Wednesday, December 21, 2011

ஏமாற்றும் காதலர்களே ஆப்பு தயாராகிவிட்டது!(வீடியோ இணைப்பு)


முந்தைய காலங்களில் நம்ம முன்னோடிகள் காதலுக்காக உயிரைக்கொடுத்து காதலை வாழவச்சாங்க இப்பல்லாம் காதல் எண்றாலே ஏமாற்றுவதுதான் எண்றாகிவிட்டது, இந்நொருத்தனுடன் நிண்டுகொண்டு நான் அப்பாவோட வெளியால போறன் என்று வேறொருத்தனுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, வீட்டில படுத்துக்கொண்டு நான் கோயில்ல இருக்கிறன் என்ன டிஸ்டப் பண்ணாதடா எண்டு உதார் விடுறது,தியேட்டர்களில் படம் பார்த்துக்கொண்டு நான் காலேஜ்ஜில இருக்கிறன் என கப்ஸா விடுறது இது எல்லாத்துக்கும் ஒரு பெரிய ஆப்பு சின்ன அளவில தயாராகிவிட்டது,

Insignia Little Buddy Tracker எனப்படும் இந்த ட்ராக்கிங் டிவைஸ் இந்த ஆப்புவைக்கும் தொழிலை மிகச்சிறப்பாகச் செய்கின்றது, முதலில் இந்த டிவைசை வாங்கிவிடவேண்டும், பின் இதற்கான பிரத்தியோக இணையத்தளத்தில்ச் சென்று பதிவுசெய்துகொள்ள வேண்டும், இந்த டிவைஸ் எங்கெல்லாம் போகிறதோ அந்த இடமெல்லாம் இணையத்தில் உள்ள வரைபடத்தில் மிகத்துல்லியமாக காண்பிக்கப்படும், பிறகென்ன கொண்டாட்டம்தானே!!!

இந்த ஆப்பை உங்கள் காதலனின் காலணிகளிலோ, அல்லது காதலியின் கைப்பையிலோ செருகி விட்டீர்கள் என்றால், அவர்கள் எங்கே செல்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள் என்பதெல்லாம் உங்கள் மொபைலில் உள்ள இணைய இனைப்பின் மூலமே தெரிந்துகொள்ளலாமே, ஏமாற்றும் காதலர்களே இனி உங்கள் பாடு திண்டாட்டம்தான்

எப்படி என்று கீழே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்…






No comments:

Post a Comment