Wednesday, December 21, 2011

பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்


பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்த கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுகின்றன. மனைவியின் விருப்பங்களை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிவித்துள்ளனர் பாலியல் நிபுணர்கள். 

மென்மையாய் கசியும் இசை

படுக்கையறையில் இசைக்கு தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மென்மையான இசையை கசியவிட்டால் அது பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அதீத ஒலி எழுப்பும் இரைச்சலான இசையை ஒலிபரப்ப வேண்டாம். அது சிக்கலை ஏற்படுத்திவிடும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் படுக்கையறையின் முக்கிய எதிரியே செல்போன்தான். எனவே படுக்கையறைக்கு செல்லும் முன் செல்போனை ஆஃப் செய்ய வேண்டியதுதான் முதல் பணி. இல்லையெனில் படுக்கையறையில் தொண தொணக்கும் செல்போன் ஒலியும், அதை தொடர்ந்து உங்களின் பேச்சும் மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடுமாம். பிறகு என்ன செய்தாலும் சமாதானப்படுத்த முடியாது என்கின்றனர் உளவியலாளர்கள்.

அனுமதி அவசியம்

தனக்குரிய பெண்ணாய் இருந்தாலும் அனுமதி பெறவேண்டியது அவசியம் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று உன்னை முத்தமிடலாமா? இன்று உனக்கு சம்மதமா? இப்படி ஏதாவது கேட்டு வைப்பது நல்லது என்கின்றனர் உளவியலாளர்கள். 

தொடக்கம் போல இறுதி

முத்தம் என்பது உறவுக்கான திறவுகோல் என்பார்கள். நெற்றியில் தொடங்கி கண்கள், கண்ணம், முகவாய், இதழ் என படிப்பாய் உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். தொடக்கத்தைப்போலவே முடிவிலும் முத்தம் வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு. சுவாசப் புத்துணர்ச்சியோடு முத்தம் தரவேண்டும். 

செல்லப் பெயர் சூட்டுங்கள்

படுக்கையறையில் செல்லப் பெயர் வைத்து அழைக்க வேண்டும் என்றுதான் அநேகம் பேர் எதிர்பார்க்கின்றனராம். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சவேண்டும். உடலை வருடவேண்டும், கொண்டாட வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். 

பெண்களுக்கு மூட் இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருடுங்கள். அந்த இதமான வருடல் பெண்மையின் மென்மையை கிளறச்செய்யும். 

திருப்தியுறச் செய்யுங்கள்

ஆண்களின் ஆசை சில நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் பெண்கள் அப்படியல்ல. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சிலநிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாக நிகழும். எனவே திருப்தியுறும் வரை அவர்களுக்கு தேவையானவைகளை செய்யவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

No comments:

Post a Comment