2020 ஆம் ஆண்டில், நம் நாட்டில், அதி வேக இன்டர்நெட் இணைப்பு 60 கோடியாக உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அண்மையில், அரசால் வெளியிடப்பட்ட அடுத்த ஆண்டிற்கான தொலைதொடர்பு கொள்கை அறிவிப்பில் இந்த தகவல் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு, தங்க இடம், பொதுநலம், கல்வி போன்றவை போல, இன்டர்நெட் இணைப்பும் உரிமையுடையதாக மாற்றும் நோக்கில் இந்த கொள்கை வரைவு வடிவமைக்கப் பட்டுள்ளது.
கேட்டவுடன் தரும் வகையில் அதிவேக இன்டர்நெட் இணைப்பு 2015ல் சாத்தியமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ல் இன்டர்நெட் இணைப்பின் எண்ணிக்கையை 17.5 கோடியாகக் கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. டவுண்லோட் வேகம் குறைந்த பட்சம் விநாடிக்கு 2 மெகா பிட்ஸ் ஆகக் கொள்ளவும் திட்டமிடப் படுகிறது.கிராமப்புறங்களில், தொலைபேசி இணைப்பு உயர்ந்த அளவிற்கு இன்டர்நெட் இணைப்பு உயரவில்லை.
மிக மிகக் குறைவாக 1% கிராம மக்களே இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் தொலைபேசி பயன்பாடு 74% ஆக உள்ளது. இன்டர்நெட் பயன்பாட்டினைக் கிராமங்களுக்குக் கொண்டு செல்ல, 2014 ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமங்களுக்கும் ஆப்டிகல் இழை இணைப்பு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. வரும் மூன்று ஆண்டுகளில் இதற்கெனச் செலவு செய்திட ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment