Thursday, November 17, 2011

பேஸ்புக் பயன்படுத்தும் ஆண்களே உஷார் -கவனிக்க


பேஸ் புக் இணையதளம் மூலம், "ஜொள்ளு' பார்ட்டிகளை நூதனமாக ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த, விநாயகம் என்பவரின் மகள் பிரியதர்ஷினி,25.பட்டதாரி பெண்.இவர், பேஸ்புக் இணையதளத்தின் மூலம், ஆண்களை மயக்கி, தன் வலையில் விழ வைப்பதில் கைதேர்ந்தவர். ஆடம்பரமாக வாழ நினைத்த பிரியதர்ஷினி, ஆண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.

கே.கே. நகர்,பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மகேஷ், சாய்ராம், யாசர்அராபத், விஜய், சுபேந்தர் ஆகியோரிடம் பழகிய பிரியதர்ஷினி,வெவ்வேறு பெண்களின் போட்டோக்களைக் காட்டி, அவர்களிடமிருந்து பணம் மற்றும் பரிசுப் பொருட்களாக, 40 லட்ச ரூபாய் கறந்துவிட்டார். அதில் உஷாரான, கே.கே. நகரைச் சேர்ந்த மகேஷ், பிரியதர்ஷினியை நேரில் பார்க்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அவரின் பேச்சு நடவடிக்கை சந்தேகம் அளிக்கவே, ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், போலீசில் புகார் செய்தார். புளியந்தோப்பு துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ் உத்தரவின்படி, பெரவள்ளூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார், விசாரணை மேற்கொண்டு, பிரியதர்ஷினியை கைது செய்தனர்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி, சுமாரான தோற்றம் உடையவர்; மற்ற பெண்கள் போல் ஆண் நண்பர்கள் கிடைக்கவில்லை, உல்லாசமாக வெளியிடங்களுக்குச் செல்லமுடியவில்லை என்ற ஆதங்கம், இருந்து வந்துள்ளது. இதனால், அவர் பேஸ்புக் இணையதளத்தைப் பயன்படுத்தி, ஆண்களை ஏமாற்றத் திட்டமிட்டார்.அவர் விரித்த வலையில் சிக்கியவர்களிடம், பணம் மற்றும் பரிசுப் பொருட்களாக, பல லட்சம் மோசடி செய்துள்ளார்.இது தொடர்பாக, ஓட்டேரி போலீசார் பிரியதர்ஷினியை கைது செய்து, அவர் மீது ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி செய்த குற்றப்பிரிவுகளின் கீழ், வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment