சினிமா உலகில் நிலைத்து நிற்க நடிக்க தெரிந்தால் மட்டும் போதாது. கேமராவுக்கு பின்னால் பல விஷயங்களை அட்ஜெஸ்ட் செய்தாக வேண்டும் என்று நடிகை ஓவியா கூறினார். களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா.
சில படங்களில் சிறிய வேடங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது களவாணி படத்துக்கு பிறகு எப்படிப்பட்ட வேடம் தேர்வு செய்வது என்று தெரியாமல் இருந்தேன். ஃபீல்டுக்கு புதியவள் என்பதால், சிறிய வேடங்களையும் ஏற்றேன். இது தவறு என்று தெரிந்த பிறகு தமிழ் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு கன்னடத்தில் உருவான களவாணியின் ரீமேக்கில் நடிக்க சென்றேன்.
நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபோதுதான் மெரீனா கதையை பாண்டி ராஜ் சொன்னார். ஒப்புக்கொண்டேன். அடுத்து சுந்தர்.சி. இயக்கத்தில் மசாலா கேப் படத்தில் நடிக்கிறேன். இப்படங்கள் வந்தால் எனது திறமை மேலும் வெளிப்படும். சினிமாவில் நிலைத்து நிற்க நடிப்பு மட்டும் போதாது.
புத்திசாலித்தனம் வேண்டும். அதைவிட மற்றவர்கள் செய்யும் தந்திரங்கள், பாலிடிக்ஸ் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை சமாளிக்கும் திறமை, தைரியம் இருக்க வேண்டும். சினிமா உலகில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பதால் கேமராவுக்கு பின்னால் நிறைய விஷயங்களை அட்ஜெஸ்ட் செய்தாக வேண்டி உள்ளது.
நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள பழகிவிட்டேன். நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும். வேற்று மொழி வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன். 10 ஆண்டாவது நடிக்க வேண்டும் என்ற ஐடியா எதுவும் எனக்கு இல்லை. வாய்ப்புகள் வரும் வரை நடிப்பேன்
|
No comments:
Post a Comment