Monday, December 12, 2011

கொலைவெறி இப்படி பிச்சுகிட்டு போகும்னு கனவிலும் நினைக்கலை..! : தனுஷ்

"இந்த கொலவெறி என்னோட முதல் கொலவெறி இல்ல" தனது கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் லட்சக்கண‌க்கான‌ ஹிட்டுகளை அள்ளிக்குவிக்கும் நேரத்தில் அதைப்பற்றிய பரபரப்பான, விறுவிறுப்பான ஸீக்ரெட் முடிச்சை அவிழ்த்துள்ளார் நடிகர் தனுஷ்.

"முதல்ல நாங்க டம்மியா கம்போஸ் செஞ்சு வச்சிருந்த கொலவெறி பாட்டை யாரோ என்னோட கம்யூட்டர்ல இருந்து எடுத்து இன்டர்நெட்ல விட்டுட்டாங்க. அப்ப நான் மும்பையில ஒரு மீட்டிங்ல இருந்தேன். என்னோட நண்பன் எனக்கு போன் பண்ணி " மச்சி நீ பாடுன பாட்டு சூப்பர்டா.. இப்பதான் யூடியூப்ல பாத்தேன்.. இதுவரைக்கும் மொத்தம் 22 பேர் பாத்திருக்காங்கடான்னு" சொன்னான். எனக்கு பதட்டமாபோச்சு. ஏன்னா, இந்த பாட்டு முறைப்படி வெளிவரணும். 

இதுல இசையமைப்பாளரா அறிமுகமாகப்போற அநிருத்தோட வாழ்க்கை, பாட்டெழுதின என்னோட வாழ்க்கை, முதல் படம் மூலமா இயக்குனரா அறிமுகமாகுற மனைவி ஐஸ்வர்யாவின் வாழ்க்கை உட்பட‌ எல்லாமே அடங்கியிருக்கு. அதோட, இது எதார்த்தமா கம்போஸ் பண்ணியிருந்தாலும் எழுதியிருந்தாலும், இதோட ஹிட் ரேஞ்ச் நிச்சயம் பிச்சிகிட்டு போகும்னு கேல்குலேட் பண்ணி வச்சிருந்தோம். 

இப்படியான சூழ்நிலையில தான் சோனி நிறுவனத்துக்கு போன் பண்ணி உடனே அந்த பாட்டை தடுத்து நிறுத்துங்க.. இன்னும் மூணே நாள்ல ரிலீஸ் பண்ணாலாம்னு கேட்டுகிட்டேன். உடனே அவங்களும் நடவடிக்கை எடுத்து யூடியூப்ல பாட்டை நிறுத்திட்டாங்க. பிறகு தான் இப்ப நீங்க பாக்குற 'லைம் லைட்' விஷுவல் எடுத்து வெளியிட்டோம்.

பாடல் வெளியிட்ட போது, இசையமைப்பாளரான‌ அநிருத் என்கிட்ட சொன்னான் 'நீ வேணா பாரு தனுஷ்.. கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் பேராச்சும் இதை பாப்பாங்க'ன்னு. ஆனா முதல் நாளே 83 ஆயிரம் பேர் பாத்திருக்காங்க. அடுத்த ஐந்து நாளுக்குப் பிறகு கிட்டத்தட்ட நாப்பத்தேழு லட்சம் பேர் பாத்திருக்காங்க. நான் ஹிட்டாகும்னு எதிர்பார்த்தனே ஒழிய இப்படி பிச்சுகிட்டு போகும்னு நினைக்கல. இது ஒரு 'ஆக்சிடென்ட்', ஆனா சந்தோஷமான ஆக்சிடென்ட்" என தன்மையான குரலில் பேசினார் தனுஷ்.

இந்தியா டுடே நடத்தும் 'யூத் சம்மிட் 2011' நிகழ்ச்சியில் வி.ஐ.டி. பல்கலைகழக மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டு தனுஷிடம் கொலைவெறி கேள்விகளைக் கேட்டனர். அனைவருக்கும் பொறுமையாக பதிலளித்தார். 

இந்த பாடல் பெண்களை இழிவு படுத்துவதாகவும் இளைஞர்களை சீர்குலைக்கும் நோக்கோடும் எழுதப்பட்டுள்ளதே என்பதாக சில கேள்விகள் தொடர்ந்து வந்தன. அதற்கு பதிலளித்த தனுஷ், " பாஸ்.. முதல்ல ஒண்ணை தெளிவா புரிஞ்சுக்குங்க.. இது ஆல்பம் இல்ல.. ' 3' ங்கற படத்தோட ஒரு பாட்டு. அந்த படத்து ஹீரோயின் ஹீரோவ காயப்படுத்தற மாதிரி ஒரு சீன் வரும். அதுக்கான சிச்சுவேஷனுக்கு எழுதப்பட்டது இந்த பாட்டு. ஸோ நீங்க நினைக்கிற மாதிரி எந்த உள்குத்தும் இதுல இல்ல. 

அதே போல. வேணும்னா இந்த பாட்ட கேளுங்க.. வேணாம்னா விட்டுடுங்க. சொல்லப்போனா பசங்களை விட பொண்ணுங்கதான் இந்த பாட்டை அதிகம் ரசிக்கிறாங்க தெரியுமா.. 

சமீபத்துல‌ வட இந்தியாவுக்கு போயிருந்த போது, திடீர்னு ஒரு பொண்ணு வந்து 'ஏய் நீதான அந்த கொலவெறி பையன்னு கேட்டு, என்னோட சேர்ந்து போட்டோ எடுத்துகிட்டு ஆட்டோகிராப் வாங்கிட்டு போனாங்க. இது எனக்கு பர்ஸ்ட் டைம் பாஸ். அதுவும் நார்த் இந்தியன் பொண்ணு.. ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட்...!

நிறைய பேர் உங்க அடுத்த பாட்டும் இதேபோல இருக்குமா? எப்ப வரும்? இப்படியெல்லாம் கேக்குறாங்க. அவங்களுக்கு என்னோட பதில் இதுதான்.. எங்கிட்ட இது போல நிறைய இருக்கு. ஆனா இதேபோல வரும்னு எதிர்பாக்காதீங்க. ஏன்னா மத்ததையும் நீங்க பாக்கணும் இல்லையா..! 

சிலர் என்கிட்ட சொன்னதுண்டு, 'பேசாம நடிக்கிறதவிட‌ பாட்டு பாட போயிரலாமே'ன்னு. டெக்னாலஜி தான் என்னோட கேவலமான வாய்ஸை இப்படி கேக்கிற மாதிரி மாத்தியிருக்கு. எனவே மக்களே, ஒரு தமிழன் படைத்த உலக இசை அப்படி இப்படின்னு யாரும் சொன்னாகூட முழுக்க முழுக்க இந்த கொலவெறியை தமிழ் மட்டும் பேசதெரிந்த என்போன்ற இளைஞர்களுக்கு சமர்பிக்கிறேன்...!" 

'சூப்'பரா பேசறீங்க, போங்க !

No comments:

Post a Comment