எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன. அதிலும் நிஜத்தை விட நேர்த்தியான வடிவத்தில். போலிகளினால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. போலிகளை ஒழிக்கவே முடியாதா?
போலிகளினால் எப்போதுமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நிஜங்கள் தீங்கு செய்யும் போது, போலிகள்தான் குறைந்தபட்ச , தற்காலிக பாதுகாப்பையே தருகின்றன.
‘கோகோ கோலாவில் அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது. அதை குடிப்பதினால் உடல் நலத்திற்கு தீங்கு’ என்று விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அந்த நிறுவனம் தன்னுடைய சக்தி வாய்ந்த விளம்பரத்தினால், ‘கோக் குடிப்பது நவீன நாகரிகத்தின் அடையாளம்’ என்று மீண்டும் மீண்டும் மக்களை குடிக்க வைக்கிறது.
கோக்கில் போலி வந்தால் அது மக்களை பூச்சிக் கொல்லி மருந்திலிருந்து காப்பாற்றுகிறது.பன்னாட்டு நிறுவனத்தின் கொள்ளையையும் குறைக்கிறது.
கோக்கைப் போலவே மக்களுக்கு கெடுதலை செய்கின்ற ‘சிவாஜி’ போன்ற படங்களை மக்கள் பார்க்க ஆசைப்பட்டால், ஒரு டிக்கெட் 1000 ரூபாய் கொடுத்து பார்க்க வேண்டியிருக்கிறது. அதையே திருட்டு வீசிடியில் பார்த்தால் ஒரு குடும்பமே 50 ரூபாயில் படம் பார்த்துவிடுவார்கள்.
குறைந்த பட்சம் ஏவிஎம் செட்டியார்கள், ரஜினிகாந்த் இவர்களின் கூட்டுக் கொள்ளையில் இருந்து மக்களை திருட்டு விசிடி போன்ற போலிகள்தானே பாதுகாக்கிறது.
|
No comments:
Post a Comment