Wednesday, December 21, 2011

மனைவியின் "அந்த" இடத்துக்கு பூட்டு போட்டுவிட்டு போன கணவன்

கற்புப் பட்டி திறந்து கிடந்ததால் மனைவியை தாக்கியவருக்கு 7 மாத சிறை!! 


வெளியூருக்குச் செல்லும்போது மனைவியின் கற்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மனைவிக்கு 'கற்புப் பூட்டு' பொருத்தப்பட்ட பட்டியொன்றை அணிவித்து சென்ற நபர் ஒருவர், திரும்பிவந்தபோது அக் கற்புப் பூட்டு திறந்து இருந்ததை கண்டு அவரை கடுமையாக தாக்கிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
இந்நபருக்கு மனைவியை தாக்கிய குற்றத்தற்காக 7 மாத சிறை தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவின் தென்பகுதியில் உள்ள செங்குடு தொடர்மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்த ஹீ ஸென் (வயது 29) என்பவருக்கு இவ்வாறான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது."செய்தி நியூயாழ்.கொம்"

மனைவி மீது சந்தேகம் கொண்ட ஹீ ஸென், பாலியல் உறவுகொள்வதைத் தடுக்கும் 'கற்புப் பட்டி' எனப்படும் இப்பட்டியை தான் வெளியூருக்கு செல்லும் போது மனைவியான ஸியாவோ டியானுக்கு (வயது 20) அணிவித்து சென்றுள்ளார். 

ஓர் நாள் இரவு திரும்பி வந்து பார்த்தபோது ஸியாவோ டியானிற்கு தான் அணிவித்து சென்ற கற்புப் பட்டி திறந்திருந்தமையை அவதானித்து ஹீ ஸென், ஆத்திரமடைந்து அவரை தாக்கியுள்ளார்.

ஆனால், உண்மை என்னவென்றால், ஹீ ஸென் அவசரத்தில் அப்பூட்டை ஒழுங்காக பூட்டாமல் சென்றுவிட்டாராம். திரும்பி வந்தபோது அது திறந்திருப்பதைக் கண்டு, அவர் மனைவியை சந்தேகப்பட்டுவிட்டார்.

'அவர் தொழிலை பெற்றுக்கொள்ளும் அவசரத்தில் கற்புப் பட்டியை முறையாக பூட்டாமல் சென்றுவிட்டார். ஆனால் யாரும் இதைப்போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டியதில்லை. நான் ஒரு அடிமையில்லை. இது உண்மையில் மிக மோசமானது' என்று நீதிபதியிடம் ஸியாவோ டியான் தெரிவித்தார்.




செய்தியை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு!

No comments:

Post a Comment