Monday, December 12, 2011

பவர்ஸ்டார் பற்றிய புதிய பரபரப்புத் தகவல்கள்


தமிழ் சினிமாவில் முதல் இடத்தைப்பிடிக்கும் வரை,என் தாகம் அடங்காது என்ற அலட்சிய வெறியோடு ,மீண்டும் ஒரே நேரத்தில் இரு படங்களோடு களம் காணுகிறார், அண்ணன் பவர்ஸ்டார் சீனிவாசன்.

இன்றைய தினசரியில் வந்த ‘தேசிய நெடுஞ்சாலை’ விளம்பரத்தை நீங்களே பார்த்திருப்பீர்கள். இதோடு சேர்ந்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கட்டுமே என்று மன்னவன்’என்ற ஒரு படத்தையும் துவக்கியிருக்கிறார் நம்ம அண்ணவன்.

தேசிய நெடுஞ்சாலை’யில் தீவிரவாதிகளை டீல் பண்ணும் நம்ம பவர் ‘மன்னவனில் சாஃப்டாக லவ் மேட்டரை டச் பண்ணுகிறாராம்.இதில் நமது அண்ணியாக நடிக்கும் பாக்கியம் பெற்றவர் ஃபுளோரா.

அடுத்து டாக்டரோட மம்மியா சுகன்யா நடிக்கிறாங்க.நம்ம டாக்டருக்கு நெருக்கமான நர்ஸ் ஒருத்தரை ஒரு வாரமா வெரட்டி, ஒரு ஓரமா மடக்கி இந்தப்படத்தோட கதைய கறந்துட்டேன்.

கதைப்படி நம்ம டாக்டரு ஒரு ஸ்ட்ரிக்கான போலிஸ் ஆபிசரு.நம்ம ஆபிஸரோட பரம்பரையே ஒரு பொறுப்பான போலீஸ் பரம்பரைங்கிறதால,இவரும் அதே டைப் ஆளுதான். ஆனா கதையில ஒரு ட்விஸ்ட் வேணுமே.இங்கதான் அண்ணன் ஒரு புது ரூட் புடிக்கிறார். எல்லாமே நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு’ என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, திடீரென, ‘’இவரு போலீஸ் இல்லடா” னு எல்லாரும் சொல்றமாதிரி நடந்துக்க ஆரம்பிச்சுடுறார். மம்மி,பொண்டாட்டி,புள்ளைங்க கூட நம்ம ஆபிசரை வெறுக்க ஆரம்பிச்சுடுறாங்க.அப்புறம் என்ன ஆச்சின்னு வாயப்பொளக்காதீங்க.மீதிய வெண்திரையில அண்ணனே காட்டுவாரு.

அண்ணி ஃபுளோரா பத்தி ஒரு முக்கியமான தகவல சொல்லமறந்துட்டேன். இவங்க ஏற்கனவே ‘கேப்டன்’ கூட ஜோடியா நடிச்சிருக்காங்க..இவங்களோட ஜோடி சேர்ந்ததுக்கு அப்புறமாதான், கேப்டனுக்கு அரசியல் சுக்ரதிசை ஆரம்பிச்சி 29 எம்.எல்.ஏக்களோட எதிர்க்கட்சி தலைவராக்கியிருக்கார்.

இந்த செண்டிமெண்ட் தெரிஞ்சிதான் நம்ம பவர்ஸ்டாரும் அண்ணி ஃபுளோராவ புக் பண்ணினாராம்.
சரிங்க ‘மன்னவன்’ படத்தோட கதையை சொன்னீங்க ‘தேசிய நெடுஞ்சாலைய பத்தி ஒண்ணும் சொல்லாம போறீங்களே, என்று ஆதங்கப்படுபவர்களின் பட்டியல் எவ்வளவு பெருசு என்று எனக்குத்தெரியும்.
மறுபடியும் சந்திக்கத்தானே போறோம்.கொஞ்சம் பொறுங்க பாஸ்.

No comments:

Post a Comment