Friday, December 9, 2011

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 23

 ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஏறுமுகமும் இறங்குமுகமும்!

ஏறுமுகச் செய்தி ஒன்றுடன் இந்த வார அலசலைத் தொடங்கலாம். இதைத் தவிர, மற்ற அனைத்துமே இறங்குமுகங்களே.

ஏறுமுகச் செய்தியின் ஹீரோ க்ரூப்பான் (groupon). இந்தத் தொடரின் வாசகர்களுக்கு அறிமுகமான நிறுவனம்தான். நுகர்வோர் ஒன்று சேர்ந்தால், அவர்களது பேரம் பேசும் திறன் அதிகமாகும் என்ற அடிப் படையில் கட்டப்பட்ட க்ரூப்பானை ஈயடிச் சான் காப்பியடித்து, உலகம் எங்கும் அதே மாடலில் பல வலைதளச் சேவைகள் தொடங்கப்பட்டாலும், க்ரூப்பானின் வளர்ச்சி குறையவில்லை. இதற்கு முக்கியக் காரணம் வேகம்.

2008-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை வெகு விரைவில் மிகப் பெரிய அளவில் தொழில் முதலீட்டைப் பெற்றுக்கொண்டு பிரமாண்டமாக வளர்த்த ஆண்ட்ரு மேசனுக்கு 31 வயது ஆகிறது. தங்களைக் காப்பியடித்துத் தொடரும் நிறுவனங்களில் எவையெல்லாம் லாபகர மாக நடத்தப்படுகிறதோ அவற்றை வாங்கி விடும் உத்தி, க்ரூப்பானின் கிடுகிடு வளர்ச் சிக்கு ஒரு முக்கியக் காரணம்.

மூன்று வருடங்களுக்குள் 10 ஆயிரம் பேர் பணிபுரியும் நிறுவனமாக மாறி இருக்கும் க்ரூப்பான், சென்ற வாரத்தில் பங்குச்சந்தையில் நுழைந்தது. ஆண்ட்ரு மேசன் உட்பட க்ருப்பானின் முதலீட்டா ளர்கள் நான்கு பேர் ஒரே நாளில் பில்லியனர்கள் ஆனார்கள்!

இனி, இறங்குமுகச் செய்தி கள்...

முதலில் வருவது ஃபேஸ்புக்!

சமூக வலைதளப் பிரிவில் இன்னும் தொடர்ந்து மன்னனாக இருப்பது ஃபேஸ்புக்தான். 850 மில்லியன் பயனீட்டாளர்களைக்கொண்டிருக்கும் இந்தத் தளத்தின் ஊடக வலிமை தொலைக்காட்சிக்கு நிகரானது. இங்கிலாந்தில் எடுக் கப்பட்ட சர்வே, 'டி.வி. சேனல் பார்ப்பதை விட, மக்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள்’ என்கிறது. ஆனால், ஃபேஸ்புக்கின் சவால்... தொலைக்காட்சிக்கு இணையாக உலகின் பிராண்ட் நிறுவனங்கள் ஃபேஸ்புக்கை விளம்பரத்துக்குப் பயன்படுத்தவில்லை என்பது. இந்த வருடம் ஃபேஸ்புக்குக்குக் கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் வருமானம் வந்திருப்பது உண்மைதான். ஆனால், இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் விளம்பரங்களில் இருந்து வந்திருக்கும் வருமானம் மட்டுமே. இதை நிவர்த்திசெய்து பெரிய நிறுவனங்களின் விளம்பர பட்ஜெட்டில் நுழையலாம் என ஃபேஸ்புக் முயற்சி செய்ய, விளைவோ தலைகீழாகச் சென்றபடி இருக்கிறது. ஃபேஸ்புக்கின் பக்கங்கள் என்ற வசதியைப் பயன்படுத்தி, எந்த நிறுவனமும் தங்களது பயனீட்டாளர்களைத் தொடர்புகொள்ள முடியும். http://www.facebook.com/pages/browser.php உரலிக்குச் சென்றால், கோகோ கோலா, டிஸ்னியில் தொடங்கி உலகின் பிரபல பிராண்ட் அனைத்தும் இலவசமாகவே தமது பக்கங்களை விளம்பரமாகப் பயன்படுத்திக்கொள்வது தெரியும். உதாரணத் துக்கு, 2012-ல் ஃபோர்டு வெளியிடப் போகும் தனது ஃபோகஸ் மாடலுக்காக உருவாக்கப்பட்ட பக்கத்தில் இந்தக் கட்டுரை எழுதும் நாளில் 3 லட்சத் துக்கும் அதிகமானோர் விரும்பி இணைந்திருக்கிறார்கள் (www.face book.com/fordfocus).

இந்த கார் மாடலைப் பற்றி கேள்விகள் கேட்கிறார்கள்; புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைக் கண்டு ரசிக்கிறார்கள். இதையெல்லாம் சாத்தியமாக்கும் ஃபேஸ் புக்குக்கு இதில் இருந்து எந்த லாபமும் இல்லை. இது இப்படியே தொடர்ந்தால், ஃபேஸ்புக்கின் ஊடகமாகும் கனவு கனவாக மட்டுமே தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை!


அடுத்து, இந்த வாரத்தின் அதோகதியான நெட்ஃப்ளிக்ஸ் (Netflix). வீட்டில் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்றால், கடைக்குச் சென்று வாடகைக்கு வீடியோ கேசட் அல்லது டி.வி.டி. எடுத்து வர வேண்டும் என்பதே சில வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமை. அமெரிக்காவில் தெருவுக்கு தெரு 'பிளாக்பஸ்டர்’ கடைகளை ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்திருக்கலாம். இந்த மாடலை மாற்றி திரைப்படங்கள் உங்கள் வீடு தேடி வரும்; அதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். பார்த்து முடித்து, அதே உரையில் வைத்து தபாலில் போட்டு விட்டால் போதும். எத்தனை திரைப்படங்கள் வேண்டுமோ, அதற்கேற்படி மாத சந்தா திட்டத்தில் மட்டும் இருக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடலுக்கு மகத்தான வரவேற்பு. சில மாதங்களிலேயே பல மில்லியன் பயனீட்டாளர்கள் சேர்ந்துவிட, அதைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட முக்கியமான அனைத்துத் திரைப்பட நிறுவனங்களையும் தங்களுக்கு உரிமை கொடுக்கும்படி வளர்ந்தது நெட்ஃப்ளிக்ஸ். கடந்த சில மாதங்கள்வரை பயனீட்டாளர்களிடமும் முதலீட்டாளர் களிடமும் ஓஹோவென வாங்கியிருந்த பெயரை அவசரக்குடுக்கை நடவடிக்கை ஒன்றால் நிவர்த்தி செய்ய முடியாத வகை யில் கெடுத்துக்கொண்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொள்ளா மல் / அறிவிக்காமல், தடாலடியாகத் தங்க ளது சேவைக் கட்டணத்தை அதிகரித்தது தான் அது.

விளம்பரங்கள் இல்லாமல், சந்தாதாரர்களிடம் இருந்து வசூலிக்கப்படுவது மட்டுமே வருமானமாக இருக்கும் நிறுவனம், தங்களது சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமானால், பயனீட்டாளர்களிடம் அவர்களது ஒட்டுறவு (stickiness) மிகப் பெரிய அளவில் இருக்க வேண்டும். விலை அதிகரித்த சில வாரங்களிலேயே மில்லியன் கணக்கில் பயனீட்டாளர்கள் விலக... நெட்ஃப்ளிக்ஸின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறி!

கடைசியாக 'மேகக்கணினியம்’. மிகப் பிரகாசமாகத் தொடங்கிய இந்த கணினிப் பிரிவின் ஆதிக்கம் அத்தனை பலமாக இருக்கப்போவதாகத் தெரிய வில்லை. சில வாரங்களுக்கு முன்னால் கார்ட்னர் (Gartner) நிறுவனம் வெளியிட்டு இருக்கும் ரிப்போர்ட்டில் மேகக்கணினி யத்துக்கு 10-வது இடம். இதே ரிப்போர்ட்டில் கடந்த வருடம் மேகக்கணினியம் முதலிடம் வகித்தது!

என்ன நடக்கிறது இங்கே? அடுத்த வாரத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment