Wednesday, December 21, 2011

பள்ளிக்கூடம் மொட்டை மாடியில் 5 மாணவர்கள் 2 மாணவிகள்! நடந்தது என்ன? ஒரு திடுக் ரிப்போர்ட் !

கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.


6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள இப்பள்ளியில், சுற்று வட்டாரத்தில் இருக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவ & மாணவிகள் படிக்கின்றனர்.

இந்தப் பள்ளியில் போதுமான கழிவறை வசதி உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை. வகுப்பு முடிந்த பிறகு பள்ளியை பூட்டுவதும் இல்லை. பள்ளிக்கு வாட்ச்மேனும் கிடையாது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளிக்குப் பொதுவிடுமுறை. அன்று மாணவ, மாணவிகளோ, ஆசிரியர்களோ அல்லது அலுவலக ஊழியர்களோ யாரும் பணிக்கு வரவில்லை.

ஆனால், பிளஸ் 2 படிக்கும் 5 மாணவர்கள், பிளஸ் 1 படிக்கும் 2 மாணவிகள் வந்தனர். பள்ளியின் மொட்டை மாடிக்குச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். (அதென்ன கணக்கு….. 5 மாணவர்களுக்கு 2 மாணவிகள் என்பது?)

அந்தக் காட்சியை செல்போனிலும் பதிவு செய்து கொண்டனர். (சபாஷ்…. என்னமா வளந்திருக்காங்க?)

பின்னர் அந்தக் காட்சிகளை புளூத்டூத் மூலம் சக மாணவ & மாணவிகளின் செல்போன்களுக்கும் பரப்பியுள்ளனர். (யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!)

இதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி நிர்வாகத்துக்கு ஆதாரங்களுடன்டன் தகவல் தெரிவித்தனர்.

அவர்களைவிட அதிர்ச்சியடந்த பள்ளி நிர்வாகம், அந்த 5 மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் (டிசி) கொடுத்துப் பள்ளியை விட்டு வெளியேற்றியது. (மாணவர்களுக்கு ஒரு நீதி, மாணவிகளுக்கு ஒரு நீதியா?)


இந்நிலையில் நேற்றுக் காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு கூடினர்.

பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்துக் கோஷமிட்டனர். அத்துடன் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 2 மாணவிகளையும் உடனே பள்ளியில் இருந்து நீக்க வேண்டும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தைக் கூட்ட வேண்டும், காவலாளி ஒருவரை நியமிக்க வேண்டும், பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளைப் பூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷமிட்டனர்.

நீண்ட நேரப் போராட்டத்திற்குப்பிறகு, இந்தக் கோரிக்கைகளை பள்ளி நிர்வாகம் ஏற்ற பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

2020-ல் வல்லரசாகி விடலாம்…. சந்தேகமே இல்லை!

No comments:

Post a Comment