பீஃப் (மாட்டு இறைச்சி) சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலை ஆராய்ச்சியாளர் பென்னி க்ரிஸ் எதர்டன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதற்காக, எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வழக்கமான உணவுடன் மிக குறைந்த அளவு கொழுப்பு சத்துள்ள பீஃப் கொடுக்கப்பட்டது. 4 வாரங்களுக்கு பிறகு, அவர்களது கொழுப்பு அளவு 10 சதவீதம் குறைந்து இருந்தது.
இதன்மூலம், தினமும் 110 கிராம் முதல் 150 கிராம் வரை பீஃப் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு கரைகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாட்டு இறைச்சியில் உடலுக்கு தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் உள்ளன. மிதமாக எடுத்துக் கொள்வதால் இதயமும் வலுப்பெறுகிறது. இதய நோய்கள் வராமலும் தடுக்க முடியும். இவ்வாறு ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment