Showing posts with label விமானம். Show all posts
Showing posts with label விமானம். Show all posts

Tuesday, April 26, 2011

விமானம் பறப்பது எப்படி?



இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.



சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A.  ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag



ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.  

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்) 

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே. 

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை  எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

நன்றி: உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!

விமானத்தின் கறுப்புப்பெட்டி ஓர் ஆச்சரியம்


What is this Black Box? விமானத்தின் கறுப்புப்பெட்டி என்றால் என்ன ? என்ற கேள்வி இந்தியாவில் மங்களூரில் நடந்த விமான விபத்துக்குப் பிறகு பலருக்கிடையே பரபரப்பாக பேசப்பட்டது . ஏனென்றால் 158 பேரின் உயிரைக் காவுகொண்ட அந்த சோகமான விபத்திற்க்கான சரியான காரணத்தை விமானத்தின் கறுப்புப்பெட்டி கிடைக்கப்பெற்றால் மாத்திரமே கூறமுடியும் என இந்திய விமானப்படை அதிகாரிகள் ஊடகங்களுக்கு அறிவித்திருந்ததை நாம் யாவரும் அறிந்ததே.

உயரமாக பறக்கும் விமானங்கள் விபத்துக்குள்ளாகும் போது . இதற்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்களுக்கு கறுப்புப்பெட்டி என்னும் சாதனம் உதவுகிறது. இது எல்லா விமானங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும். 

கறுப்புப்பெட்டியின் தன்மைகள்:- 

கறுப்புப்பெட்டி என்ற பெயர் கொண்டு இது அழைக்கப்பட்டிருந்தாலும், இதன் நிறம் உண்மையில் கறுப்பு கிடையாது. செம்மஞ்சள் (orange) வண்ணம் கொண்டது.சில பெட்டிகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்

* தீயினில்/உயர் வெப்பநிலை என்பவற்றால் எரிந்து சேதமுறாது.

* உவர் நீரில் ஊறினாலும் பாதிப்படையாது

* கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்குப் பழுதடையாது.

* ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் உடையாது

* வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாத பெட்டியும், தகவல் சேமிப்பு நாடாவும் உள்ளன.

பெரிய விமானங்கள் என்றால் இரண்டு கறுப்பு பெட்டிகள் இருக்கும். இதில் `காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர்' என்னும் சாதனம் விமானியின் அறையில் நடக்கும் உரையாடலை பதிவு செய்கிறது. `டேட்டா ரிக்கார்டர்' என்னும் மற்றொரு சாதனம் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளின் இயக்கங்களை பதிவு செய்யும். இதன் அடிப்படையில்தான் விமான விபத்துக்கான காரணத்தை கறுப்புப்பெட்டியின் மூலம் அறிய முடிகிறது

 விபத்திற்க்குள்ளான விமானத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட போது . 


 திறந்தால் இப்படி இருக்கும்


இப்படித்தான்  கறுப்புப்பெட்டி தொழிற்படும் முறை
மேலும் தகவலை ஆங்கிலத்தில் இங்கே சென்று அறியலாம்.

விமானியின் அறையை பார்க்கலாம் வாங்க !


நாமெல்லாம் பல தடவை விமானத்தில் பயணித்திருப்போம் ஆனால் பயணிகள் இருக்கை மற்றும் மலசலகூடம் இதை விட்டால் வேறு ஒரு இடமும் நகர முடியாது.

எப்படியாவது கொஞ்சம் விமானியின் அறையை பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் அது நடக்காது அந்தளவுக்கு கடத்தல் மற்றும் வெடிகுண்டு புரளி என உலகையே பயத்தில் ஆழ்திக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலை இது.

இருந்தாலும் விமானியின் அறையை பலதிரைப்படங்களில் பார்த்திருப்போம் ரசித்திருப்போம், ஆனால் இப்படி தெளிவாக பார்த்திருக்கமாட்டோம் இதுவரைக்கும் விமானத்தில் பயணிக்காதவருக்கும் மற்றும் பயணித்தவருக்கும் கண்ணுக்கு விருந்தாய் அமைகிறது இந்த வினோதமான இணைத்தளம் .
இங்கே சொடுக்கி சுற்றி சுற்றி பெரிதாக்கி ஓட விட்டு பார்த்து மகிழவும்.

Sunday, December 5, 2010

விமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி

நம் வலைத்தளத்திற்கு பல நாடுகளில் இருந்தும் வருகிறார்கள் அப்படி வருபவர்களுக்கும் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்கிறவர்களுக்கும் இந்தியாவுக்குள்ளே விமான போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு நிச்சியம் உதவும் இது முன்னமே உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும் ஆனாலும் தெரியாதவர்களும் இருக்ககூடுமே அதனால் தான் இதை ஒரு பதிவாக எழுதுகிறேன்.


முதலாவதாக YATRA இனையதளம் பற்றி பார்க்கலாம் இது இந்தியாவிற்குள்ளே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இதன் வழியாக தேடலாம், இதன் வழியாகவே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்துகளை தேடலாம் ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு தேடமுடியாது அதாவது From என்பது இந்தியா அல்லது இந்தியாவிற்குள் உள்ள விமான நிலையமாக இருக்கவேண்டும் இருந்தாலும் இதன் சிறப்பு என்னவென்றால் ஓரே நேரத்தில் நாம் தேடும் தேதியில் எந்ததெந்த விமானங்கள் செல்கின்றன அதன் நேரம், விலை மற்றும் நாம் தேடும் தேதியின் முன்னதாக மூன்று நாட்கள் பின்னதாக மூன்று நாட்கள் என தேடும் வசதி இருக்கிறது மற்றும் நாம் செல்லும் இடங்களில் நாம் தங்குவதற்கான ஹோட்டல் வசதியையும் இதன் மூலம் முன்பதிவு செய்து விடலாம் .இந்தியாவின் சிறந்த தளம் என்பதில் சந்தேகமில்லை

Yatra தளம் செல்ல கீழிருக்கும் படத்தை கிளிக்கவும்



இரண்டாவதாக MAKE MY TRIP, TRAVEL .TRAVELOCITY ,CLEAR TRIP, BARGAIN TRAVEL, SKYSCANNER, CHEAPOAIR இந்த இனையதளங்கள் வழியாக இந்தியாவிற்குள்ளே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இதன் வழியாக தேடலாம், இதன் வழியாகவே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்துகளையும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவிற்குள் இருக்கும் விமான சர்வீஸ்களையும் இன்னும் பிற வெளிநாடுகளுக்கான விமான சர்வீஸ்களையும் எளிதாக தேடமுடியும். இதன் சிறப்பு என்னவென்றால் ஓரே நேரத்தில் நாம் தேடும் தேதியில் எந்ததெந்த விமானங்கள் செல்கின்றன அதன் நேரம், விலை மற்றும் நாம் தேடும் தேதியின் முன்னதாக மூன்று நாட்கள் பின்னதாக மூன்று நாட்கள் என தேடும் வசதி இருக்கிறது மற்றும் நாம் செல்லும் இடங்களில் நாம் தங்குவதற்கான ஹோட்டல் வசதியையும் இதன் மூலம் முன்பதிவு செய்து விடலாம் இதுவும் சிறந்த தளம் என்பதில் சந்தேகமில்லை.

சம்பந்தபட்ட தளங்களுக்கு செல்ல அந்தந்த படத்தை கிளிக்குங்கள்















நண்பர்களை நீங்கள் விமாணப்பயணம் மேற்கொள்ளும் முன் நேரடியாக நீங்கள் டிக்கெட் எடுக்க விரும்பும் விமாணத்தின் இனையதளத்திற்கு சென்று தேடினால் அவர்களின் விமானத்திற்கான தகவல்கள் கிடைக்கும் நான் மேலே கொடுத்துள்ள தளங்களின் வாயிலாக தேடினால் நீங்கள் தேடும் தேதியில் எந்ததெந்த விமாணங்கள் அந்த வழியில் செல்கிறது அதன் விலை விபரம், நேரம் இன்ன பிற தகவல்களை ஓரே நேரத்தில் கண்டுபிடித்து விடலாம ஆனால் நீங்கள் பதிவு செய்ய விரும்பினால் நீங்கள் செல்லவிரும்பும் விமாணத்தில் இனையதளத்திற்கே சென்று டிக்கெட் எடுக்கவும் அல்லாது இவர்களின் தளம் வழியாக டிக்கெட் எடுத்தால் ஒரு டிக்கெட்டிற்கு சுமாராக 500 ரூபாய் வரை அதிகமாக இருக்கும் அல்லது அதற்கு மேலாகவும் இருக்கலாம் வெளி நாட்டில் இருப்பவர்கள் இதில் காண்பிக்கும் தொகையை தங்கள் நாட்டின் நாணயமதிப்பை கன்வெர்ட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் கடன் அட்டை இருந்தால் இதையே கூட உங்கள் பகுதி நேர தொழிலாக செய்யலாம் விருப்பமிருந்தால் மட்டும்.