விக்ரம், தீக்ஷா சேத், விஸ்வநாத் மற்றும் பலர் நடித்து வெளிவர இருக்கும் படம் 'ராஜபாட்டை'. சுசீந்திரன் இயக்க, யுவன் இசையமைத்து இருக்கிறார். PVP சினிமாஸ் தயாரித்து இருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று ( டிசம்பர் 09 ) நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் இருந்து சில தகவல் துளிகள்:
* அம்மு, பாலாஜி தொகுத்து வழங்க, சற்று லேட்டாகவே துவங்கியது இசை வெளியீட்டு விழா.
* ரசிகர்களின் பலத்த ஆரவாரத்திற்கு இடையே விக்ரம் அரங்கினுள் வந்தார்.
* 'ராஜபாட்டை' படக்குழுவினர் அனைவரையும் மேடைக்கு அழைத்து கெளரவப்படுத்தினார்கள். அவற்றை தொடர்ந்து விக்ரம் - சுசீந்திரன் இருவரைப் பற்றியும் வீடியோ பதிவு திரையிடப் போவதாக அறிவித்தார்கள். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது பாதியில் நிறுத்தப்பட்டது.
* விக்ரம் : " சுசீந்திரன் இயக்கிய படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். 'நான் மகான் அல்ல' எனக்கு மிகவும் பிடித்த படம். அதன் பிறகு வந்த 'அழகர்சாமியின் குதிரை' படமும் எனக்கு பிடித்தது தான். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது 'ராஜபாட்டை' படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. 'தில்', 'தூள்', 'சாமி' படங்களின் வரிசையில் எனது ரசிகர்களுக்காக நடித்த படம் தான் 'ராஜபாட்டை' ".
* சுசீந்திரன் : " விக்ரம் சாரை வைத்து நான் படம் இயக்கியது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். 'தெய்வத்திருமகள்' படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்தேன். 'ராஜபாட்டை' படம் ஜாலியான படம். ஆனால் இதிலும் விக்ரம் சாரின் பெரும் உழைப்பு அடங்கி இருக்கிறது. 17 கெட்டப்களில் இப்படத்தில் நடித்து இருக்கிறார்.
* தீக்ஷா சேத் : " நான் விக்ரமின் தீவிர ரசிகை. எனது முதல் தமிழ்ப்படமே விக்ரம் சாருடன் நடிக்க, வெளிவருவதில் மகிழ்ச்சி. ஒருவேளை நான் இப்படத்தில் நடிக்காமல் இருந்திருந்தாலும், விக்ரம் ரசிகையாக இவ்விழாவில் பங்கேற்று இருப்பேன்."
* ரீமா சென் : " நான் ஏற்கனவே விக்ரமுடன் இணைந்து 'தூள்' படத்தில் நடித்து இருக்கிறேன். 'தூள்' படத்தை விட ராஜபாட்டை படத்தில் விக்ரம் இன்னும் இளமையாக இருக்கிறார் "
* இயக்குனர் விஜய் : " நான் விக்ரம் சாரின் தீவிர ரசிகன். 'தெய்வத்திருமகள்' படத்தினை தொடர்ந்து, எனது அடுத்த படத்திலும் அவரோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. விக்ரம் ஒரு அற்புதமான மனிதர். வாழ்க்கையில் விக்ரமை FOLLOW பண்ண விரும்புகிறேன் " என்றார்.
* யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றும் இசைக்கலைஞர்களை மேடைக்கு அழைத்து, அவர்களைக் கொண்டு ஒரு பாடலை வெளியிட்டனர்.
* தீக்ஷா சேத், ரீமா சென் இணைந்து ஒரு பாடலையும், சுசித்ரா, மாலதி இணைந்து ஒரு பாடலையும் வெளியிட்டார்கள். அப்பாடலுக்கு நடன கலைஞர்கள் நடனமாடினார்கள்.
* 'பொடி பையன் போலவே', 'வில்லாதி வில்லன்' ஆகிய பாடல்கள் திரையிடப்பட்டது.' 'வில்லாதி வில்லன்' பாடலில் விக்ரம் பல்வேறு கெட்டப்களில் சலோனியுடன் இணைந்து ஆடி இருந்தார்.
*ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் விக்ரம். அப்போது எப்போது இயக்குனர் ஆவிர்கள் என்ற கேள்விக்கு விக்ரம் " தமிழ் திரையுலகில் மணிரத்னம், பாலா, சுசீந்திரன், ஹரி, விஜய் என பல நல்ல இயக்குனர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். கண்டிப்பாக வரும் காலத்தில் இயக்குனர் ஆவேன் " என்றார்.
* இறுதியாக படக்குழுவினர் அனைவரும் மேடையேறி படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்கள். படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. ரசிகர்களுக்காக மீண்டும் ஒருமுறை டிரெய்லரை திரையிட்டார்கள். அதற்குப் பிறகும் ரசிகர்கள் ONCE MORE கேட்டார்கள்.
* இயக்குனர் சுசீந்திரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
|
No comments:
Post a Comment