பாடசாலை விடுமுறைதினமான நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவி முன் நிர்வாணமாக இன்று அவரை அழைத்த இராணுவச் சிப்பாய்க்கு பொதுமக்கள் கல்லடி வழங்கியுள்ளனர்.
அளவெட்டிப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மேற்படி மாணவியை முகாமிலிருந்த இராணுவச் சிப்பாய் இவ்வாறு நிர்வாணமாக நின்று கூப்பிட்டு்ள்ளார்.
இச் சம்பவத்தையடுத்து அப் பகுதியில் திரண்ட பொதுமக்களை ஏனைய இராணுவத்தினர் தலையிட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் இராணுவப் பொறுப்பதிகாரியிடம் அம் மாணவினிய் பெற்றோர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வழமையாக அப் பகுதியில் பாடசாலை விட்டு வெளியேறும் மாணவிகளுடன் தகாத வார்த்தைப் பிரயோகம் மற்றும் அரைகுறை ஆடைகளுடன் நின்று பாலியல் சேட்டையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ok
|
No comments:
Post a Comment