Friday, June 17, 2011

காதல்+திருமணம்=விவாகரத்து?

இன்றைய தேதியில் மிகவும் முக்கியமான விவாதம்.

கணேசனும், தாராவும் சூப்பரா விவாதம் பண்றாங்க. ஆனா தாரா சொன்னதுதான் லேசா இடிக்குது. நான் என் கணவரை காதலிக்கத் தொடங்கியபோது, அது திருமணத்தில் முடியுமா என்று கூட எனக்குத் தெரியாது. பல வருடங்கள் காத்திருந்துதான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அதெப்படி? காதலிக்கும்போது அவர் காதலன்தானே? கல்யாணம் முடிந்தால்தானே கணவன்? தாராக்கா (நான் சின்னப்பொண்ணு தான்) எக்ஸ்ப்ளைன் பண்ணுங்களேன்.

பத்மா சொல்றாங்க திருமணத்திற்கு 18 பொருத்தம் வேண்டுமென்று...நான் கேள்விப்பட்டு 18 பத்தாகி, ஆறாக சுருங்கிப் போயிடுச்சின்னு. எனக்கென்னவோ எல்லாமே ஏழாம்பொருத்தமாகத்தான் தெரியுது.

சரி சின்னப்பொண்ணு என்னதான் சொல்ல வர்றேன்னா...

1. திருமணம் என்றால் என்ன?
விவாகரத்துக்கு முன்னால் போடப்படும் (ஆண்-பெண், ஆண்-ஆண், பெண்-பெண், ஆ(பெ)ண்-ஆ(பெ)ண்) வாழ்க்கை ஒப்பந்தம்

2. திருமணத்தில் எந்தனை வகை உண்டு?
லாங்-டெர்ம், ஷார்ட்-டெர்ம் (ஒப்பந்தக்காலத்திற்கும் ஓர் ஆயுள் உண்டல்லவா?)

3. எப்படி காதல் திருமணத்தைக் குறிப்பிடுவது?
திருமணத்தால் காதல் முடிவதில்லை அல்லது காதல் திருமணத்தில் முடிவதில்லை (காதலித்தவரையே கைப்பிடிக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும்)

No comments:

Post a Comment