்த இணையத் திருடரான இடாக் அப்பிள் சேவரில் SQL ஏதுநிலை இருப்பதைக் கண்டறிந்ததாக டுவீட்டர் மூலம் தெரியப்படுத்தினார். இந்நிலையில் Apple Consultants Network server இனை வெற்றிகரமாகத் தான் தாக்கியிருப்பதாக அந்த அநாமதேய இணையத் திருடர் தெரிவித்துள்ளார். இது பற்றி அப்பிளின் பேச்சாளரிடம் கருத்துத் தெரிவிக்கும்படிக் கேட்டுக்கொண்டபோது அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.