மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னுதானே மக்களும் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. மக்களோட ஆசையை நிறைவேத்தறதுதானே முதல்வரோட முதல் வேலை. அதனால, தலைமைச் செயலகத்தை மாற்றம் செய்தீங்க. அண்ணா நூலகததை மாற்றம் செய்யப் போறேன்னு அறிவிப்பு செஞ்ச்சீங்க. பஸ் கட்டணத்தில மாற்றம் செய்தீங்க. பால் விலையில மாற்றம் செய்தீங்க. கரண்டு பில்லிலும் மாற்றம் கொண்டுவரப் போறீங்க……. அதெல்லாம் விடுங்க மேடம், சும்மா கொசுறு மேட்டர்…..
இப்ப நீங்க கொடநாடு கிளம்பறதாக் கேள்விப்பட்டோம். (எல்லாரும் கோடையிலதான் அங்கே போவாங்க….. நீங்க மட்டும் குளிர் காலத்தில அங்கே போறீங்களே….. உங்களைப் பத்தி ஒண்ணுமே புரிஞ்ச்சுக்க முடியலே மேடம்). காஷ்மீர் மாதிரி அப்படியே தலைநகரை கோட்டையில ஆறு மாசம், கொடநாட்டில ஆறு மாசம்னு மாற்றம் செய்கிற ஐடியா ஏதும் இருக்குதுங்களா மேடம்?
இதுவரை இல்லாத அளவுக்குப் பஸ் கட்டணத்தை இரண்டு மடங்கு அதிகமாக உயர்த்திப் புதிய வரலாறு படைச்சிருக்கிற நீங்க, வேலைக்காகப் பஸ்சுல தினமும் 50 கி.மீ., 60 கி.மீ., தூரம் வரைக்கும் போயிட்டு வருகிற ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் சிரமப்படாமல் பஸ் டிக்கெட் எடுப்பதற்கு வசதியாக, கூட்டுறவு வங்கிகளில் “பஸ் டிக்கெட் லோன்” கொடுக்கும் திட்டத்தை ஆரம்பிக்கிற ஐடியா எதையாவது கைவசம் வெச்சிருக்கீங்களா ஜெயலலிதா மேடம்?
நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு அமைச்சர், விலைவாசி ஏற்றும் துறை அமைச்சர், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்யும் துறை அமைச்சர், கருணாநிதியின் குடும்ப விவகாரங்களைக் கவனிக்கும் துறை அமைச்சர், விஜய்காந்த் கட்சியை உடைக்கும் துறை அமைச்சர் போன்ற பதவிகளை இன்னும் காலியாகவே வைத்திருக்கிறீர்களே……. அவைகளை உடனடியாக நிரப்பும் ஐடியா ஏதும் இருக்கா மேடம்?
பொதுவாகவே, உங்ககிட்ட யாரும் கேள்வி கேட்டா அது உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. பேட்டி கொடுக்கும்போது கூட நிருபர்கள் எக்ஸ்ட்ரா இரண்டு கேள்வி கேட்டு விட்டாலே முறைப்பீங்க…. அதெப்படி ஜெயலலிதா மேடம், பெங்களூருக்குப் போய் ஆயிரம் கேள்விகளுக்கு மேல அவரு பாட்டுக்குக் கேட்டுக்கிட்டே இருக்காரு….. நீங்களும் பதில் சொல்லிக்கிட்டே இருக்கீங்க. கட்டாயமா உங்களுக்குக் கோபம் கன்னா பின்னான்னு வந்திருக்குமே. அவரு மேல ஏதாவது நடவடிக்கை எடுக்கிற ஐடியா இப்போதைக்கு இருக்குதா மேடம்?
|
No comments:
Post a Comment