Monday, December 12, 2011

ராணுவ ரகசியத்தை போட்டுக் கொடுத்த Google Map போட்டோ!!

ஏவியேஷன் விவகாரங்களை வெளியிடும் பிளைட் குளோபல் ஊடகம், “கூகுள் தொழில்நுட்பத்தில் யாரும் அமெரிக்காவில் உள்ள விமானத் தளம் ஒன்றை சேர்ச் பண்ண முடியும். அந்த விமானத் தளத்தின் ரன்வேயை zoom பண்ணி மிக நெருக்கமாக கண்காணிக்கவும் முடியும். அமெரிக்காவின் அதி ரகசிய உளவு விமானம் என்று பெருமையடிக்கப்படும் RQ-170, ரகசியமாக நிறுத்தி வைக்கப்படும் இடத்தையும் கண்டுபிடிக்க முடியும்” என்று அறிவித்துள்ளது.


இந்த RQ-170 மாடல் உளவு விமானம்தான், கடந்த வாரம் ஈரானால் கைப்பற்றப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் சம்பவம், கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு உலை வைக்கிறது என்ற சர்ச்சையை எழுப்பி விட்டிருக்கின்றது. கூகுள் நிறுவனம் டெவலப் செய்து வைத்துள்ள அருமையான மேப்பிங் டெக்னாலஜி, அமெரிக்க உளவு விமானங்களின் ரகசியங்களை பகிரங்கப் படுத்துகின்றது என்பதே குற்றச்சாட்டு.
கூகுள் மீதான இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்குமுன், பிளைட் குளோபல் ஊடகம், சிறியதாக ஒரு

யுக்கா-லேக் விமானத்தள ரன்வேயில் Predator அல்லது Reaper drone உளவு விமானம்

ஆராய்ச்சியையும் செய்தது. அமெரிக்காவின் சிறிதும் பெரிதுமான விமானத் தளங்கள் எங்கெல்லாம் உள்ளன என்பதை கூகுள் மேப் வெப்சைட் மூலம் தேடி, ஒரு பட்டியலைத் தயாரித்தது. அந்தப் பட்டியலை, அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள விமானத் தளங்களின் விபரங்களுடன் ஒப்பிட்டும் பார்த்தது.

அப்போது, அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்திராத ரகசிய விமானத் தளம் ஒன்றை, கூகுள் மேப் வெப்சைட் மூலம் கண்டுபிடித்தது பிளைட் குளோபல் ஊடகம்.

இந்த ரகசிய விமானத்தளம், அமெரிக்காவின் நெவாடா (western, mountain west, and south-western regions) மாநிலத்தில் யுக்கா-லேக் என்ற அதிகம் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் உள்ளது. இந்த விமானத் தளத்தில், அமெரிக்கா தற்போது ஈரானிடம் பறிகொடுத்துள்ள RQ-170 உளவு விமானத்துக்கு, இந்த ரகசிய விமானத் தளத்தில் வைத்துத்தான் ஆரம்ப டெஸ்டிங்குகள் செய்யப்பட்டன என்கிறது பிளைட் குளோபல்.

இந்த விமானத் தளத்தை கூகுள் மேப் வெப்சைட் மூலம் கண்காணித்த பிளைட் குளோபல், குறிப்பிட்ட தினம் ஒன்றில் விமானத் தளத்தின் ரன்வேயில் சிறிய விமானம் ஒன்று புறப்படத் தயாராக நின்றிருப்பதை பதிவு செய்திருக்கின்றது. கூகுள் மேப் போட்டோவில் இருந்து, யுக்கா-லேக் விமானத்தள ரன்வேயில் நின்றிருந்த விமானம், Predator அல்லது Reaper drone உளவு விமானம் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றது.

“சர்வ சாதாரணமாக இந்த ரகசியத்தை கூகுளின் உதவியுடன் யாராலும் அறிந்துகொள்ள முடிகின்றது என்றால், ஈரானிய உளவுத்துறை எவ்வளவு ரகசியங்களை அறிந்திருக்கும்? அமெரிக்க உளவு விமானத்தை அவர்கள் கைப்பற்றியதில் ஆச்சரியம் ஏதுமில்லை” என்றும் கூறுகின்றது பிளைட் குளோபல்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்காவின் மீடியா ஜயன்ட் Fox New, கூகுளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, கூகுள் பதிலளிக்க மறுத்துவிட்டது.

No comments:

Post a Comment