தந்தை ஒருவர் தனது மகளை அடித்து துவைக்கும் காட்சி தான் இது. நம்ம ஊர்களில் தான் இப்படியான செயல்கள் இடம்பெறுவது வழமை.
தன்னை மதிக்காமல் கொம்பியூட்டரில் உட்கார்ந்து கொண்டு பாடல், வீடியோ கேம் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தந்தை மகளை செம சாத்து சாத்தியுள்ளார்.
அமெரிக்காவின் Texas நீதிமன்றின் நீதிபதியான வில்லியம் அடம்ஸ் என்பவரே மேற்படி தனது 16 வயது அங்கவீன மகளான ஹிலாரி அடம்ஸிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.
ஊருக்கே தீர்ப்புச் சொல்லும் ஒருவர் தனது சொந்த மக்கள் மீது இவ்வாறு மிருகத் தனமாக நடந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரே மகள் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மகள் குறித்த வீடியோவை Youtube இல் பதிவேற்றம் செய்த பின்னர் ஏராளமானோர் குறித்த வீடியோவைப் பார்த்துள்ளார்கள். வீடியோவை வெளியிட்டமைக்கு அவர் ஒரு செய்தி நிறுவனத்திடம் சொல்லும் காரணங்களும் பதிவாகியுள்ளது. இண்டர்நெட் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது அப்பாவுக்கு தெரிய வேண்டும் என்கிறார் இவர்.
நான் அவளை ஒழுக்கமான பிள்ளையாக வளர்க்கவே விரும்பினேன் என்கிறார் அப்பா. இச் செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் அப்பாவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அப்பா நடந்து கொண்ட விதம் சரியானது என்று 75 வீதத்துக்கு மேற்பட்ட மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அங்கு கேட்கப்பட்ட கேள்வி இது தான். நீதிபதியான அப்பா மகள் மேல் இப்படியாக தாக்குதல் நடாத்தியது சரியா?
|
No comments:
Post a Comment