Wednesday, December 21, 2011

பெண்களின் கவர்ச்சி உடைகளால் உடைபடும் ஆண்களின் மனசு !

இன்று காலையில் எதார்த்தமான ஒரு நிகழ்வைச் சந்திக்க நேர்ந்தது.


“இது ஒரு டிரஸ்சுனு மாட்டிக்கிட்டு, கல்யாண வயசுல நிக்கிற பொண்ணு கடைவீதி வரைக்கும் போயிட்டு வந்துட்டா பாரு” என்று– “நைட்டி”யுடன் கடைவீதி வரை சென்றுவந்த தன்னுடைய மகளை சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் அந்தக் கிராமத்துத் தாய்.

நாகரிகம் என்கிற பெயரால் பழங்காலத்துப் பண்பாடுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவதற்கு இன்னும் தயங்குகிற கிராமம் அது.

நைட்டி என்பது அவ்வளவு ஒன்றும் மோசமான உடுப்பு அல்ல. மேலே ஒரு டவலைப் போட்டுக்கொண்டால் கடைவீதி வரை தாராளமாகப் போய்வரலாம். இந்த டிரஸ்சுக்கே இப்படின்னா?… பட்டனத்துப் பொண்ணுங்க போட்டிருக்கிற டிரஸ்சப் பாத்தா என்ன நடக்கும்? டங்கு வாரு அந்து போயிராது?
இந்தக் கிராமத்துப் பண்பாட்டின் எச்சமாக மிச்சம் இருப்பது இன்னும் இது ஒன்றுதான்.





பட்டணத்துத் தெருக்களின் பலஇடங்களில் இதுபோன்ற “ஜில்”லென்ற காட்சிகளைக் காணலாம்.
உடம்பின் பாகங்களை இறுக்கிப்பிடிக்கும் டைட்டான ஜீன்ஸ், ஒப்புக்காக மேலே ஒரு பனியன், அந்த் பனியனின் மார்புப் பகுதியில் நெருப்பைப் பற்றவைக்கும் வாசகங்கள்…
இன்னும் ஒரு சிலர் போட்டிருக்கிற உடைகளோ, போட்டிருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாத அளவிற்கு உடம்பின் பெரும்பாலான பகுதிகளை உள்ளே வெளியே என வஞ்சகமில்லாமல் காட்டும்….
அதிலும் சிலர் ‘ஸ்கர்ட்” என்கிற பெயரால் முழங்கால் வரை மட்டுமே அணிந்துவந்து, கால்மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு பண்ணுகிற அவஸ்தை….

சும்மா இருக்கும்போதே சுடுதண்ணி ஊத்துனமாதிரி தவிக்கிற விழிகளை– இப்படி வந்தால் எப்படிக் கட்டுப்படுத்துவது?


சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற ‘சிவாஜி’ படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு, கவர்ச்சி பொங்கக் குட்டைப் பாவாடை அணிந்து வந்து நடிகை ஸ்ரேயா கலக்கியெடுத்தார். தம்மாத்தூண்டு டாப்ஸ்… எப்போது நழுவுமோ எனப் பயப்பட வைத்த லூஸ் ஸ்கர்ட்… இதுதான் அந்த விழாவில் நடிகை ஸ்ரேயாவின் உடை.. மேடையில் அவர் குட்டைப்பாவாடையுடன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த விதம், ரசிகர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது….. (அது அப்போதைய முதல்வர் கலைஞர் கலந்துகொண்ட நிகழ்ச்சி என்பதுதான் ஹைலைட்). சும்மா விடுவார்களா புகைப்படக்காரர்கள்… சுட்டுத் தள்ளினர் ஸ்ரேயாவை. நிகழ்ச்சியை சுத்தமாக மறந்துவிட்டு ஸ்ரேயாவையே சுற்றிச் சுற்றி வந்தனர்.


அதேபோல, வெள்ளை உள்ளாடை வெளியில் தெரியும் அளவுக்குக் குட்டைப் பாவாடை அணிந்து வந்து ரசிகர்களை இன்பக்கடலில் மூழ்கவைத்த நடிகைகள் ப்ரியாமணி…… திரிஷா….

இவர்களாவது பரவாயில்லை. சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் நீத்து சந்திரா. உள்ளாடையே போடாமல் (?) மிகவும் குட்டையான பாவாடையும், முன்னழகு தெரியும் அளவுக்குத் தாராளமான அகலம் கொண்ட மேலாடையும் அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சியின் போது தன் ஆடை விலகியதைக் கூடக் கண்டுகொள்ளாமல், நாற்காலியில் கால் மீது கால் போட்டபடி அவர் அமர, எதிரிலிருந்த புகைப்படக்காரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ந்தனர்.
பலர் வைத்த கண் வாங்காமல் அவரது ஆடை விலகலையே பார்த்துக் கொண்டிருந்தனர்…. கேமராக்களின் பளிச் பளிச் ஒளிவெள்ளம்…. அப்படியும் மறைக்கவோ, எழுந்து அப்புறம் செல்லவோ நீத்து சந்திரா முயற்சிக்கவில்லை. படங்கள் சென்சார் செய்யப்படாமல் அப்படியே இணைய தளங்களிலும் பத்திரிகைகளிலும் வந்த பிறகு, அதுபற்றி கருத்துக் கூறிய நீத்து, “நான் உள்ளாடை அணிந்து வந்தால் என்ன… எப்படி வந்தால் என்ன? இதனால் யாருக்கு என்ன நஷ்டம்… வேலையப் பாருங்கள்….” என்று சிம்பிளாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

இங்கே எல்லா இடங்களும் டென்னிஸ் மைதானம் அல்ல… குட்டைப் பாவாடையுடன் குதித்து ஆடுவதற்கு.

சானியா மிர்சா கூட டென்னிஸ் மைதானத்தில் பெற்ற வெற்றிகளுக்காக மட்டும் பெரிய அளவில் புகழ் பெற்று விடவில்லை. இறுக்கமான குட்டைப் பாவாடை + பனியன் அணிந்து ஆடியதால்தான் அவருடைய பெயர் புயலாகப் பரவியது. மக்கள் ஆர்வமாக ஒருபோதும் அவருடைய விளையாட்டை ரசித்துப் பார்த்தது இல்லை. மைதானத்தில் அவர் செய்கிற சேட்டை, குட்டைப் பாவாடை, உள்ளாடை, நாக்கை உதடு மீது சுழற்றுவது போன்ற அவருடைய மேனரிசத்தைத்தான் ரசித்துப் பார்த்தனர்.
இப்போது அங்கேயும் கூட, கட்டாயமாகக் குட்டைப் பாவாடை அணிந்துதான் விளையாட வேண்டும் என்ற சர்வதேச பேட்மிட்டன் சம்மேளனத்தின் அறிவிப்பு– களத்தில் கவர்ச்சியை உருவாக்கும் நோக்கில் உடை விஷயத்தில் கடுமை காட்டுவதாக எழுந்த புகார்களை அடுத்துத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


அதுமாதிரி இன்னும்கூட சில குறிப்பிட்ட பள்ளிகளில், மாணவிகளுக்குக் குட்டைப் பாவாடைதான் யூனிபார்மாக இருக்கிறது. பலவகைகளிலும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய அந்தக் குட்டைப் பாவாடை முறையில் இனிமேலாவது மாற்றம் கொண்டுவரவேண்டும். அதன் காரணமாக அவர்கள் படுகிற அவஸ்தை அவ்ர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

குட்டைப் பாவாடைகளை மிகவும் விரும்பி அணிகிற பெண்கள் நிறைந்த இல்ங்கையிலேயே, பொது இடங்களில் பெண்கள் குட்டைப் பாவாடை அணிந்து நடமாடுவதற்குத் தடைவிதிக்கப்போவதாகச் செய்தி வருகிறது.

உலகிலேயே அதிக அளவில் முதலீடு செய்யப்படும் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்கூட, பணிபுரியும் ஊழியர்கள் மரியாதைக்குரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். கவர்ச்சியாக, செக்ஸியாக. முகம் சுழிக்க வைக்கும் ஆடைகளை அணியக் கூடாது என கட்டுப்பாடுகளை வங்கிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பெண் ஊழியர்கள் தங்கள் பின்புறம் எடுப்பாகத் தெரியும்படி குட்டை பாவாடை (ஸ்கர்ட்) அணியக் கூடாது, வெளியே தெரியும் அளவு மிக அடர்த்தியான கலர் உள்ளாடைகளை அணியக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அங்கெல்லாம் அப்படி. ஆனால்… கலாச்சாரத்தில், நாகரிகத்தில், பண்பாட்டில் — தொன்மைமிக்க நம் தேசத்தில்?…..

அந்தக் கிராமத்துத் தாயை ஒரு நாளைக்காவது பட்டணத்துக்கு அழைத்துவந்து, இந்தப் பண்பாட்டுச் சிதைவுகளைப் பார்க்கச் செய்ய வேண்டும்!.

No comments:

Post a Comment