Monday, December 12, 2011

ரஜினி வீடு முற்றுகை இடப்படும் கோச்சடையான் படத்தில் அசின் நடித்தால்–IMKஅறிவிப்பு

கோச்சடையான் படத்தில் அசின் நடித்தால் ரஜினி வீடு முற்றுகை – இந்து மக்கள் கட்சி

அசின் ரஜினி கோச்சடையான் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சவுந்தர்யா இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா, அசின், வித்யாபாலன் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியுடன் நடிக்க அசின் ஆர்வமாக உள்ளார். ஆனால் அசினை தேர்வு செய்ய எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏற்கனவே திரையுலகினர் தடையை மீறி இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றதை பலரும் கண்டித்தனர். அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. நடிகர் சங்க நிர்வாகிகளும் அசினை கடுமையாக விமர்சித்தனர்.

பிறகு அப்பிரச்சினை நடிகர் சங்கத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. தற்போது முல்லை பெரியாறு பிரச்சினை தலை தூக்கியுள்ளதால் மலையாள நடிகர், நடிகைகளை தமிழ் படங்களில் நடிக்க வைக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இது குறித்து அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கண்ணன், கூறும்போது அசின் இலங்கை சென்ற போதே அவர் தமிழர்களுக்கு எதிர்ப்பான நிலை எடுத்ததை அறிய முடிந்தது.

முல்லைப்பெரியாறு பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மலையாள நடிகையான அசினை ரஜினி ஜோடியாக்க கூடாது. மீறி செய்தால் படப்பிடிப்புகளில் போராட்டம் நடத்துவோம். ரஜினி வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்

No comments:

Post a Comment