‘நவீன ராமாயணாÕ என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனாவுடன் நயன்தாரா நடிக்க பிரபுதேவா சம்மதம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ராமராஜ்யம் படத்தில் என்.டி.பாலகிருஷ்ணா, ராமர் வேடத்தில் நடிக்க, சீதை வேடத்தில் நயன்தாரா நடித்தார். பிரபுதேவாவை திருமணம் செய்ய உள்ளதால் இப்படத்துக்கு பிறகு புதிய படங்கள் எதையும் நயன்தாரா ஒப்புக்கொள்ளவில்லை.
ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் புதிய இமேஜ் பெற்றிருக்கும் நயன்தாராவை தனது படத்தில் இன்னொரு கோணத்தில் சித்தரித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் ராம்கோபால் வர்மா. இது குறித்து பிரபுதேவாவிடம் தெரிவிக்க, முதலில் மறுத்த அவர், பின்னர் ராம் கோபால் வர்மாவுக்காக சம்மதம் தெரிவித்துவிட்டார். ராம்கோபால் வர்மா தயாரிக்கும் Ôநவீன ராமாயணாÕ படத்தில் ராவண ராஜு என்ற கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடிக்க அவரது மனைவி மண்டோதரியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் ராவணனே ஹீரோ என்பதால் ராமன், சீதை கதாபாத்திரங்களுக்கு நாடக நடிகர்களை தேர்வு செய்துள்ளனர்.
|
No comments:
Post a Comment