Wednesday, December 21, 2011

“யம்மாடி…பறக்குது துப்பட்டா!”


சுடிதார்,சல்வார்,ஜீன்ஸ் எல்லாமே சுகமான உடைகள்தான்.

சேலையைவிட‌ அதிகமாகத்தான் எல்லா இடங்களையும் மறைக்கிறது. முந்தானை மாதிரியோ, தாவணி மாதிரியோ காற்றில் பறந்துவிடும் என்கிற கவலையுமில்லை. வேறுவகையிலும் கூட‌ கொஞ்சம் பாதுகாப்பானதுதான். ஆனால்,அதை அப்படியா நம் பிள்ளைகள் பயன்படுத்துகிறார்கள்?

பள்ளியில், கல்லூரியில், பணியிடங்களில், கடைவீதியில், கோயிலில்….. எத்தனை பெண்களைப் பார்க்கிறோம்?. தோளில் போட்டு மறைக்கவேண்டிய துப்பட்டாவை… நெல்லறுக்கப்போகிற விவசாயி மாதிரி, கழுத்தில் சுற்றிக்கொண்டும், தலையில் ஸ்டைலாகக் கட்டிக்கொண்டும், தோளில் ஒருபக்கமாகத் தொங்க விட்டுக்கொண்டும்… என்னென்ன மாயம் செய்கிறார்கள்? இப்படி ஆட்டம் கா(க)ட்டினால்… பாவம், பசங்கதான் என்ன செய்வாங்க?

இப்படிப்பட்ட பெண்களுக்கு ஒரு நல்ல(?) சேதி.

திருச்சியில் இருக்கிற‌ ஐயப்பன் கோயிலுக்கு மட்டும் இதுமாதிரியான பெண்கள் வந்தால், கோயில் நிர்வாகத்தினரே அவர்களைத் தடுத்துநிறுத்தி, அவர்களுக்குத் துப்பட்டாவைக் கொடுத்து அணியச் செய்துவிடுகிறார்கள். பிறகு திரும்பிச்செல்லும்போது துப்பட்டாவை வாங்கிவைத்துக் கொள்கிறார்கள்.

இதுபோலவே எல்லா இடத்திலும் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது பெருமைக்குரிய‌ விஷயமல்ல.

சுடிதாரோ, புடைவையோ எதுவாயினும் அதை எப்படி அணிகிறோம் என்பதில்தான் அழகும் மரியாதையும் இருக்கிறது. மடிசார் என்கிற உடையைக்கூட லோ ஹிப்புடன், இடுப்பைக் காட்டி, முக்கால் முதுகு காட்டும் ரவிக்கையுடன் பிதுக்கிக்கொண்டு திரைப்படத்தில் காட்டும்போது… சுடிதாரே பரவாயில்லை என்றுகூடத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment